நீ இல்லாத நீ

நீயா இது? என் ஸ்பரிசம் பட்டவுடன் உன் கன்னங்கள் சிவக்கவில்லையே.. எனைப் பார்த்த பரவசத்தில் உன் கண்கள் படபடக்கவில்லையே.. நான் பற்றியவுடன் வெட்கப்பட்டு உன் கைகள் உதறவில்லையே.. நான் கண்டுகொண்டதை அறிந்து நாணி உன் கால்கள் ஓடவில்லையே.. முத்தம் கேட்டவுடன் உன் இதழ்கள் வெட்கப்படவில்லையே.. என்னதான் நான் காதலை வெளிப்படுத்தினாலும் சலனமே இல்லாமல் இருக்கிறாயே.. கண்டிப்பாக இது நீ இல்லை. நீயே வைத்துக்கொள் உன் புகைப்படத்தை.