துருப்பிடித்த நேயம்..!


சடுதியில் விலகிச்செல்லும்
பைத்தியக்காரனின் அருகாமையென
இழந்துகொண்டிருக்கிறோம் நமக்கான இயல்புகளை..!

நின்று நிதானமாய் எதையும் ரசித்திட
அவசியமோ அவகாசமோ ஏதுமிருப்பதில்லை..!

பக்கத்து இருக்கைக் குழந்தையின் அழுகையில்
முகஞ்சுளிப்பதில் தோற்றுப்போகிறது
ஆதி மனிதனின் ஆசுவாசங்கள்...!

வண்ணத்துப்பூச்சியை மீண்டும் புழுவாக்கும் முயற்சியில்
லயித்துக்கிடக்குமித் துருப்பிடித்த நேயத்தில்
துர்நாற்றமடிக்கிறது தேங்கிக்கிடக்கும் ரத்தக்கறைகள்..!

காயங்களைக் குத்திக்கிழிக்கும் கோணிகளைக்கொண்டு
வேறேதும் செய்வதற்கில்லை நாம்..!

வாழ்விற்கான சாத்தியங்களில் தொலைந்துபோகிறது

வாழ்வதற்கான முகாந்திரங்கள்..!!
.
.

Comments

என்னது மாதிரியா?? ஏன்? ஏன்? இப்படி இந்திரா சார்...
எல்லா வகையிலும் வாழ்க்கையின் இயல்புகளிலிருந்து விலகியே சென்றுக்கொண்டிருக்கிறோம்...


இனி இயல்பான வாழ்க்கை கடினமே...
ஆர்வா said…
கலக்குங்க...
Unknown said…
வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்