நான் ஜாகிங் போனேன்.. நான் ஜாகிங் போனேன்..
பொதுவா சின்ன வயசுல நடந்த சம்பவம் எல்லாம் வளர வளர மறந்துடும். ஆனா மறக்க முடியாத சில விசயங்களும் இருக்கும். அது சோகமாவும் இருக்கலாம், சுவாரஸ்யமாவும் இருக்கலாம்.
என்னோட சின்ன வயசுல நா நிறைய சினிமா பாக்குறதுண்டு.. நானும் என்னோட பெரியப்பா பொண்ணும் ரொம்ப நல்ல தோழிகள். படத்துல வர்ற ஹீரோயின் எப்படி ஜடை போட்ருக்கா, எப்படி தோடு போட்ருக்கா, எப்படி செருப்பு போட்ருக்கானு பாத்து பாத்து அதே மாதிரி வேணும்னு அடம் பிடிச்சு வாங்குவோம். அப்புறம் அந்தந்த படத்துல அவங்க நடக்கிறது மாதிரி ஸ்டைலா நடந்து பாப்போம். இப்படி தான் ஒரு படத்துல (என்ன படம்னு மறந்து போச்சு) ஹீரோயின் white and white பேண்ட் ஷர்ட் போட்டுட்டு காலங்காத்தால ஜாகிங் போற காட்சியைப் பார்த்தோம். உடனே எங்களுக்கு அதே மாதிரி ஜாகிங் போகணும்னு ஆசை வந்திடுச்சு..
அதுவும் அதே மாதிரி white and white dress போட்டுக்கிட்டு ஜாகிங் பண்ணனும்னு முடிவு பண்ணினோம். நா அவளோட அம்மா கிட்ட போய் dressக்கு கெஞ்சினேன்.. அவ என் அம்மாகிட்ட வந்து கெஞ்சினா. பல நாள் கெஞ்சலுக்கு அப்புறம் ஒரு வழியா ரெண்டு பேருக்கும் வாங்கி குடுத்தாங்க. ஒரு நல்ல நாள் பாத்து ஜாகிங் பண்ண முடிவெடுத்தோம். ட்ரெஸ்க்கு மேட்ச்சா வளையல் தோடு பாசினு எல்லாமே வாங்கினோம். குதிரை வால் தான் போடணும், அப்ப தான் நாம ஓடும்போது முடி அழகா இருக்கும்னு அவ சொன்னா. அப்டினா அதுக்கு வெள்ளை ஹேர் பேண்ட் தான் வைக்கணும்ன்னு அதையும் வாங்கினோம். ஒரு வழியா எல்லாமே லிஸ்ட் போட்டு வாங்கிட்டு மறுநாள் ஜாகிங் ஆரம்பிக்கலாம்னு ப்ளான் போட்டோம். காலங்காத்தால தான் எல்லாரும் ஜாகிங் பண்ணுவாங்க, நாம எல்லார விடவும் முதல் ஆளா ஆரம்பிக்கணும்னு நா ஐடியா குடுத்தேன். அதுக்கு அவகிட்ட இருந்து எனக்கு பாராட்டு வேற கெடச்சது.. காலேல நாலரைக்கு எந்திரிக்கலாம், முதல் நாள் போறதுனால குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு கெளம்பலாம்னு அவ சொன்னா. சரின்னு சொல்லி நாலரைக்கு அலாரம் வச்சுட்டு படுத்தோம். சந்தோசத்துல நைட் முழுசும் தூக்கமே வரல. அந்த ஹீரோயின் மாதிரி நாமளும் ஜாகிங் போகப் போறோம்னு நெனைக்கும்போது உற்சாகமா இருந்துச்சு.
மறுநாள் காலேல அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எந்திரிசுட்டோம். வேகவேகமா குளிச்சுட்டு புது வெள்ளை டிரஸ் போட்டோம்.
