எங்கே சென்றாய் என்னுயிரே..

எங்கே சென்றாய் என்னுயிரே.. ஏக்கம் நெஞ்சை துளைத்திடுதே. துயரம் தாளாமல் துடிக்கிறேன்.. தூக்கம் இன்றித் தவிக்கிறேன். கண்ணீரும் வற்றியது என்கண்ணில்.. காற்றாய்ப் போனதோ என் காதல்? விழிகளால் சாமரம் வீசியவளே.. வலிகளைத் தந்ததேன் என்னவளே.. உள்ளம் உருகி வாடுகிறேன்.. இந்த ஊமையின் மௌனம் கேளாயோ? நீயின்றி என் இதயம் வெறுமையாய்த் துடிக்கிறது.. நினைவே நீ எங்கே என உடைகிறது. வாழ்க்கை, தனிமையில் கடந்திடுமோ.. வேதனை எப்போதும் தொடர்ந்திடுமோ.. ஒடிக்கப்பட்ட மனச்சிறகு ஓயாமல் கதறுகிறது.. காயத்திற்கு மருந்து எதடி? அது கலங்கியது உன்னைத்தேடி. வார்த்தைகளும் வறண்டது கண்மணியே.. விரல்கள் கோர்க்க வருவாயோ என்னுயிரே.. நிழல் செய்த மாயம் என்ன? நீங்காமல் உன்னைத் தொடர்கிறது.. நீ என்னைப் பிரிந்ததினால் அந்த நிழல் கூட என்னை வெறுக்கிறது. மொழியறியா குழந்தையென் பரிதாபம் புரியவில்லையா தேவதையே என்னுள் உன் சாபம் இருள் சூழும் காலச்சுமை ஈடுகட்டுமா உன் பிரிவை? அமைதியாய்க் கேட்கிறாயோ என் அழுகையின் சப்தம்? ஆயுள் வேண்டாம் என்பதே அதன் அர்த்தம்.