தீராத பசிகொண்ட விலங்கு..

வாழ்வின் ஸ்வாரஸ்யமான அனுபவங்களை தொகுப்பாக வெளியிடுவதென்பது எழுத்தாளர்களுக்கேயுரிய பெருஞ்சவால். நூலிழையில் அது தற்பெருமையாகவோ, சுயசொரிதலாகவோ அமைந்துவிடக்கூடும். இதைத் தவிர்த்திடவே சிறுகதைத் தொகுப்புகள் என்ற பேர்வையில் ஆங்காங்கே அரிதாரமிட்டு சம்பவங்களை எழுதித் தள்ளுவர் சிலர். அவற்றில் பத்தில் நான்கு கதைகள் படிப்பவர் மனதை ஆட்கொண்டாலே பெரிய விஷயம் தான்.
வாழ்வில் இடம்பெறும் மிகச்சாதாரண சம்பவங்களில் கிடைக்கும் அசாதாரண அனுபவங்களின் தொகுப்புகளுக்கு பாவண்ணன் எழுதிய “தீராத பசி கொண்ட விலங்கு“ நிச்சயம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதில் இடம்பெறுபவர்கள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சட்டென காணாமற் போகும் மனதில் பதிந்த மனிதர்கள் தான். தினமும் நாம் கடந்து செல்லும் மரத்திலிருந்து மனிதர்கள் வரை ஏதோ ஒன்று நம்மை எந்தவகையிலோ பாதித்து பதிந்து செல்கின்றன. அவற்றிற்கான தேடல்களும் ஏக்கங்களும் புத்தகம் முழுக்க நிறைந்து கலந்திருக்கின்றது.
இருபத்தி மூன்று (வெவ்வேறு) சம்பவங்களின் தொகுப்புகள் அடங்கிய இப்புத்தகத்தில் என்னை இரண்டாவதாய் படிக்கத் தூண்டிய பகுதியெனில் “நெருங்க முடியா இடைவெளி“ தான். தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பு.. ஸ்பரிசங்கள்.. நாளாக நாளாக எங்கனம் மாற்றம் பெறுகிறதென்பதை தன் எழுத்துக்களின் வர்ணனையில் அழகாய் காட்டியிருப்பார்.
முதன் முதலாய் பள்ளியில் சேர்க்கும்போது கட்டிப்பிடித்தவாறு முத்தமிட்டு மார்போடு அணைத்துத் தூக்கிச் செல்லும் மகன் பின் பால்யம் மாற்றம்பெறுகையில் பறக்கும் முத்தமுடனும் கைகுலுக்கலுடனும்.. பின் சலூனுக்கு மட்டும் உடன்வருபவனாயும், வளர்ந்தபின் எதிர்பாராமல் கிடைத்த தொடுகையில் ஆசையாய் உள்ளங்கை பிடிக்க, உதறிவிட்டு தொலைக்காட்சி பார்ப்பதாய்.. என குழந்தைகளின் மீதான பெற்றோரின் ஏக்கங்களை ஒப்பனையின்றி வழங்கியிருப்பார். “எனக்கும் அவன் கைக்கும் இரண்டடி தூரம்தான். ஆனாலும் அது இனி நெருங்கவே முடியாத இடைவெளியாகிப் போனது“ என்று ஏக்கமாய் விவரிப்பது வலிகளின் யதார்த்தம்.
நடைமுறைகளை உவமையெனும் பேரில் மிகைப்படுத்தாமல், அப்படியே பதிந்தமைக்கு எழுத்தாளருக்கு என் பாராட்டுக்கள்.

தீராத பசிகொண்ட விலங்கு
பாவண்ணன்
புதுமைப்பித்தன் பதிப்பகம்

.

Comments

ரொம்ப நாளாச்சில்ல..

இந்தப் பக்கமா வந்தேன்....
அப்படியே எட்டி பார்த்துட்டு போலமுன்னு வந்தேனுங்க...

தங்கள்
பழைய பதிவுகளையெல்லாம்
தோண்டி துருவி பார்த்துட்டு...
அப்படியே
அன்று நானிட்ட கருத்துகளையும்
படிச்சேன்...

எப்போதுமே...

பழையதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்...

அது

“பழைது” என்று சொல்லப்படும் “பழையசாதம்”...

சட்டியில் ஊறவைத்த “கம்பக்கூழ்”...

என் பழைய “அம்மா”... (பால்யபருவ அம்மா)

என் பழைய நண்பர்கள் (வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி... வெயிலோடு மல்லுக்கட்டி சுற்றிய அந்த பால்ய நண்பர்கள்)....

இதெல்லாம்...

என்றும் புதிது... எனக்கு...

அதைப்போல...

தங்கள்
முதல் பதிவு முதல் சுமார் 50வது பதிவு வரை அப்படியே பார்த்துட்டுப் போலான்னு வந்தேன்...

பார்த்தேன்...
ரசித்தேன்...

விடைபெறுகிறேன்...

நட்புடன்...
காஞ்சி முரளி...

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்