குழந்தைப் பருவத்துல கூட்டாஞ்சோறு விளையாடாதவங்களே இருக்க முடியாது.. சின்ன சின்ன விளையாட்டு சாமான் எடுத்துட்டு வந்து எல்லாரும் சேந்து அவங்களுக்கு தெரிஞ்சத சமைக்கிரோம்குற பேர்ல ஏதோ பண்ணி அத பெருமையா ஏதோ சாதிச்சுட்ட மாதிரி நெனச்சு சாப்டுவாங்க.. என்னோட சின்ன வயசுலயும் இந்த மாதிரி நெறைய வாலுத்தனம் எல்லாம் பண்ணிருக்கேன். அப்டி தான் ஒரு நாள் என்னோட பக்கத்து வீட்டுப் பட்டாளங்கள எல்லாம் கூப்டு மீட்டிங் போட்டோம். சமைச்சு விளையாடலாம்னு முடிவு பணினோம்.
முதல்ல என்ன சமைக்கிறதுன்னு யோசிச்சோம். ஆளாளுக்கு ஒன்னொன்னு சொன்னாங்க.. கடைசியா சர்க்கரை பொங்கல் செய்யலாம்னு முடிவு பணினோம். அதுக்கு எனென்ன வேணும்னு பட்டியல் போட்டோம். அரிசி, தண்ணி,சர்க்கரை, அடுப்பு பத்த வைக்க தீப்பெட்டி, அப்புறம் அடுப்பு மாதிரி செட் பண்றதுக்கு மூணு கல்லு, அடுப்பு எரிக்கிறதுக்கு பேப்பர் எல்லாம் கொண்டு வரலாம்னு பிளான் போட்டோம். முக்கியமான விஷயம், இதை எல்லாம் நாங்க வீட்டுக்கு தெரியாம கொண்டு வரணும்.. தெரிஞ்சா குடுக்க மாட்டங்க. அதனால பூனை மாதிரி நடந்து போய் அவங்கவங்க சமையலறைல எடுத்துகிட்டு ஓடி வந்துட்டோம். இந்த பட்ஜெட் பட்டியல்ல எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு சர்க்கரை கொண்டு வர்றது. நானும் ஒரு சின்ன பேப்பர்ல அம்மாவுக்கு தெரியாம கொண்டு வந்துட்டேன்.

எல்லாம் கொண்டு வந்தாச்சு, சமையல் ஆரம்பிக்கலாம்னு சொன்னதும் எங்களுக்குள்ள ஒரு இனம் புரியாத சந்தோஷம் வந்திடுச்சு.. வீட்டுக்கு பின்னாடி ஒரு மரத்தடியில சமையல ஸ்டார்ட் பண்ணலாம்னு ஆரம்பிச்சோம். ரொம்ம்ம்மம்ப ஆர்வமா எல்லாத்தையும் தனித்தனியா எடுத்து வச்சுக்கிட்டு, மூணு கல்லையும் அடுப்பு மாதிரி செட் பணினோம். இதுல என்ன ஒரு சோதனைனா எல்லா பொருளும் கொண்டு வந்தாச்சு, ஆனா சமைக்கிறதுக்கு பாத்திரம் கொண்டு வர மறந்துட்டோம். அப்ப தான் நா அதிரடி நடவடிக்கையா எங்க வீட்டு மாடிப் படிக்கு அடியில ஒரு கொட்டங்குச்சிய தேடிப் பிடிச்சு எடுத்துட்டு வந்து இதுல சமைக்கலாம்னு ஐடியா கொடுத்தேன். மத்த எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். சரின்னு சமையல் ஸ்டார்ட் பணினோம். கல்லு மேல கொட்டாங்குச்சிய வச்சு அதுல தண்ணி ஊத்தினோம், அப்புறம் அரிசிய போட்டு ஒரு குச்சிய வச்சு கிண்டி விட்டு அடுப்புக்கு அடியில பேப்பரல்லாம் வச்சு நெருப்பு வச்சோம். நாங்க மொத்தம் ஆறு பேர் (எங்களுக்கு பயம்னா என்னனே தெரியாது). ஒருத்தர் கிண்டிவிடனும், ஒருத்தர் பேப்பர் எரிக்கணும், ஒருத்தர் சர்க்கரை போடணும், ஒருத்தர் இதை எல்லாம் சரியா பண்றாங்களான்னு பாக்கணும். மீதம் இருந்த ரெண்டு பேர் வேடிக்கை பாக்கனும்னு வேலைய சமமா(!!) பிரிச்சுகிட்டோம். பெரிய்ய சாதனை பண்றது மாதிரி முகத்த பெருமையா வச்சுகிட்டு சுவாரஸ்யமா சமச்சுகிட்டு இருந்தோம்..
