விநோதினி, வித்யா, நான், நீ..
புதிய
தலைமுறையில் நேற்று வித்யா சம்பவம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் ஆசிட்
அமிலத்தை ஒரு கடையில் எவ்வளவு எளிதாக வாங்கிடலாம் என்ற கோப்புக் காட்சியும்
ரகசியமாக படம் பிடித்துக் காட்டப்பட்டது. மனுஷ்யபுத்திரனின் கூற்றுப்படி,
இக்காட்சியானது இரண்டுவிதமாகப் பார்க்கப்படும். எளிதாகக் கிடைக்கும் இவ்வகை
அமிலத்தை தடை செய்யக்கூறும் கண்ணோட்டம் முதலாவது. மற்றொன்று, “இவ்வளவு எளிதாகக்
கிடைக்குமா.. நாமும் இதையே உபயோகித்துவிட வேண்டியதுதான்“ என்ற மனநோயாளியின் கண்ணோட்டம்.
ஒரு
சகமனுஷியை, தனக்கு கிடைக்காத ஒரு பொருளாய், அதன் மீது வன்மம் கொண்டு
பழிதீர்த்துக்கொள்ளும் மனிதநேயமிக்க செயலை, ஆணாதிக்கம் என்றும் மிருகத்தனம்
என்றும் ஆளாளுக்கு வசைபாடி புகழாரம் சூட்டிவிட்டு, அவரவர்தம் பணிகளில்
ஆழ்ந்துவிடுவது, காலங்காலமாக நடந்தேறிக்கொண்டிருப்பது தான்.
ஆண்
குழந்தை புத்தகம் படிப்பது போலவும், பெண் குழந்தை காய் நறுக்குவது போலவுமான
படங்கள் இன்றளவும் பாடப்புத்தகத்தில் இடம்பெறத்தான் செய்கின்றன. எவ்வளவுதான் உயரவே
பறந்தாலும் பெண் என்பவளுக்கான வரையறைக் கோடுகள் ஒரு வட்டத்திற்குள்ளேயே
அடங்கிவிடுகின்றன.. அல்லது அடங்கவேண்டுமென நினைக்கப்படுகின்றன. இவள் எனக்காகப்
படைக்கப்பட்டவள், எனக்குச் சொந்தமானவள் என்கிற எண்ணம் தோன்றும்போதே தன்னிச்சையான
ஒருவகை ஆதிக்க மனப்பான்மை வேரூன்றி விடுகிறது.
தன்
வாழ்வின் மிச்ச நாட்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு துணை தேவை என்பதன் பூர்த்தியே பெண்
என்பது பெரும்பாலும் புரியப்படுவதில்லை. தன்னையோ தன் குடும்பத்தையோ
கவனித்துக்கொள்ளவே அவள் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பது தான் முன்னிலை வகிக்கிறது.
இந்த
வித்யாவும் வினோதினியும் நமக்கருகிலோ அல்லது நம்முடனேயோ, ஏன் நாமாகக்கூட இருக்கக்கூடும் அடுத்தொரு குரூரச் சம்பவம்,
இவர்களை மறக்கடிக்கவும் செய்யலாம். நாமும் மறந்துவிட்டு வழக்கமான பணிகளில்
ஈடுபடுவோமாக..
நாடும்
நாட்டு மக்களும் நாசமாய்ப் போக வாழ்த்துக்கள்..!
.
.
Comments
கோபம் கொப்பளிக்கும் வரிகள்
ithu maaranumna namma veetla irunthe maathanum..aan kulanthaigalai penkulanthaigalai vidai uyarathil vaikaamal sarisamam entru kulanthaigalin paarvaiyai maatruvathilirunthu thodangalam maatrathai..
ithu maaranumna namma veetla irunthe maathanum..aan kulanthaigalai penkulanthaigalai vidai uyarathil vaikaamal sarisamam entru kulanthaigalin paarvaiyai maatruvathilirunthu thodangalam maatrathai..