இப்படிக்கு உன் காதல்மிராண்டி....



முத்தங் கக்கியே என்னைச் சாகடித்த

என் முத்தக் காட்டேரிக்கு..

.

கடித வழக்கப்படி நலம், நலமறிய ஆவல் என்று எழுதப்போவதில்லை.

நலக்குறைவு தான் காதலர்களின் உண்மையான நலம்.

அப்போது தான் புறங்கையில்

கழுத்தைத் தொட்டுப்பார்த்து

ஜுரம் குறைந்திருக்கிறதா? என்றும்

வயிற்றை அழுத்திப் பார்த்து

இப்போது வயிற்று வலி எப்படி இருக்கிறது? என்றும்

கேட்க முடியும்.

.

இருப்பினும்,

உன் சௌக்கியத்தின் சதவிகிதத்தில்

என் நலத்தை நான் அறிவேன்.

அது போல

உன் நாடித்துடிப்பில்

என் சௌக்கியத்தை நீயே சரிபார்த்துக்கொள்.

.

போன முறை நீ எனக்கு எழுதிய கடிதத்தில்

உன்னைச் செல்லமாக

எப்படிக் கூப்பிடுவது என்று கேட்டு எழுதியிருந்தாய்.

.

சூரியன், சூரியகாந்தியை

எந்த உறவுமுறையில் கூப்பிடும்..

சொல்ல முடியுமா உன்னால்?

.

சேவல், விடியலை

எந்த அடைமொழியில் கூப்பிடும்..

பதில் தெரியுமா உனக்கு?

.

என் கவிதைக்காரியே....

.

அருவி அலறித்தான்

யாரையம் கூப்பிடும்.

.

மரம் தலையாட்டித்தான்

அழைக்கும் எவரையம்.

.

அழைப்பதும் கூப்பிடுவதும்

அதனதன் வெளிப்பாடு.

.

பெயர் சொல்லி அழைப்பது

மனித நடைமுறையின் எதார்த்தம் என்றால்

பெயர் விடுத்து

வாய்க்கு வந்த வார்த்தைகளால்

கூப்பிடுவது அதீத அன்பின் அத்துமீறல்களே!

.

காற்று புகாத குழலில் இசையில்லை.

அத்து மீறாத அன்பில் காதலில்லை.

.

அளவுக்கு மீறிய அமுதத்தில் விஷம்.

அத்து மீறிய அன்பில் விஷமம்.

காதலில் விஷமம் அவசியம்.

அந்த விஷமங்களின் கால் பங்கை நிரப்புவது

இந்தச் செல்லப்பெயர்களே..

.

காதலில் மரியாதை என்பது

மடமை.

ஆகவே என்னை “மடையா“ என்று கூப்பிடு.

.

காதலில் கௌரவம் என்பது

கர்வம்.

ஆகவே என்னைப் “பொறுக்கி“ என்று கூப்பிடு.

.

சொந்தப் பெயரில் இல்லாத பெருமை

காதலி கூப்பிடும் பட்டப் பெயர்களில் இருக்கிறது.

.

பசுவின் தாய்மை

கன்றுக் குட்டியை நாவால் நக்கும்போது.

.

நாயின் நன்றி

வாலை ஆட்டிக் குழையும்போது.

.

காதலின் மகிமை

நீ என் தலையில் அடித்து

என்னை “முட்டாள்“ என்று திட்டும்போது.

.

உனக்குக் காதலன் என்ற முறையில்

உன் காதோடு ஒன்று சொல்கிறேன்.

உன் வாய்க்கு வந்த வார்த்தைகளாலெல்லாம் கூப்பிடு.

வாய்ப்புக் கிடைத்தால்

வரையறுக்கப்படாத வார்த்தைகளாலும்

என்னைக் கூப்பிடு.

.

எப்படி உன் உள்ளங்கை சிவக்கச் சிவக்க

மருதாணி உன்னைக் கூப்பிடுகிறதோ..

அப்படியே

உன் உதடுகள் சிவக்கச் சிவக்க

நீ என்னை

எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொண்டே இரு.

.

உனக்கொன்று தெரியுமா?

“டூ“ விட்டுக் கொள்ளாத நட்பும்

“டா“ போட்டுக் கூப்பிடாத காதலும் பாழ்

.

---

காதலிக்கிறேன்

என்ற இருமாப்புடன் நீ எனக்கு வைத்த

செல்லப் பெயர்களுடன்...

... உன் காதல்மிராண்டி.

.

.

(இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க)

.

Comments

:) நல்லாயிருக்கே!
ஜெ.ஜெ said…
ஆஹா... சூப்பர்.. :)
Arun Prasath said…
அட அட பொங்கி வழியுது... காதல்
karthikkumar said…
கடைசி அடைப்புக்குள் இருக்கும் வரிகள் மிகவும் அருமை..... :))
ரொம்பப் பிரமாதம்..

this is one of your best..

