செல்போன்..
“என்னக்கா இந்நேரம் வந்துருக்கீங்க?“ சட்டை பட்டனை போட்டுக்கொண்டே கேட்ட பக்கத்துவீட்டு சாரதியிடம் தயங்கியபடி விஷயத்தை சொன்னேன். சிரிப்பா ஏளனமாவெனப் புரிந்துகொள்ள முடியாதபடி புன்னகைத்தான். “இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்கக்கா. கண்டுக்காம விட்ருங்க“ சொன்னவனை நிமிர்ந்து பார்த்தேன். இவனுக்கு நான்பட்ட அவமானம் புரியவில்லை. “உன்னால எனக்கு உதவ முடியுமா முடியாதானு மட்டும் சொல்லு“ “ம்ம் சரிங்கக்கா. உங்களுக்காக பண்றேன். ஆனா எனக்கென்னவோ இது தேவையில்லாத வேலைனு தோணுது.“ கடைசி வார்த்தையை கவனிக்காதவளாய் “எட்டு மணிக்கு வாங்கிவச்சுடுவேன். சரியா காலேல எட்டரைக்கு பஸ் ஸ்டாண்ட் வந்துடு.“ என்றவாறு வீடுவந்து சேர்ந்தேன். இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. ச்சே.. எல்லாம் அந்த சந்திராவால் வந்தவினை. நான்குநாட்களாக வேண்டுமென்றே சீண்டிக்கொண்டிருந்தவள் இன்று நேரடியாகவே பேசிவிட்டாள். இருக்கட்டும். நாளைக்கு நான் யார்னு காட்டுறேன். மறுநாள் சரியாய் ஏழு மணிக்கு செல்லதுரை வீட்டுக் கதவை தட்டினேன். அவர் மனைவியின் பலத்த சிபாரிசு என்பதால் அதிகம் கேள்வி கேட்காமல், பொருள் பத்திரம் என்றும் சாயந்திரம் ஒப்படைத்