பெண்களைக் கவர சில டிப்ஸ்
நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்..

இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்)

பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில” ”அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல)

இதோ உங்களுக்கு சில டிப்ஸ்..

1. ஆக்டிவா இருக்கணும்

மந்துனு எதையோ பறிகொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது)

2. ஸ்மைலிங் ஃபேஸ்

என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சிரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.)

3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது

ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந்தா பண்ணிகிட்டு இருக்க கூடாது. முக்கியமா தற்பெருமை ரொம்ப பேச கூடாது. நான், என் ஃப்ரண்ஸ், எங்க அம்மா அப்டி இப்டினு சுயபுராணம் பாட்றவன கண்டாலே பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அவங்களா கேட்டா மட்டும் சொல்லுங்க போதும். அதே மாதிரி தேவையில்லாம சத்தமா பேசி அனாவசியமா சிரிக்கிறது, வளியிறதெல்லாம் கூடாது. (அதுக்காக சிரிப்பை அடக்குறேன் பேர்வழினு சொதப்பிடாதீங்க..)

4. உடைகள்

பொதுவா (ஆண்கள்) சாதாரணமா டிரஸ் பண்ணினாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும். எங்கிட்டயும் உடை இருக்குனு காட்றதுக்காக உங்க உடம்புக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாம உடுத்த வேணாம். கேஷ்வலா டிரஸ் பண்ணுங்க. (ஆனா பொண்ணுங்க மட்டும் அலங்காரமா டிரஸ் பண்ணுவோம்.. நீங்க கேக்க கூடாது)

5. கண்கள்

ஒரு பொண்ணுகிட்ட பேசும்போது உங்க கண்கள் ரொம்பவே முக்கியம். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்பதை வைத்துதான் உங்கள் கேரக்டரை அனுமானிப்பார்கள் பெண்கள். நேருக்கு நேராக முகம் பார்த்துப் பேசுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். (இனியாவது பேசும்போது வேறு எங்கோ (!!) பார்ப்பது, தரையை நகத்தை செல்போனைப் பார்ப்பது எல்லாம் வேண்டாமே)

6. ஹேர் ஸ்டைல்

கண்டபடி ஹேர்கட் கலரிங் எல்லாம் பண்ணினால் நண்பர்கள் வேண்டுமானால் பாராட்டலாம்.. பெண்களுக்கு எரிச்சல் தான் வரும். சீரான ஹேர்கட், கண்ணை உறுத்தாத கலரிங் (அல்லது முடிந்தவரை கலரிங் பண்ணாமல்) இருந்தால் தான் அவர்களுக்கு பிடிக்கும். (ஒழுங்கா தலைக்கு எண்ணெய் தேய்டா பண்ணாட“னு அவங்க கத்துறது கேக்குதா?)

7. உடலமைப்பு

என்னதான் நீங்கள் குள்ளமாகவோ உயரமாகவோ இருந்தாலும் உடலை எவ்வாறு கட்டமைப்பாக வைத்துள்ளீர்கள் என்பதில் கவனம் தேவை. தொள தொள சதையும் தொப்பையுமாக இருக்கும்பட்சத்தில் அண்ணா என்று ஒற்றை வரியில் அனைத்தையமே முடித்துவிடுவார்கள் பெண்கள்.. எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முயலுங்கள். (அதுக்காக ஓவரா கை மசில்ஸை காட்டியபடி சட்டை போட்டுகிட்டே திரியாதீங்க)

சிகெரெட் சீக்ரெட்

சிகெரெட் பிடிக்கிற ஆண்களை பார்த்தால் ஸ்டைலாக இருப்பதாக ஒரு வதந்தி இருக்கும். பிடித்த ஆண்களை கூட வெறுக்க வைத்து விடும் இந்த சிகரெட்.. எனவே தூக்கிப் போடுங்கள் அந்த கண்றாவியை. (அவங்க போனதுக்கப்புறம் எடுத்துக்குவீங்க தானே.. )

இது எல்லாத்துக்கும் மேல எப்பவுமே நீங்க நீங்களா இருந்தாலே போதும்.. அடுத்தவங்களுக்காக செயற்கையா நடந்துக்காம இயல்பா இருந்தாலே பெண்களுக்குப் பிடிக்கும்.

இப்ப நான் சொன்னது பொதுவா பெண்களை கவர்வதற்கு என்ன பண்ணனும்னு தான்.

காதலிக்குப் பிடிக்குமாறு எப்படி நடப்பது என்பதை அடுத்து வரும் பதிவுல சொல்றேன்.. சரியா?

Comments

நம்ம வெறும் பையன் ஏற்ற பதிவு
ஆக்டிவா இருக்கணும்//

ஸ்கூட்டரத்தான சொல்றீங்க!

