என் ஒரு தலைக் காதல்



ஓடும் படகில்
துள்ளும் ஒற்றை மீனாய்
என் காதல்.

கதவிடுக்கின் விளிம்பில் கசியும்
குளிர்ந்த சாரலாய்
என் காதல்

சிதறும் உன் பார்வைக்கும்
சிலிர்க்கும் சிறு புன்னகைக்கும் ஏங்கும்
என் காதல்

நிஜம் தொடரும் நிழலாய்
நீங்காத தயக்கத்துடன்
என் காதல்

"காதலோ !!!" என்ற பிற கேலிக்குப்
பொய்யாக கோபப்பட்டு
ரகசியமாக சிரித்துகொள்ளும் ரசிகையாக
என் காதல்

முன்வந்தாலும் மூளையைச்
சுடும் நட்பெனும் போர்வையாய்
என் காதல்

நேசிக்கவோ நிராகரிக்கவோ படாத
வெளிப்படுத்தாத தருணமாய்
என் காதல்

நெடுங்கால அவஸ்த்தைக்குப் பின்
முடிவெடுத்து முன்வந்தது
என் காதல்

“நேசிக்கிறேன்”.
எனக்கு முந்திக்கொண்டு
எனைப்பார்த்து உச்சரித்தன உன் உதடுகள்.

கால்கள் தரையிருக்க
காற்றில் பறந்தேன்.

"ஆம்" என்றேன் தலை குனிந்து.
அணைத்துக்கொண்டாய் அருகில் வந்து.

காணாமல் போனது என் உலகம்
கண்டேன் புதியதாய் கண்முன்னே.

ஆனந்தப் பெருமூச்சில்..
உன்மீதான என் காதல்

Comments

Chitra said…
///முன்வந்தாலும் மூளையைச்
சுடும் நட்பெனும் போர்வையாய்
என் காதல்////


......superb! :-)
indha kavithai varigal...
manathai piraandikondirukirathu...

i will givemy comments very soon...
because i am bizeee..!

natpudan...
kanchi Murali...
ILLUMINATI said…
//"காதலோ !!!" என்ற பிற கேலிக்குப்
பொய்யாக கோபப்பட்டு
ரகசியமாக சிரித்துகொள்ளும் ரசிகையாக
என் காதல்//

ஹாஹா...
எவ்வளவு உண்மை...
காதல் ஒரு சுவையான அவஸ்த்தை
//Chitra said...

......superb! :-)//
நன்றி சித்ரா.

//காஞ்சி முரளி said...

indha kavithai varigal...
manathai piraandikondirukirathu...
i will givemy comments very soon...
because i am bizeee..!
natpudan...
kanchi Murali...//

வாருங்கள் முரளி..
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்

//ILLUMINATI said...

"காதலோ !!!" என்ற பிற கேலிக்குப்
பொய்யாக கோபப்பட்டு
ரகசியமாக சிரித்துகொள்ளும் ரசிகையாக
என் காதல்.

ஹாஹா...
எவ்வளவு உண்மை...//

அப்படியா?? நன்றி நண்பரே..
//கே.ஆர்.பி.செந்தில் said...

காதல் ஒரு சுவையான அவஸ்த்தை//

உண்மையான உண்மை செந்தில்.
வருகை புரிந்ததற்கு நன்றி..
அடிக்கடி வாங்க நண்பா.
SUFFIX said…
கவிதை எழுதலாம்னு முயற்சி செய்தால் நாலு வரிக்கு மேல போக மறுக்கிறது, இத்தனை வரிகளில் அழகாக வடிவமைத்திருக்கின்றீர்கள். மிகவும் அருமை!!
///ஓடும் படகில்.... துள்ளும் ஒற்றை மீனாய்.... என் காதல்.///
///கதவிடுக்கின் விளிம்பில் கசியும்....குளிர்ந்த சாரலாய்....என் காதல்////
////சிதறும் உன் பார்வைக்கும்....சிலிர்க்கும் சிறு புன்னகைக்கும் ஏங்கும்....என் காதல்/////

////நிஜம் தொடரும் நிழலாய்.... நீங்காத தயக்கத்துடன்....என் காதல்////
///"காதலோ !!!" என்ற பிற கேலிக்குப் பொய்யாக கோபப்பட்டு... ரகசியமாக சிரித்துகொள்ளும் ரசிகையாக.... என் காதல்///
////முன்வந்தாலும் மூளையைச் சுடும் நட்பெனும் போர்வையாய்.... என் காதல்////

இந்த வரிகள் கற்பனைதான்...
ஆனாலும்....
மனதின் உதட்டில் அவ்வப்போது உச்சரிக்க வேண்டிய.....
அசைப்போட்டுப் பார்க்க வேண்டிய வரிகள்..
Superb...!

அதைப்போலவே.... இந்த வரிகளும்...

////“நேசிக்கிறேன்”.... எனக்கு முந்திக்கொண்டு.... எனைப்பார்த்து உச்சரித்தன உன் உதடுகள்.
கால்கள் தரையிருக்க.... காற்றில் பறந்தேன்.
"ஆம்" என்றேன் தலை குனிந்து..... அணைத்துக்கொண்டாய் அருகில் வந்து.
காணாமல் போனது என் உலகம்.... கண்டேன் புதியதாய் கண்முன்னே.... ஆனந்தப் பெருமூச்சில்... உன்மீதான என் காதல்////

என் முந்தைய பின்னூட்டத்தில் சொன்னபடி...
இக்கவிதையையும்...
கவிதையின் வரிகளையும்...
நினைவுகளின் உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருக்கும்....

வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி...
My days(Gops) said…
superb kavidhai..

eppadinga ipadi elaam yosikireeenga?

//நேசிக்கவோ நிராகரிக்கவோ படாத
வெளிப்படுத்தாத தருணமாய்
என் காதல்//

idhu top :)
//suffix..
இத்தனை வரிகளில் அழகாக வடிவமைத்திருக்கின்றீர்கள். மிகவும் அருமை!!//
பாராட்டிற்கு நன்றி sufi

//காஞ்சி முரளி..
//இந்த வரிகள் கற்பனைதான்...
ஆனாலும்....
மனதின் உதட்டில் அவ்வப்போது உச்சரிக்க வேண்டிய.....
அசைப்போட்டுப் பார்க்க வேண்டிய வரிகள்..
Superb...! //
//நினைவுகளின் உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருக்கும்....
வாழ்த்துக்கள்...//

நன்றி முரளி..
வித்யாசமாக அதே சமயம் ஆழமாக விமர்சிக்கிறீர்கள்
மேலும் அடுத்த படிக்கு என்னை அழைத்துச்செல்லும் உங்கள் பாராட்டுக்கள்..
எனக்கு சிறந்த டானிக்..
//My day (Gops ) ..

superb kavidhai..
eppadinga ipadi elaam yosikireeenga?
//நேசிக்கவோ நிராகரிக்கவோ படாத
வெளிப்படுத்தாத தருணமாய்
என் காதல்//
idhu top :)//

வாங்க தலைவரே..

உங்க கமெண்ட் வரலயேனு ரொம்ப சோகமா இருந்தேன்..

வந்துடுச்சு.. ரொம்ப டாங்க்ஸ்..
My days(Gops) said…
13 my fav number :)
My days(Gops) said…
:) adada, sorry'nga konjam late aagiduchi :P ....

smile plz :D
>>நிஜம் தொடரும் நிழலாய்
நீங்காத தயக்கத்துடன்
என் காதல்

சுவையான வரிகள்
காதல் வரிகள் ஒரு
கலக்கல் கவிதை !!!
//My day (Gops)..

:) adada, sorry'nga konjam late aagiduchi :P ....//
smile plz :D //

ஈஈஈஈஈஈஈ

//13 my fav number :)//

அதுக்காக எப்பயும் லேட்டா வரகூடாது.. சரியா?

//அப்பாதுரை..

நிஜம் தொடரும் நிழலாய்
நீங்காத தயக்கத்துடன்
என் காதல்
சுவையான வரிகள்//

நன்றி நண்பரே..


//ஜெய்லானி..

காதல் வரிகள் ஒரு
கலக்கல் கவிதை !!!//

கருத்துக்கு நன்றி ஜெய்லானி
என்ன திடீர்னு பெயர் மாற்றம்....?
"இந்திராவின் கிறுக்கல்கள்"....
ஏன்...!
எதாவது Numeralogyயை பார்த்தீர்களா...!

தங்கள் 'கிறுக்கல்'களே... (கவிதைகளே)
நினைவுகளை எங்கோ இழுத்துச் செல்கின்றன...

பெயர் மாற்றம்... ஏதேனும் மாற்றத்தை தருமென்றா...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
//காஞ்சி முரளி ..
என்ன திடீர்னு பெயர் மாற்றம்....?
"இந்திராவின் கிறுக்கல்கள்"....
ஏன்...!
எதாவது Numeralogyயை பார்த்தீர்களா...!//

அதெல்லாம் ஒன்றும் இல்லை முரளி.
நான் ஆண் என்று நினைத்துகொண்டு பலர் என்னை நண்பா நண்பா என்றே பின்னூட்டம் போடுகின்றனர்.. அவர்களுக்கு நான் நண்பன் இல்லை தோழி என்பதை புரிய வைக்கவே இந்த பெயர் மாற்றம்.
கவிதை..
ரொம்ப..
நல்லாயிருக்குங்க..!!
தோழியே! உங்கள் கவிதை வரிகள் அத்தனையும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்..
//அண்ணாமலை ..

கவிதை..
ரொம்ப..
நல்லாயிருக்குங்க..!!//

நன்றி அண்ணாமலை. அடிக்கடி வாங்க

//அன்புடன் மல்லிகா..

தோழியே! உங்கள் கவிதை வரிகள் அத்தனையும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்..//

உங்கள் கருத்துக்கள் தான் என்னை தொடர்ந்து எழுதச் செய்கிறது மல்லிகா..
நன்றி தோழி
dharumi said…
எங்கிருந்து இவ்வளவு நல்ல படங்களை எடுக்குறீர்களோ ...
கவிஜ பத்தி ஒண்ணும் சொல்லலையோ .. அதுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் அதிகம்!
HariShankar said…
// நிஜம் தொடரும் நிழலாய்
நீங்காத தயக்கத்துடன்
என் காதல்

"காதலோ !!!" என்ற பிற கேலிக்குப்
பொய்யாக கோபப்பட்டு
ரகசியமாக சிரித்துகொள்ளும் ரசிகையாக
என் காதல்

முன்வந்தாலும் மூளையைச்
சுடும் நட்பெனும் போர்வையாய்
என் காதல்

நேசிக்கவோ நிராகரிக்கவோ படாத
வெளிப்படுத்தாத தருணமாய்
என் காதல்

நெடுங்கால அவஸ்த்தைக்குப் பின்
முடிவெடுத்து முன்வந்தது
என் காதல் // romba arumai...

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..