மரணம் கூட மகிழ்ச்சி தான்





ஏதோ மாற்றம் எனக்குள்..

என்ன நிகழ்ந்தது என்னுள்?



மின்னலாய் வந்தவள் நீதானே..

மீளாமல் தவிக்கிறேன் உன்னாலே.



என்னை மறந்தேன்..

உன் நினைவில் மிதந்தேன்.



புவியீர்ப்பு அரங்கத்தில் பனிச்சிற்பமே..

உன் விழி ஈர்ப்பு அரங்கேற்றமா?



எங்கோ பறந்து

எதிலோ கலந்து

எதுவோ எடுத்து

எனை எதிலோ பதித்தது.



காவியமாய் உனைப் பார்த்தேன்..

காற்றால் கடத்தப்படும் கைதியானேன்.



விடுவிப்பாயோ என்னை?

வரம் தருவாயோ உன் காதலை?



என் காதலுக்கு கண் அசைவாய்

உன் காதணிகளும் காற்ச்சலங்கையும்

தலையசைத்தால் போதுமா?



என் மனதுள் புயலென மையம் கொண்டவளே..

பூக்களும் புன்னகைக்கின்றன என்னைப்பார்த்து.



உன் பாதச் சுவடு போதும் கண்ணே..

என் பாலைவனமும் பூப்பூக்க.

உன் பார்வை ஒன்றே போதும் பெண்ணே..

முட்கள் தீவில் எனை மீட்க..



உன் மடி கிடைக்குமெனில்..

மரணம் கூட மகிழ்ச்சி தான் எனக்கு.



Comments

///புவியீர்ப்பு அரங்கத்தில் பனிச்சிற்பமே...
உன் விழி ஈர்ப்பு அரங்கேற்றமா?///

புதிய வரிகள்....

///எங்கோ பறந்து
எதிலோ கலந்து
எதுவோ எடுத்து
எனை எதிலோ பதித்தது.///

அற்புதம்....

///உன் மடி கிடைக்குமெனில்..
மரணம் கூட மகிழ்ச்சி தான் எனக்கு.////

இந்த இறுதி வரிகள்...
மிக... மிக.. அற்புதம்....

வாழ்த்துக்கள்... தோழி...

நட்புடன்...
காஞ்சி முரளி...
//உன் காதணிகளும் காற்ச்சலங்கையும் தலையசைத்தால் போதுமா? //

சூப்பர் வரி...
எங்கோ பறந்து

எதிலோ கலந்து

எதுவோ எடுத்து

எனை எதிலோ பதித்தது.

காவியமாய் உனைப் பார்த்தேன்.//


நல்லா இருக்கு.
திரைப்படத்திற்கு
எழுதுகிற பாடல் போலுள்ளது!
ரொம்ப நல்லாயிருக்கு!
உன் மடி கிடைக்குமெனில்..

மரணம் கூட மகிழ்ச்சி தான் எனக்கு.////



சரித்தானே ????
My days(Gops) said…
//ஏதோ மாற்றம் எனக்குள்..

என்ன நிகழ்ந்தது என்னுள்//

கண்ணாடி எதுவும் பார்த்து இருப்பீங்க :)
My days(Gops) said…
//காற்றால் கடத்தப்படும் கைதியானேன்//

அருமையான யோசனை... வித்தியசமா இருக்கு :)
//காஞ்சி முரளி..

உங்கள் ரசனைக்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றிகள் முரளி.//



//ஜெய்லானி..

சூப்பர் வரி...//

நன்றி தோழி



//பிரின்ஸ்..

நல்லா இருக்கு.//

நன்றி நண்பரே..



//அண்ணாமலை..

திரைப்படத்திற்கு
எழுதுகிற பாடல் போலுள்ளது!
ரொம்ப நல்லாயிருக்கு!//

அந்த அளவுக்கெல்லாம் எழுத வராது நண்பரே..
உங்கள் பாராட்டுக்கு நன்றி..



//மங்குனி அமைச்சர்..

உன் மடி கிடைக்குமெனில்..

மரணம் கூட மகிழ்ச்சி தான் எனக்கு.////

சரித்தானே ????//

மிகவும் சரி அமைச்சரே..



//my day gops ..

கண்ணாடி எதுவும் பார்த்து இருப்பீங்க :)//


அட.. எப்படி சரியா சொல்றீங்க.. ??


//அருமையான யோசனை... வித்தியசமா இருக்கு //


நன்றி கோபி..
கவிதை நல்லாயிருக்கு..வரிகள் பிரமாதம்..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்