//சிகெரெட் பிடிக்கிற ஆண்களை பார்த்தால் ஸ்டைலாக இருப்பதாக ஒரு வதந்தி இருக்கும். பிடித்த ஆண்களை கூட வெறுக்க வைத்து விடும் இந்த சிகரெட்.. எனவே தூக்கிப் போடுங்கள் அந்த கண்றாவியை.//

அப்படின்னா பொண்ணுங்களே தேவையே இல்ல ..


//இனியாவது பேசும்போது வேறு எங்கோ (!!) பார்ப்பது, தரையை நகத்தை செல்போனைப் பார்ப்பது எல்லாம் வேண்டாமே//

;0) கிகிகிகி
உங்களுக்கு ஆம்பிளைங்க மேலே அப்படியென்ன கோபம்? நாங்கெல்லாம் நல்லாயிருக்கிறது புடிக்கலியா? :-)
ஏங்க.... பசங்கள உருபட விடமாட்டீங்களா?
அவங்களே... தேமேன்னு அவங்க வேலைய பார்க்கப்போனா... நீங்களே கெடுத்துடுவீங்க போலிருக்கு...

இளைய சமுதாயத்துக்கு உருப்படியான யோசனை... அட்வைஸ் செய்யுங்க தோழி...!

நல்லாத்தான் இருக்கு..!
ஹி... ஹி... ஹிஹி...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
Chitra said…
இப்ப நான் சொன்னது பொதுவா பெண்களை கவர்வதற்கு என்ன பண்ணனும்னு தான்.
காதலிக்குப் பிடிக்குமாறு எப்படி நடப்பது என்பதை அடுத்து வரும் பதிவுல சொல்றேன்.. சரியா?


.....அப்படி போடு அருவாளை!!!
நாட்டுக்கு ரொம்ப தேவையான பதிவு. நன்றி. ஏய் ஜில்லு எங்க ஓடுற. அப்ளை பண்ணி பாக்கவா?
/// நம்ம வெறும் பையன் ஏற்ற பதிவு

ஏய் ஜில்லு எங்க ஓடுற. அப்ளை பண்ணி பாக்கவா? ////

எங்க ரெண்டு பேர மட்டும் எப்புடியா கரெக்டா கண்டு புடிக்கிறீங்க :)

புரியுது இங்க இருக்குற யூத்துகள் நாங்க ஒரு சிலர் தானே(ரமேஷ் அண்ணன் யூத்தில்லங்க அவர் அப்பா ஆயிட்டார்???)
ஸூப்பர் டிப்ஸ்...லேட்டா சொல்லிட்டீங்களே தோழி, ஒரு 4 மாசம் முன்னாடி இதெல்லாம் எனக்கு தெரிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும் ;-(
அப்பாடா என்னடா அடுத்த வாரம் காலேஜ் ஆரம்பிக்க போகுதே,அங்க போய் இந்த பொண்ணுங்கள்ட எப்படி அசடு வழியறதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்

இத ஒரு பிரிண்ட் அவுட் போட்டு எடுத்துக்க போறேன் :)

நீங்க சொல்றீங்கன்னு இதெல்லாம் ஃபாலோ பண்ணியும் ஒரு பொண்ணுங்களும் ஃப்ரெண்ட் ஆகல உங்ககிட்ட தான் கேப்பேன் :)
வினோ said…
நல்லா இருக்குங்க... ஆனா இப்படி பண்ணியும் நம்ம ஜில்லுக்கும் வெறும்பயனுக்கும் ஒன்னும் அமையல.. கொஞ்சம் அதுக்கு வழி சொல்லுங்க..
ஏங்க முக்கியமான ஒன்ன விட்டுட்டீங்களே

ஃப்ரீயா இருந்தா இருவது ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணிவிட்டு, நாமளே போன் பன்னி சொல்லனும் :)
/// ஒழுங்கா தலைக்கு எண்ணெய் தேய்டா பண்ணாட“னு அவங்க கத்துறது கேக்குதா? ///

இப்படித்தான் தலைக்கு எண்ணைய தடவ சொல்றது,அப்பரம் அசடு வழியுதுன்னு ஓட்டுறது,நாங்க பாவம்ங்க
/// காதலிக்குப் பிடிக்குமாறு எப்படி நடப்பது என்பதை அடுத்து வரும் பதிவுல சொல்றேன்.. சரியா? ///

அதுக்குள்ள அவசரப் படாதீங்க

முதல்ல ஒரு நாளைந்து கேர்ள் ப்ரெண்டாவது கிடைக்கட்டும் உங்க புண்ணியத்துள :)

அப்பரமா காதலிய கவர் பண்ரத பத்தி பேசலாம் :)
\\அடுத்தவங்களுக்காக செயற்கையா நடந்துக்காம இயல்பா இருந்தாலே பெண்களுக்குப் பிடிக்கும்.\\

அவ்ளோதான் மேட்டர்.... வேறென்ன வேணும்....
அக்கா..!!எனக்கு ஒன்னுமே புரியல நா இன்னும் சின்ன கொயந்த தான் ..
ஐடியாக்களைவிட, உங்களோட கமெண்ட்ஸ் அருமை தங்கச்சி :))
சௌந்தர் said...