அதுக்கு மேட்சா வாங்கி வச்சிருந்த எல்லாத்தையும் போட்டுக்கிட்டு பக்தியா சாமி கும்பிட்டோம். எல்லாரும் தூங்கிகிட்டு இருக்கும்போது நாம தான் சுறுசுறுப்பா ஜாகிங் போகபோறோம், எல்லாரும் சோம்பேறிங்கனு எங்களுக்கு நாங்களே சொல்லிக்கிட்டு வீரமா வெளில வந்தோம்.
அவ்ளோ நேரம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. ஆனா வெளில கருங்கும்முனு இருட்டா இருந்தத பாத்ததும் என்னனு தெரில.. உள்ளுக்குள்ள போகலாமா வேணாமானு ஒரு ஓரத்துல சின்னதா கேள்வி எழும்புச்சு.. ஆனா ஒருத்தருக்கொருத்தர் வெளில காட்டிக்காம சிரிச்சு மலுப்பிகிட்டோம். இங்க இருந்தே ஓட வேணாம். வீட்ல இருந்து கொஞ்சம் தள்ளி ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லி நடந்தோம். தெரு முக்கு தாண்டி ஒரு playground இருக்கும். அங்க ஆரம்பிச்சு ஒரு ரவுண்டு அடிச்சு திரும்பி வீடு வரைக்கும் ஓடி வரலாம்னு முடிவு பண்ணி groundக்கு நடந்தோம்.
மெதுவா தான் ஓடனும், வேகமா ஓடகூடாதுன்னு ரூல்ஸ் எல்லாம் சொல்லி வச்சிருந்தோம். அதனால மெதுவா ஸ்டார்ட் பண்ணி ஓட ஆரம்பிச்சோம்.
விடிய ஆரம்பிச்சுகிட்டு இருந்த நேரங்குரதுனால கொஞ்சம் வெளிச்சம் தெரிஞ்சுது. சந்தோசமா ஓடிகிட்டு இருந்தோம்..
திடீர்னு தூரத்துல நாய் ஒன்னு கொலைக்கிற சத்தம் கேட்டுச்சு. தூரமா தான கேக்குதுன்னு நம்ம்ம்பி ஓடினோம். நேரம் ஆக ஆக அது பக்கத்துல கேக்க ஆரம்பிச்சது. அதுவும் ஒரு நாய் இல்ல, மூணு நாயோட சத்தம். எங்களுக்கு பயம் வந்திடுச்சு.. உடனே வீட்டுக்கு போய்டலாம்னு கொஞ்சம் வேகமா ஓட ஆரம்பிச்சோம். ஏதோ திருடன் தான் ஓடுறான்னு நெனச்சிருச்சு போல.. மூணும் சேந்து எங்கள விரட்ட ஆரம்பிச்சிடுச்சு. அவ்வளவுதான்..
நாங்க ஓட.. நாய் விரட்ட.. நாய் விரட்ட.. நாங்க ஓடனு ரணக்கலாமாய்டுச்சு..
பின்னங்கால் பிடரியில அடிக்கிற மாதிரின்னு சொல்லி கேள்விப்பட்ருக்கோம் . ஆனா அப்பதான் அதோட அர்த்தத்த புரிஞ்சுகிட்டோம்.
உயிருக்கு பயந்து ஓடினதுல, கீழ விழுந்து வெள்ளை கலர் டிரஸ் brown கலர் ஆகி அங்கங்க ரத்த காயம் ஆனது எல்லாம் பெரிய கதை.. வீட்டுக்கு வந்து சேந்தா போதும்னு உயிரை வெறுத்துகிட்டு ஓடினதுல கடைசில நாங்க ஜெயிச்சுட்டோம், நாய் தோத்துப்போய் பாதில நின்னுடுச்சு.
நாய் கிட்ட ஜெயிச்சுட்டாலும் அம்மாகிட்ட மாட்டிகிட்டோம். மூச்சு திணறத் திணற அடிச்சாங்க.. அதுக்கப்புறம் இனிமே ஜாகிங் மட்டுமில்ல வாக்கிங் கூட போக மாட்டோம்னு ஒருத்தருக்கொருத்தர் சத்தியம் பண்ணிகிட்டோம்..
