நான் வாங்கிய பல்பு..நான் ஒரு தடவை தற்காலிகமா உள்ளுர் கேபிள் சேனலில், செய்தி வாசிப்பாளரா (நம்புங்கப்பா) கொஞ்ச நாள் வேலை பாத்துகிட்டிருந்தேன். அங்க அடிக்கடி மற்ற நிகழ்ச்சிகளுக்கு நேரடி ஒளிபரப்பு எல்லாம் நடக்கும். ஒரு தடவை கேம் ஷோ ஒன்னு நடத்துனாங்க. அதாவது, நிகழ்ச்சிக்கு போன் பண்றவங்க கிட்ட ஏதாவது கேள்வி, கேட்டு பதில் சொல்றவங்களுக்கு பரிசு அறிவிக்கணும்.
.
அந்த சேனல்ல செய்திகளையெல்லாம் கொஞ்சம் முன்னதாவே பதிவு பண்ணி ஒளிபரப்புவாங்க. அதுனால எனக்கும் நேரடி ஒளிபரப்புக்கும் தொடர்பில்ல.
.
அப்படிதான் ஒரு நாள் நா வேலைய முடிச்சுட்டு கௌம்பிகிட்டு இருந்தேன். திடீருனு எங்க மேனேஜர் என்கிட்ட ஓடி வந்து அன்னைக்கு லைவ் ஷோ பண்ற பொண்ணு வரலனும் வேற ஏற்பாடு பண்ண முடியாதனால நான் அந்த நிகழ்ச்சி பண்ணனும்னும் பதட்டமா சொன்னாரு. எனக்கு தூக்கிவாரிப்போட்டுச்சு. ஆனாலும் வேற வழியில்லாதனால சரின்னு சொன்னேன்.
.
உடனே அவசர அவசரமா லைட்டா மேக்அப் போட்டுகிட்டு (அழகுக்கு அழகா?) நிகழ்ச்சிக்கு தயாரானேன். புரோக்ராம் டைரக்டர் என்கிட்ட வந்து ”நீ என்ன பண்ணுவியோ தெரியாது, போன் பண்றவங்களுக்கு எத்தன க்ளு வேணும்னாலும் குடு, அவங்கள ஜெயிக்க வச்சிடனும், அப்பதான் புரோக்ராம் ஃபேமஸ் ஆகும்”னு பயமுறுத்திட்டுப் போனாரு.
.
ஒரு வழியா எல்லாம் தயாராகி 3, 2, 1 சொல்லி ஸ்டார்ட் சொன்னது தான் தாமதம்.. சாதாரணமா கையசைத்து Hello Viewers’னு ஸ்டைலா ஆரம்பிக்கிறதுக்கு பதிலா ஏதோ கோயில்ல சாமி கும்பிட்ற மாதிரி ரெண்டு கையெடுத்து கேமராவ கும்பிட்டு வணக்கம்னு சொன்னேன். அப்பவே மேனேஜருக்குப் புரிஞ்சிருக்கணும். அப்புறம் ஒரு மாதிரி சமாளிச்சு முதல் காலரை அட்டெண்ட் பண்ணேன். போன்ல ஸ்பீககர் போட்டு அதுக்கும் எனக்கும் தனித்தனியா மினி மைக் வச்சிருந்தாங்க. அத மறந்துட்டு ஏதோ வீட்ல பேசுற மாதிரி (கேமராவுக்கு என் உச்சந்தலையைக் காட்டியபடி குனிஞ்சு) ஸ்பீக்கருக்குப் பக்கத்துல முகத்தைக் கொண்டு போய் அவங்க கிட்ட பேசினேன். என் மேனேஜர் அவ்வளவு தான், அவரோட தலையில கைவச்சிட்டாரு. விட்டா என்னைய எரிச்சிட்றது போல அங்க இருந்த எல்லாரும் பாத்தாங்க. அப்புறம் எனக்கு ஞாபகம் வந்து அசடு வழிஞ்சுகிட்டே நேரா நின்னு சமாளிச்சுகிட்டேன்.
.
