விநோதினி, வித்யா, நான், நீ..

புதிய தலைமுறையில் நேற்று வித்யா சம்பவம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் ஆசிட் அமிலத்தை ஒரு கடையில் எவ்வளவு எளிதாக வாங்கிடலாம் என்ற கோப்புக் காட்சியும் ரகசியமாக படம் பிடித்துக் காட்டப்பட்டது. மனுஷ்யபுத்திரனின் கூற்றுப்படி, இக்காட்சியானது இரண்டுவிதமாகப் பார்க்கப்படும். எளிதாகக் கிடைக்கும் இவ்வகை அமிலத்தை தடை செய்யக்கூறும் கண்ணோட்டம் முதலாவது. மற்றொன்று, “இவ்வளவு எளிதாகக் கிடைக்குமா.. நாமும் இதையே உபயோகித்துவிட வேண்டியதுதான்“ என்ற மனநோயாளியின் கண்ணோட்டம். ஒரு சகமனுஷியை, தனக்கு கிடைக்காத ஒரு பொருளாய், அதன் மீது வன்மம் கொண்டு பழிதீர்த்துக்கொள்ளும் மனிதநேயமிக்க செயலை, ஆணாதிக்கம் என்றும் மிருகத்தனம் என்றும் ஆளாளுக்கு வசைபாடி புகழாரம் சூட்டிவிட்டு, அவரவர்தம் பணிகளில் ஆழ்ந்துவிடுவது, காலங்காலமாக நடந்தேறிக்கொண்டிருப்பது தான். ஆண் குழந்தை புத்தகம் படிப்பது போலவும், பெண் குழந்தை காய் நறுக்குவது போலவுமான படங்கள் இன்றளவும் பாடப்புத்தகத்தில் இடம்பெறத்தான் செய்கின்றன. எவ்வளவுதான் உயரவே பறந்தாலும் பெண் என்பவளுக்கான வரையறைக் கோடுகள் ஒரு வட்டத்திற்குள்ளேயே அடங்கிவிடுகின்றன.. அல்லது அடங்கவேண்...