இன்னைக்கு வரைக்கும் ரோட்ல ஜாகிங் போறவங்கள பாத்தா எங்கள விரட்டுன அந்த மூணு நாய்ங்க தான் எனக்கு ஞாபகம் வருது..
Comments
:-)
அதுங்களும் உங்க கூட ஜாக்கிங்தான் வந்திருக்கும் ஆனா கூட்டு சேக்காத்தால விரட்ட ஆரம்பிச்சிருக்கும்..//
அப்படி ஒன்னு இருக்கோ.. அடுத்த முறை கண்டிப்பா கூட்டிட்டு போயிடறோம்..
நீங்களும் வரீங்களா??
//Chitra said...
நாய்கள் விரட்ட jogging ....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//
என்னா ஒரு வில்லத்தனம்..
//பட்டாபட்டி.. said...
சரி..சரி.. அடுத்த தடவையாவது நாய்க்கு பிஸ்கட் வாங்கிட்டு..ஜாகிங் போங்க...//
கண்டிப்பா செய்றேன்.. நீங்க சாப்ட்ற பிஸ்கட் பேர் என்னங்க பட்டா?
//ஜில்தண்ணி - யோகேஷ் said...
அதுங்க நம்ம சொந்தகார பொன்னு ஜாக்கிங் போராங்களே, நாமளும் சேர்ந்து போவோமேன்னு வந்துருக்கும் //
அதுங்க கிட்ட கேட்டேனே.. யோகேஷோட சொந்தகார நாய்னு இல்ல சொல்லிச்சு..
//
அய்யே.. நான் கறி மட்டும் தான் சாப்பிடரது..ஹி..ஹி
பின்னங்கால் பிடரி இதுக்கு அர்த்தம் சொல்லவும் தெரியாவிடில் திரும்ப ஒருமுறை ஓடிப்பார்ப்பது நல்லது!//
வேணாம் வேணாம்.. எப்படியும் நீங்கள் ஒரு நாள் ஓடுவீர்கள் அல்லவா?
அப்போது தெரிந்து கொள்கிறேன்..
//ராசராசசோழன் said...
உங்களுக்கு மட்டும் இல்ல தோழி எனக்கும் அதே மாதிரி அனுபவம் இருக்கு.... என்ன செய்ய...நான் இருந்த மாநகரத்திற்கு நாய்கள் என்றால் அவ்வளவு பாசம்...//
என் இனமடா நீ..
அய்யே.. நான் கறி மட்டும் தான் சாப்பிடரது..ஹி..ஹி//
அது என்ன கறின்னு சொல்லவே இல்லையே பட்டா
//சௌந்தர் said...
தூங்கி கொண்டு இருக்கும் நாய்யை எழுப்பினா கோபம் வராம என்ன செய்யும்....//
அடுத்த தடவை முழிச்சுகிட்டு இருக்குற நாயை தூங்க வச்சுட்டு தான் ஒடபோறேன் சௌந்தர்.
// ஆனா வெளில கருங்கும்முனு இருட்டா இருந்தத பாத்ததும் என்னனு தெரில.. உள்ளுக்குள்ள போகலாமா வேணாமானு ஒரு ஓரத்துல சின்னதா கேள்வி எழும்புச்சு.. ஆனா ஒருத்தருக்கொருத்தர் வெளில காட்டிக்காம சிரிச்சு மலுப்பிகிட்டோம்.
நாங்க ஓட.. நாய் விரட்ட.. நாய் விரட்ட.. நாங்க ஓடனு ரணக்கலாமாய்டுச்சு.
நாய் கிட்ட ஜெயிச்சுட்டாலும் அம்மாகிட்ட மாட்டிகிட்டோம். மூச்சு திணறத் திணற அடிச்சாங்க.. அதுக்கப்புறம் இனிமே ஜாகிங் மட்டுமில்ல வாக்கிங் கூட போக மாட்டோம்னு ஒருத்தருக்கொருத்தர் சத்தியம் பண்ணிகிட்டோம்.. //
செம்மையa என்ஜாய் பண்நீருபீங்க போல.. ஹா.ஹா..ஹா