எல்லாமே நல்லா தான் போய்கிட்டு இருந்தது.. திடீர்னு பாத்தா அந்த கொட்டாங்குச்சி தீப்பிடிச்சு எரிய ஆரம்பிச்சுடுச்சு.. கொட்டாங்குச்சிய தீ எரிக்க யூஸ் பண்ணுவாங்கனு எங்களுக்கு அப்ப தான் ஞாபகம் வந்தது. அது மளமளன்னு எரிய ஆரம்பிக்கவும் எல்லாரும் பயந்து போய் கத்திகிட்டே நாலு பக்கமும் தெறிச்சு ஓட ஆரம்பிச்சோம். இதுல என்ன கமெடினா, பொங்கலுக்கு (!!!) போட்டுட்டு மிச்ச சர்க்கரைய பக்கத்துல வச்சிருந்தேன். பயந்து ஓடி வந்ததுல அத எடுக்காம வந்துட்டேன். அத விடக்கூடாதுன்னு மறுபடியும் அங்க போய் தேடினேன்.. ஆனா பயபுள்ளைக அத யாரோ தூக்கிட்டு ஓடிருச்சுக. (அது யார்னு இன்னைக்கு வரைக்கும் கண்டு பிடிக்க முடியலங்க). அதுக்கப்புறம் நாங்க யாருமே கூட்டாஞ்சோறு பத்தி பேசவே இல்ல.

இப்ப கூட சர்க்கரை பொங்கல பாத்தா, நாங்க பயந்து ஓடினது தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது.
Comments
படங்களே அழகா கதை சொல்லுதே..... பொங்கல் போட்டோ...... ம்ம்ம்ம்..... நாவில் நீர் ஊருது.... உங்கள் மலரும் நினைவுகள் கதையும் இனிமை. :-)//
உற்சாகப்படுத்துகிறது உங்கள் கருத்து.. நன்றி சித்ரா
அடிக்கடி வாங்க
//ஜெய்லானி
ம்...கதையும் படமும் அழகா இருக்கு//
உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் என் நன்றிகள் ஜெய்லானி
(வாக்கு தவறாம வந்தாச்சு..)
:-)
சர்க்கரைப் பொங்கல் இனிக்காவிட்டாலும், கூட்டாஞ்சோறு அனுபவம் இனிக்கிறது :)//
நன்றி நண்பரே.. மேலும் கருத்துக்களுக்கு வரவேற்கிறேன்..
//Hanif Rifay ..
வாக்கு தவறாம வந்தாச்சு..//
நீங்க வாக்கு தவறாத அண்ணாச்சின்னு ஒத்துக்குறேன்..
நெக்ஸ்ட் மீட் பண்றேன்..
அப்படியே கண் முன்னாடி நிறுத்துது உங்க கதை சொல்லும் விதம்!!!
மழலை பருவம்... முழுமையாய் உணர வைக்க ஒரு முயற்சி னு சொல்லலாம்.... அருமையா இருக்குங்க.... :)
உங்களின் இந்த பகிர்வு எனது இளம் பிராயத்தினையும் நினைவில் கொண்டு வந்து விட்ட்து//
இனிமையான நினைவுகளில் மூழ்குங்கள் ஸாதிகா..
வருகைக்கு நன்றி
//ரசிகன்.. ...
அடடா!!!..
அப்படியே கண் முன்னாடி நிறுத்துது உங்க கதை சொல்லும் விதம்!!!
மழலை பருவம்... முழுமையாய் உணர வைக்க ஒரு முயற்சி னு சொல்லலாம்.... அருமையா இருக்குங்க.... :)//
பாராட்டுக்கு நன்றி நண்பரே..
அடிக்கடி வாங்க
'வசந்த காலம்'
என்றேன்பார்கள்
எதையெதையோ....
இதுதான்
"வசந்த கால பருவம்"
என்பது
என் எண்ணம்...
தங்களின் இப்பதிவு
என்னை மீண்டும்
என் 'வசந்த' காலத்திற்கு
அழைத்துச் சென்றதேன்னவோ உண்மை...
பதிவும்... அதன்
படங்களும்...
பாராட்டுக்குரியவை...
நட்புடன்..
காஞ்சி முரளி...
இதுதான்
"வசந்த கால பருவம்"
என்பது
என் எண்ணம்...
தங்களின் இப்பதிவு
என்னை மீண்டும்
என் 'வசந்த' காலத்திற்கு
அழைத்துச் சென்றதேன்னவோ உண்மை...
பதிவும்... அதன்
படங்களும்...
பாராட்டுக்குரியவை...//
நீங்க சொல்வது போல வசந்த காலப் பருவம் என்பது நினைவை விட்டு நீங்காத ஒன்று..
உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது முரளி..
நன்றி.
hai nice enakum cinna vayasu neyapagam varuthu allarukum kandipa varum thanks//
அப்படியா?? நன்றி
நல்ல விசயங்கள ஞாபகப்படுதியிருந்தா சந்தோஷம் தானே கலை
சிரிங்க பிளீஸ்
அது ஒரு கனா காலம்ங்க!//
உண்மைதாங்க ப்ரின்ஸ்..
//My day gops ..
மரத்தடி'ல பத்த வச்ச அடுப்புனா, நீங்க அபார்ட்மெண்ட் வாசி இல்லையா?//
கூட்டாஞ்சோறு ஆக்கும்போது அபார்ட்மென்ட்னா என்னே தெரியாதுப்பா..
//தலைப்பை கொட்டாங்குச்சி பொங்கல்'னு மாத்திடுவோமா? //
அட.. இது எனக்கு தோணாம போய்டுச்சே.. சரி விடுங்க.. அடுத்த தடவ பாத்துக்கலாம்