நம்ம வெறும் பையன் ஏற்ற பதிவு

//

நண்பா.. மேலே படிச்சதெல்லாம் சிலருக்கு மட்டும் தான் இயற்கையிலையே அமையும் ... அதில நானும் ஒருத்தன் .. நான் பக்க பெர்பெக்ட் மக்கா..
ஜில்தண்ணி - யோகேஷ் said...

எங்க ரெண்டு பேர மட்டும் எப்புடியா கரெக்டா கண்டு புடிக்கிறீங்க :)
//

விடு மச்சி.. உலகத்திலையே நாம்ம ரெண்டு பேரு தான் நல்லவங்கன்னு எல்லோருக்கும் தெரியும்..
நல்ல ரசித்து சிரித்த பதிவு...அருமை..
ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஃப்ரீயா இருந்தா இருவது ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணிவிட்டு, நாமளே போன் பன்னி சொல்லனும் :)
//

மச்சி நீ இத தானே மூணு வருசமா பண்ணிகிட்டிருக்க...
பசங்களுக்கு ரொம்ப உபயோகப்படும்.. கலக்கிட்டீங்க
//இது எல்லாத்துக்கும் மேல எப்பவுமே நீங்க நீங்களா இருந்தாலே போதும்.. அடுத்தவங்களுக்காக செயற்கையா நடந்துக்காம இயல்பா இருந்தாலே பெண்களுக்குப் பிடிக்கும்.//

அப்புறமா எதுக்கு இந்த டிப்ஸ் எல்லாம் ...????
Anonymous said…
pennai nambathe.
correct panni matter mudikka intha tips helpa irukkum
prabhadamu said…
நல்ல ரசித்து சிரித்த பதிவு...அருமை
R.Gopi said…
//இப்ப நான் சொன்னது பொதுவா பெண்களை கவர்வதற்கு என்ன பண்ணனும்னு தான்.

காதலிக்குப் பிடிக்குமாறு எப்படி நடப்பது என்பதை அடுத்து வரும் பதிவுல சொல்றேன்.. சரியா?//

ஓகே...ஓகே... டபுள் ஓகே...

அடுத்த பதிவிற்காக ஆவலாக வெயிட்டிங்......
//Anonymous said...

pennai nambathe.
correct panni matter mudikka intha tips helpa irukkum//

எல்லாரும் அவங்கவங்க கண்ணோட்டத்துல கருத்துக்கள் சொல்லியிருக்காங்க. நீங்க உங்க கண்ணோட்டத்துல சொல்லியிருக்கீங்க.

பொதுவா நெறையபேருக்கு பெண்களிடம் நட்பு வைத்துக்கொள்ளவோ அல்லது சாதாரணமாகப் பேசவோ அவர்களை அணுக தயக்கமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆண்களுக்கு உதவும் நோக்கில் தான் நான் இந்த பதிவினை எழுதினேன்.
உங்களுக்கு இல்லை. உங்கள் தவறான எண்ணத்தினை முடிந்தால் மாற்றிக்கொண்டு படியுங்கள்.
நன்றி
நாகரிக வளர்ச்சிக்கு முன்னர் இருந்தே, ஏன் உலகில் உள்ள 90% உயிரினங்களில் பெண்கள் தான் தனக்கு தகுதியான ஆண்களை தேர்தெடுக்கின்றனர்!, ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது!

இயற்கையின் பொருட்டு உங்கள் பதிவை வரவேற்கிறேன்!
//correct panni matter mudikka intha tips helpa irukkum//


மொசப்புடிக்கிற நாயை மூஞ்சபார்த்தே கண்டுபிடிச்சிருவாங்க, பின்ன எங்க கரக்ட் பண்றது!

நண்பா, இது வரை உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்றிங்கன்னு நினைக்கிறேன், நீங்க கரக்ட் பண்ணதா நினைச்சதெல்லாம் உண்மையில் உங்களை கரக்ட் பண்ணிய பிகர்கள்! கொஞ்சம் யோசிச்சு பாருங்க!
sweet said…
parra.. idhu veraya??

sappaaaa

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..