என்கிட்ட என்ன கேள்வி கேக்கணும்னு ஒரு பேப்பர்ல எழுதிக் குடுத்திருந்தாங்க. அதுபடி முதல் கேள்விய அவங்ககிட்ட கேட்டேன். “கிருஷ்ணக்கடவுளுக்கு இது மிகப்பிடிக்கும். புரதச்சத்து இதில் அதிகம்“. இது தான் அந்தக் கேள்வி. காலர் என்னய திட்னாங்களா இல்ல பதில் சொன்னாங்களானு தெரில, “வெண்ணை“னு சொன்னாங்க. சரியான பதில்னு சொல்லி சின்னப்புள்ளத்தனமா உணர்ச்சிவசப்பட்டு சத்தமா கைதட்டி சொதப்பினேன்.
.
ஒவ்வொருதடவ பேசி முடிச்சதும் ஒரு பாட்டு ஒளிபரப்பாகும். முதல் பாட்டு ஓடிமுடிக்கிறவரைக்கும் என்னோட மேனேஜர் என்ன நல்லா திட்டி தீத்துட்டார். பாட்டு முடிஞ்சதும் எதுவுமே நடக்காத மாதிரி சிரிச்சுகிட்டே (அவ்வ்வ்வ்) அடுத்த காலர்கிட்ட பேசினேன்.
.
அவங்க என்னடானா இது சன் டிவி தானேனு கேட்டுட்டு இல்லன்னு சொன்னதும் கட் பண்ணிட்டாங்க. அப்புறம் கால் எதுவும் வரல. நேரடி ஒளிபரப்பு வேற, என்ன பண்றதுனே தெரியாம ஒரு நிமிசம் சமாளிக்கிறதா நெனச்சு எதையெதையோ உளறினேன். யூனிட்ல இருந்தவங்களுக்கு நல்ல மனசுபோல.. பொறுத்துப் பொறுத்து பாத்துட்டு அவங்களே எனக்கு போன் பண்ணி யாரோ மாதிரி பேசினாங்க. ஆனா நான் தான் கேமராவ பாக்காம போன் பண்றவங்க முகத்தைப் பார்த்து பேசிட்டிருந்தேன். கேமராமேன் எனக்குப் புரியவைக்கிறதுக்குள்ள ஒரு பரதநாட்டியமே ஆடிட்டார். வழக்கம்போல கடமையேனு கேள்வி கேட்டு பாட்டு போட்டேன்.
.
இப்ப மேனேஜர் கிட்டத்தட்ட மயக்கம்போடாத குறை தான். அடுத்ததா ஒரு கால் வந்தது. ஒரு பெண் குரல் கேட்டுச்சு, நீங்க இந்திரா தான? நீங்க நல்லா செய்தி வாசிக்கிறீங்க மேடம், உச்சரிப்பெல்லாம் அருமையா இருக்கு அப்படி இப்படினு புகழ்ந்து தள்ளிட்டாங்க. எனக்கு ஒரே சந்தோசம். அவங்களுக்கும் ஒரு பாட்டு போட்டுட்டு ஒரு வழியா நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. கால் பண்ணின எல்லாருக்கும் நன்றி, வேறொரு நிகழ்ச்சில சந்திக்கிறேன்னு ஈஈ“னு சிரிச்சுகிட்டே முடிச்சேன். கேமராவ ஆஃப் பண்ணிணப்புறம் தான் எல்லாருக்கும் உயிர் வந்தது.
.
பொறுமையா பாத்துகிட்டிருந்த மேனேஜர் என்கிட்ட வந்து ”இனிமே சாகுறவரைக்கும் உன்கிட்ட லைவ் ஷோ பண்ண சொல்லி கேட்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனாரு.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் செய்தி வாசிப்பாளராவே வேலை பாத்தேன். அப்புறம் வேறொரு கணிணி அலுவலகத்துல சேந்துட்டேன்.
.
ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு இன்னைக்கு வரைக்கும் அவர்கிட்ட சொல்லவேயில்ல.
.

