ராஜா ராணி..


ராஜா ராணி பாத்தாச்சு. பெருசா விமர்சனம் எழுதுற அளவுக்கு எதுவுமில்ல. தேம்பித் தேம்பி அழவைக்காம, ஹைடெக் காதல் கதை சொல்லிருக்காங்க. படத்துல எனக்குப் பிடிச்ச முக்கியமான விஷயம்.. சத்யராஜ் கதாப்பாத்திரம். ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறியா?னு மகளைப் பார்த்து அசால்ட்டா கேட்கும் காட்சி செம.. மகளுடன் சேர்ந்து அழும்போது மனசுல நிக்குறார்.
நயனுக்கு கொஞ்சம் மேக்கப் கம்மி பண்ணிருக்கலாம். தலைக்குமேல அந்த பன் ஹேர்ஸ்டைல் பொருந்தவேயில்ல. ஆர்யாவுக்கோ நயன்தாராவுக்கோ.. நடிப்புக்குனு பெருசா வேலையில்ல. ஆளுக்கொரு பக்கம் உம்முனு இருந்தா போதும்னு அட்லீ சொல்லிட்டார் போல. மௌன ராகம் மாதிரி இந்தப் படம் நிச்சயம் இல்ல. அதுல மோகனுக்கும் ரேவதிக்கும் நிறைய காட்சிகள்.. கெமிஸ்ட்ரி.. பயாலஜினு மெலிதான காதல் இருக்கும். மௌன ராகத்துல வர்ற மாதிரி, முகம் பார்த்து காதல் ததும்புற, தடுமாறுற காட்சிகள் இதுல மிஸ்ஸிங்.
எங்கேயும் எப்போதும் படத்துலருந்து இன்னும் வெளிவராத ஜெய்.. வழக்கமான சந்தானம்..!
காதல்ல தோல்வி அடைஞ்சுருக்காங்க..ங்குற ஒரே காரணத்தால மட்டும் ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு காதல் வருதுனு காட்டியிருக்காங்க. அது பரிதாபமா? காதலா?னு குழப்பமா இருக்கு. ப்ளாஷ்பேக் கதைல காட்டின கவனத்தைவிட, ஆர்யா, நயன்தாரா தொடர்பான காட்சியமைப்பு இன்னும் அழுத்தமா சொல்லிருக்கலாம்.
சராசரி மொக்கை படங்களுக்கு இது பரவாயில்ல. ஆனாலும் ஏதோ மிஸ்ஸிங்.
.


Comments

யாரோ முருக்கு திங்கும் போது நாக்கை கடிச்சிட்டாங்க போலயே :)

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்