பேனர் பைத்தியங்கள்..

முன்னெல்லாம் யாருக்காவது கல்யாணம் நடந்தா அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேந்து அங்கங்க செவுத்துல சின்னதா வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவாங்க. சின்ன பேப்பர்ல வாழ்த்து செய்தி அச்சடிச்சு அதோட சாக்குலேட்ட பின் பண்ணி எல்லாருக்கும் தருவாங்க. ஆனா இப்ப ஃப்ளக்ஸ் பேனர் வந்தாலும் வந்துச்சு, காதுகுத்து, கல்யாணம்னு ஆரம்பிச்சு யாராவது மண்டையப் போட்டா கூட பெருசு பெருசா பேனர் வச்சிட்றாங்க. இதுல என்ன கொடுமைனா, அந்த பேனர்ல ஒரு கும்பல் போட்டோவே இருக்கும். சம்பந்தப்பட்டவங்க யாரு, வாழ்த்துறவங்க யாருனே நமக்கு வௌங்க மாட்டிங்குது. என்னவோ சினிமால ஹீரோ சான்ஸ்க்கு ஆள் எடுக்குறமாதிரி ஸ்டைலா போஸ் குடுத்துட்டு நிப்பாய்ங்க. பெரிய பெரிய சோ்ல உக்காந்து, ஃபோன் பேசுற மாதிரி, ஏதோ உலக சமாதானத்துக்காக யோசிக்கிற மாதிரி, நகைக் கடை, டூத் பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிற மாதிரினு பயங்கரமான ஸ்டில்ஸ் எல்லாம் வச்சிருப்பாய்ங்க. இவங்க நிக்கிறது மட்டுமில்லாம இவங்க வீட்டு குட்டீஸ் பட்டாளத்தையும் நிக்க வச்சிருப்பாய்ங்க. ஏதோ போனா போகுதுனு சம்பந்தப்பட்ட கல்யாண ஜோடிகளை ஒரு ஓரமா இத்துனூண்டா போட்ருப்பாங்க. பத்தாததுக்கு சினிமா ஹீரோக்களோட போட்டோவையும் பாத...