என் ஒரு தலைக் காதல்

ஓடும் படகில் துள்ளும் ஒற்றை மீனாய் என் காதல். கதவிடுக்கின் விளிம்பில் கசியும் குளிர்ந்த சாரலாய் என் காதல் சிதறும் உன் பார்வைக்கும் சிலிர்க்கும் சிறு புன்னகைக்கும் ஏங்கும் என் காதல் நிஜம் தொடரும் நிழலாய் நீங்காத தயக்கத்துடன் என் காதல் "காதலோ !!!" என்ற பிற கேலிக்குப் பொய்யாக கோபப்பட்டு ரகசியமாக சிரித்துகொள்ளும் ரசிகையாக என் காதல் முன்வந்தாலும் மூளையைச் சுடும் நட்பெனும் போர்வையாய் என் காதல் நேசிக்கவோ நிராகரிக்கவோ படாத வெளிப்படுத்தாத தருணமாய் என் காதல் நெடுங்கால அவஸ்த்தைக்குப் பின் முடிவெடுத்து முன்வந்தது என் காதல் “நேசிக்கிறேன்”. எனக்கு முந்திக்கொண்டு எனைப்பார்த்து உச்சரித்தன உன் உதடுகள். கால்கள் தரையிருக்க காற்றில் பறந்தேன். "ஆம்" என்றேன் தலை குனிந்து. அணைத்துக்கொண்டாய் அருகில் வந்து. காணாமல் போனது என் உலகம் கண்டேன் புதியதாய் கண்முன்னே. ஆனந்தப் பெருமூச்சில்.. உன்மீதான என் காதல்