நீ எனக்கு






பிறவிக் குருடனுக்கு கிடைத்த ஐந்து நிமிடப் பார்வை - நீ

பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் தாயின் முத்தம் - நீ

தூக்குக் கைதிக்கு நிறைவேற்றப்படும் கடைசி விருப்பம் - நீ

திருந்தியவனுக்கு வழங்கப்படும் பாவமன்னிப்பு - நீ

தொடர் தோல்விக்குப் பின் பெறும் முதல் வாய்ப்பு - நீ

அடைமழையில் சிறுவன் பொறுக்கும் ஆலங்கட்டி - நீ

பதில் எதிர்பார்க்கும், தெரிவிக்கப்பட்ட ஒரு தலைக் காதல் - நீ

விதவை நினைவிலிருக்கும் காதல் வாழ்க்கை - நீ

முதல் பதவியை தவறவிட்ட ஒற்றை மதிப்பெண் - நீ

அடிமை வேலைக்கு கிடைத்த விடுமுறை நாட்கள் - நீ

முத்துக் குளிப்பவன் அடக்கும் ஆழ மூச்சு - நீ

திரும்பக் கிடைத்த தொலைந்த சான்றிதழ் - நீ

பாலைவன மணல் மீது விழும் சிறு தூரல் - நீ

யுகங்கள் தவமிருக்கும் யோகிக்குத் தெரியும் ஜோதி - நீ

சிறுமியின் புத்தகம் நடுவிலிருக்கும் ஒற்றை மயிலிறகு - நீ

அன்னை ரசிக்கும் மழலையின் உறக்கப் புன்னகை - நீ

நாளிதழில் பரீட்சை எண் தேடும் மாணவப் பதற்றம் - நீ

தனிமையில் நினைவலைகள் சிந்தும் கண்ணீர்த்துளி ௦- நீ

சந்தித்த தோழர்களுக்கு இடையே நிகழும் முகமலர்ச்சி - நீ

பேச ஏங்கிய தோழியிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு - நீ

என் வாழ்வின் வசந்த கால அத்தியாயங்களின் தொகுப்பு - நீ



Comments

//பேச ஏங்கிய தோழியிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு - நீ//

அடுத்த கவியரசி நீங்கதான். உண்மையிலேயே அருமையான வரிகள்.
//கொல்லான்,,
அடுத்த கவியரசி நீங்கதான். உண்மையிலேயே அருமையான வரிகள்.//



முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்த நண்பரே..

உங்கள் பாராட்டுக்கு நன்றி..
படிக்க படிக்க மூச்சு வாங்குது, இருங்க புல்லா படிச்சுட்டு மறுபடி கமென்ட் போடுறேன்!
//பன்னிகுட்டி ராமசாமி..

படிக்க படிக்க மூச்சு வாங்குது, இருங்க புல்லா படிச்சுட்டு மறுபடி கமென்ட் போடுறேன்!//

காத்திருக்கிறேன் பன்னிக்குட்டி சார்..
//தொடர் தோல்விக்குப் பின் பெறும் முதல் வாய்ப்பு - நீ//

அருமை!
அருமையான வர்னனைகள்..!!


கொடுமை இந்த ஒரு வரி
//
பிறவிக் குருடனுக்கு கிடைத்த ஐந்து நிமிடப் பார்வை - நீ//

அதன் பின் ஆயுள் முழுக்க வேதனை..!!
//விதவை நினைவிலிருக்கும் காதல் வாழ்க்கை - நீ//

விவரிக்க முடியாத, வெளிக்காட்டமுடியாத வேதனை!

எல்லா வரிகளும் இன்ப நினைவுகளோ, நிகழ்வுகளையோ சொல்லுகின்றன, ஆனால் இது துன்பம் தரும் நினைவல்லவா?
MUTHU said…
அருமையான வார்த்தை நடைகள்
ஆழமான அர்த்தங்கள்
வாழ்துக்கள்
Chitra said…
அருமயான வரிகள். அழகு கவிதை.... மீண்டும் வாசிக்கிறேன்.... :-)
அட அருமையான கவிதைகளை எழுதியது நீ(சாரி நீங்க)
ரசித்தேன்
//அடைமழையில் சிறுவன் பொறுக்கும் ஆலங்கட்டி - நீ//
//சிறுமியின் புத்தகம் நடுவிலிருக்கும் ஒற்றை மயிலிறகு - நீ//
//அன்னை ரசிக்கும் மழலையின் உறக்கப் புன்னகை - நீ//
//தனிமையில் நினைவலைகள் சிந்தும் கண்ணீர்த்துளி - நீ////

மயிலறகால்
மனதை
வருடும்
வரிகள்....
இந்த வரிகள்...

மொத்தத்தில்...
எல்லா வரிகளும் அருமையாய் இருந்தாலும்...
ராக் பாடலுக்கிடையில்..... இனிய புல்லாங்குழலின் இசை...
கிளிகளின் மழலைக்குரலுக்கிடையில்..... ஏகாந்தத்தில் லயிக்க வைக்கும் குயிலின் குரலோசை... போன்றதுதான் நான் மேலே குறிப்பிட்ட வரிகள்...

பாராட்டுக்கள்....

நட்புடன்...
காஞ்சி முரளி....
நாளிதழில் பரீட்சை எண் தேடும் மாணவப் பதற்றம் ///


இது மட்டும் பழசு , மத்ததெல்லாம் அருமை
VELU.G said…
நல்ல கோர்வையான வரிகள் அருமை

வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வரியும் அருமை இந்திரா.

ஒரு சிறு விண்ணப்பம்.
இக்கவிதையை சற்று உடைத்துப்போட்டுபாருங்கள் ஓசையோடு ராகம் வரும்.

பிறவிக் குருடனுக்கு கிடைத்த
ஐந்து நிமிடப் பார்வை - நீ

பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் தாயின் முத்தம் - நீ.

இப்படி

இது என்கருத்து இது தங்களுக்கு இஷ்டப்பட்டால் மட்டுமே!
வரிகள் அருமை
My days(Gops) said…
KAVIDHAI SUPER NGA...
கருத்துக்களை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
சில பணிகள் இருந்ததால் என்னால் சரியாக பதிவுகள் இட முடியவில்லை..
இனி என் பதிவுகள் தொடரும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் வந்துவிட்டேன்.
நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு என் நன்றிகள்..
HariShankar said…
miga miga arumai... ovvoru variyum.. adhan valiyum / valimayum niyabagamum ... :)

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்