“Highway” – என் பார்வையில்..

Stockhome syndrome என்பதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழில் அமர்க்களம் முதலிய சில படங்களில் பார்த்துப் பழகிய “தம்மைக் கடத்தியவர்கள் மீதே தோன்றும் ஈடுபாடு“ என்கிற விஷயம் தான். சாமான்ய வாழ்க்கைக்கு ஏங்கும் பணக்காரவீட்டுப் பெண்ணாய் Alia Bhatt . எதிர்பாராதவிதமாய் கடத்தப்பட்டு, அழுது, தப்பிக்க முயற்சி செய்து, பின் கொஞ்சம் கொஞ்சமாய் சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்து, கடத்தியவரையே பிடித்துப்போய், “எதுவுமே வேணாம். நீ போதும்“ எனும் கதாப்பாத்திரம். அழுகை மட்டும் நல்லா வருது அம்மணிக்கு. கதாப்பாத்திரத்தின் அழுத்தத்தை இன்னும் தெளிவாக உணர்ந்து நடித்திருக்கலாம். தேர்ந்த முகபாவங்கள் மூலமாகவே ஸ்கோப் செய்யக்கூடிய காட்சிகளில் அதற்கான முக்கியத்துவத்தை அறியாது அலட்சியமாய் தவறவிட்டிருக்கிறார். Randheep Hooda சிரிச்சா நல்லாயிருக்கார். ஆனா சோதனைக்குனே இந்தப் படத்துல ஒரே ஒரு காட்சில தான் சிரிக்கிறார்.. வசனமும் ஏகத்துக்கு கம்மி. அதிகமாய் அவர் பேசியது “வாய மூடு..“ “உள்ள போ..“ “பேசாம இரு..“ அவ்ளோ தான். கதாப்பாத்திரம் உணர்ந்து நடிச்சிருக்கார்ங்குறதால கொஞ்சம் ஆறுதல். தனக்கென உணவு தயார் செய்யும் ஆலிய...