முத்தங்கள் எனும் முழுமைகள்..


தந்தையின் பிணைப்பைச் சொல்லும்
உச்சிமுகர்ந்த முத்தங்கள்..!
தாயின் நெருக்கத்தை சொல்லும்
கன்னம் கொஞ்சும் முத்தங்கள்..!
தூரங்களின் துயர் துடைக்கும்
தொலைபேசி முத்தங்கள்..!
காற்றோடு நேசங்களும் கலந்துவிடும்
பறக்கும் முத்தங்கள்..!
காதலின் கிறக்கங்கள் பறைசாற்றும்
காதோர வெப்ப முத்தங்கள்..!
ஏக்கங்களும் ஏகாந்தங்களும் கலந்தவை
இதழ் கவ்வும் முத்தங்கள்..!
வரையறைகள் ஏதுமில்லாதவை
மோனநிலை முத்தங்கள்..!
உறவுகளின் பிணைப்பை உறுதிசெய்யும்
உள்ளுணர்வாய் எப்போதும் முத்தங்கள்..!
.
.

Comments

முத்தத்தின் வகைகளும்
தன்மையும் சொல்லிப்போனவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
Avainayagan said…
"தூரங்களின் துயர் துடைக்கும்
தொலைபேசி முத்தங்கள்..!"
அருமையான கருத்துள்ள வரிகள். அழகிய கவிதை ரசித்தேன்
Avainayagan said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..