Comments

மீ த ஃபர்ஸ்ட்...? பல்பு ரொம்பப் பிரகாசமா எரியுது? இனிமே செய்தி வாசிப்பாளர்களைப் பத்தி எழுதும்போது நான் ஜாக்கிரதையா இருக்கணுமே! :-)
Chitra said…
ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு இன்னைக்கு வரைக்கும் அவர்கிட்ட சொல்லவேயில்ல.


....அழகு மகள் - அன்புள்ள அம்மா.... சூப்பர்!!!
//பொறுமையா பாத்துகிட்டிருந்த மேனேஜர் என்கிட்ட வந்து ”இனிமே சாகுறவரைக்கும் உன்கிட்ட லைவ் ஷோ பண்ண சொல்லி கேட்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனாரு.//

எப்படி சொல்லுவாரு?
//பொறுமையா பாத்துகிட்டிருந்த மேனேஜர் என்கிட்ட வந்து ”இனிமே சாகுறவரைக்கும் உன்கிட்ட லைவ் ஷோ பண்ண சொல்லி கேட்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனாரு.//

எப்படி சொல்லுவாரு?
முடிவில சொன்னீங்களே அந்த காலர் பற்றி, ஹா....ஹா...
பல்பு வாங்கினமாறி தெரியலே..
உங்க மேனேஜருக்கு கொடுத்த மாறி தெரியுது..

பாவம் தான் மேனேஜர்.. ஹா..ஹா
dharumi said…
//நான் தான் கேமராவ பாக்காம போன் பண்றவங்க முகத்தைப் பார்த்து பேசிட்டிருந்தேன். //

நீங்களே போட்டுக் குடுத்துருவீங்க போலும்! அதான் டாமேஜர் அப்டி ஆய்ட்டார்.
//போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு //

அம்மா அளவு ஸ்மார்ட்டா இருக்க வேணாமா? இப்படி பல்பு வாங்கிட்டு ...!
Balaji saravana said…
ஹா ஹா.. அதுக்கு அப்புறம் அந்த மேனேஜர மறுபடியும் பார்த்தீங்களா?
வெயில் படத்துல பாவனா பண்ற லைவ் புரோகிராம் நினைவுல வந்து போகுது...
நைஸ்..
kalai said…
amma kapathitanga thanks sonengala?
//வேறொரு நிகழ்ச்சில சந்திக்கிறேன்னு ஈஈ“னு சிரிச்சுகிட்டே முடிச்சேன்.//

முதல் புகைப்படம் மாதிரியா!! :-)
surivasu said…
//அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா //
சூப்பர்....
////(அழகுக்கு அழகா?)////

இது கொஞ்சம்... இலையில்ல... ஓவர் ஓவராத்தான் தெரியுது...!

சரிங்க...!
"பல்பு"ன்னா என்னாங்கோ...?

கல்லுகில்லு ஏதும் பறக்கலையா...?
எங்களுக்கே... பல்பா..?

நட்புடன்...
காஞ்சி முரளி...
இந்திரா! அருமை! ரொம்ப இயல்பா நகைசுவையா எழுதி இருக்கீங்க. நேரம் இருக்கும் போது மத்த பதிவுகளையும் படிச்சி பாக்குறேன்.

என்னை அன்போடு அழைச்சதற்கு நன்றி தோழி!
Jey said…
பல்பு வாங்குனது உங்க மேஜராட்டம் இருக்குதே அம்மனி..., சரி எத்தினி வாட்ஸ்னு சொல்லவே இல்லை?!!!!.

நல்லா சிரிச்சேன்...:)
மேடம் , உண்மையில் பல்பு வாங்கியது உங்க மேனேஜர் தான்!

:)

நல்லா சிரிச்சேன்!
அன்னு said…
ஆஹா...கடைசி லைன்ல இப்படி ஒரு பன்ச் இருக்குன்னு தெரியாம போச்சு பாருங்க. ஆனாலும் உங்க அனுபவம் அருமையான அனுபவம். செயற்கையா சிரிச்சிகிட்டு செயற்கையா பேசிக்கற மத்தவங்களுக்கு மத்தியில இப்படி இயற்கையா இருக்க நினச்ச, செஞ்ச உங்களுக்கு மீண்டுமொரு சான்ஸ் தந்தே ஆகணும். இல்லியா?
//ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு இன்னைக்கு வரைக்கும் அவர்கிட்ட சொல்லவேயில்ல.//

அதான் அம்மா! அம்மான்னா சும்மா இல்லைடா!
“கிருஷ்ணக்கடவுளுக்கு இது மிகப்பிடிக்கும். புரதச்சத்து இதில் அதிகம்“. இது தான் அந்தக் கேள்வி. காலர் என்னய திட்னாங்களா இல்ல பதில் சொன்னாங்களானு தெரில, “வெண்ணை“னு சொன்னாங்க. Ha Ha Ha
ஆஹா.. ரொம்ப பிரமாதமா ஒளிருது...
siva said…
hm template nalla erukunga.
R.Gopi said…
ஆஹா...

பல்பு நல்லா பிரகாசமா தான் எரிஞ்சு இருக்கு....

நீங்க நெஜமாவே நல்லா செய்தி வாசிப்பீங்களா?

இன்றைய சிறப்பு செய்தி என்னாங்கோ?
J said…
// தாரணமா கையசைத்து Hello Viewers’னு ஸ்டைலா ஆரம்பிக்கிறதுக்கு பதிலா ஏதோ கோயில்ல சாமி கும்பிட்ற மாதிரி ரெண்டு கையெடுத்து கேமராவ கும்பிட்டு வணக்கம்னு சொன்னேன். அப்பவே மேனேஜருக்குப் புரிஞ்சிருக்கணும். //

// த மறந்துட்டு ஏதோ வீட்ல பேசுற மாதிரி (கேமராவுக்கு என் உச்சந்தலையைக் காட்டியபடி குனிஞ்சு) ஸ்பீக்கருக்குப் பக்கத்துல முகத்தைக் கொண்டு போய் அவங்க கிட்ட பேசினேன். என் மேனேஜர் அவ்வளவு தான், அவரோட தலையில கைவச்சிட்டாரு //

// முதல் பாட்டு ஓடிமுடிக்கிறவரைக்கும் என்னோட மேனேஜர் என்ன நல்லா திட்டி தீத்துட்டார். //
at a Time ல ரெண்டு பாட்டா ????

// மேனேஜர் என்கிட்ட வந்து ”இனிமே சாகுறவரைக்கும் உன்கிட்ட லைவ் ஷோ பண்ண சொல்லி கேட்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனாரு.//

chance y illa . . . very nice !!!
அடடா , ஒரு நல்ல வாயிப்பு மிஸ் ஆகிப்போச்சே ?
மதி said…
சாதாராணமா இந்த டிவி தொகுப்பாளினிகள்கிட்ட பார்க்க முடியாத ரெண்டு விஷயம் - நல்ல தமிழ் எழுத்தறிவு, நேர்மையான சுய விமர்சன நகைச்சுவை.. ரசித்தேன். வாழ்த்துகள் இந்திரா... முடிஞ்சா என் பக்கத்துக்கும் வாங்க ..
www.sunshinesignatures.blogspot.com
//ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு இன்னைக்கு வரைக்கும் அவர்கிட்ட சொல்லவேயில்ல.//

என்னா....கிரிமினல்தனம்......
HariShankar said…
உங்களுக்கே உரித்தான பாணில ரொம்ப எதார்த்தமா, நகைச்சுவையா அருமையா எழுதி இருக்கீங்க. முடிவுலே சொன்ன திருப்பம் மிக அழகு.. உங்களுக்கே உண்டான ஸ்டைல் அது... :)

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்