God Bless You.,.
ponsiva said…
Supero super nga
sulthanonline said…
காதலர்களுக்குள் மரியதை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லைன்னு சொல்றிங்க சரிதான். காதலி கூப்பிடும் செல்லப்பெயரில்தான் அவளுடைய காதல் மற்றும் நம் மேல் அவள் வைத்திருக்கும் உரிமை தெரிகிறது. ஒத்துக்கிரேன் உங்க கடிதத்த.....!
கடிதம் நல்லாருக்கே எப்படி....?
/////(இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க)/////

அதானே பார்த்தேன்........
அய்யோ அம்மா...ஆரம்ப வரிகள் ரொம்ப பயமாயிருக்கே...
காட்டுமிராண்டி காதலா இருக்கும்போல

நல்லாருக்குங்க....
அடி ஆத்தி..படிக்கும் போதே இத்தனை அழகான வித்தியாசமான கவிதையை எப்படி பாராட்டுவது உன்னை தனியா எப்படி பாராட்டுவதுன்னு யோசிச்சிகிட்டே படிச்சேன் எப்பவும் போல பல்பு நல்லவேளை கவிதைக்கு கமெண்ட் போடும் வேளை மட்டுமே உங்களை பாராட்டும் வேளை வெகுவாய் குறைந்தது..

மிகவும் இரசனையாய் எழுதப்பட்ட கடிதம் காதலோடு..
sulthanonline said…
ஆஹா..! (இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க) இதை பார்க்காமல் நல்லா இருக்குன்னு comment போட்டுட்டேனே! பரவாயில்ல உங்க சுட்ட கவிதை நல்லா இருக்கு
//முத்தங் கக்கியே என்னைச் சாகடித்த

என் முத்தக் காட்டேரிக்கு..//



ஆரம்பமே அசத்தல் போங்க...
சுட்டதுன்னாலும்.. சுத்தமா சுட்டிருக்கீங்கல்ல..அதுக்கும் மேல எங்களோட பகிர்ந்துகிட்டீங்கல்ல...

அதுக்கே நன்றி சொல்லனும்.
S Maharajan said…
//காற்று புகாத குழலில் இசையில்லை.
அத்து மீறாத அன்பில் காதலில்லை//

அருமையான வரிகள்

//(இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க)//

இன்று முதல் உண்மை விளம்பி என்றும் அழைக்கபடுவீராக
நீங்கள் கேட்ட தொடர்பதிவை மேலே எழுதிருக்கேன். ஹிஹி
முத்தங் கக்கியே என்னைச் சாகடித்த

என் முத்தக் காட்டேரிக்கு..

.

கடித வழக்கப்படி நலம், நலமறிய ஆவல் என்று எழுதப்போவதில்லை.

நலக்குறைவு தான் காதலர்களின் உண்மையான நலம்.

அப்போது தான் புறங்கையில்

கழுத்தைத் தொட்டுப்பார்த்து

ஜுரம் குறைந்திருக்கிறதா? என்றும்

வயிற்றை அழுத்திப் பார்த்து

இப்போது வயிற்று வலி எப்படி இருக்கிறது? என்றும்

கேட்க முடியும்.

.

இருப்பினும்,

உன் சௌக்கியத்தின் சதவிகிதத்தில்

என் நலத்தை நான் அறிவேன்.

அது போல

உன் நாடித்துடிப்பில்

என் சௌக்கியத்தை நீயே சரிபார்த்துக்கொள்.

.

போன முறை நீ எனக்கு எழுதிய கடிதத்தில்

உன்னைச் செல்லமாக

எப்படிக் கூப்பிடுவது என்று கேட்டு எழுதியிருந்தாய்.

.

சூரியன், சூரியகாந்தியை

எந்த உறவுமுறையில் கூப்பிடும்..

சொல்ல முடியுமா உன்னால்?

.

சேவல், விடியலை

எந்த அடைமொழியில் கூப்பிடும்..

பதில் தெரியுமா உனக்கு?

.

என் கவிதைக்காரியே....

.

அருவி அலறித்தான்

யாரையம் கூப்பிடும்.

.

மரம் தலையாட்டித்தான்

அழைக்கும் எவரையம்.

.

அழைப்பதும் கூப்பிடுவதும்

அதனதன் வெளிப்பாடு.

.

பெயர் சொல்லி அழைப்பது

மனித நடைமுறையின் எதார்த்தம் என்றால்

பெயர் விடுத்து

வாய்க்கு வந்த வார்த்தைகளால்

கூப்பிடுவது அதீத அன்பின் அத்துமீறல்களே!

.

காற்று புகாத குழலில் இசையில்லை.

அத்து மீறாத அன்பில் காதலில்லை.

.

அளவுக்கு மீறிய அமுதத்தில் விஷம்.

அத்து மீறிய அன்பில் விஷமம்.

காதலில் விஷமம் அவசியம்.

அந்த விஷமங்களின் கால் பங்கை நிரப்புவது

இந்தச் செல்லப்பெயர்களே..

.

காதலில் மரியாதை என்பது

மடமை.

ஆகவே என்னை “மடையா“ என்று கூப்பிடு.

.

காதலில் கௌரவம் என்பது

கர்வம்.

ஆகவே என்னைப் “பொறுக்கி“ என்று கூப்பிடு.

.

சொந்தப் பெயரில் இல்லாத பெருமை

காதலி கூப்பிடும் பட்டப் பெயர்களில் இருக்கிறது.

.

பசுவின் தாய்மை

கன்றுக் குட்டியை நாவால் நக்கும்போது.

.

நாயின் நன்றி

வாலை ஆட்டிக் குழையும்போது.

.

காதலின் மகிமை

நீ என் தலையில் அடித்து

என்னை “முட்டாள்“ என்று திட்டும்போது.

.

உனக்குக் காதலன் என்ற முறையில்

உன் காதோடு ஒன்று சொல்கிறேன்.

உன் வாய்க்கு வந்த வார்த்தைகளாலெல்லாம் கூப்பிடு.

வாய்ப்புக் கிடைத்தால்

வரையறுக்கப்படாத வார்த்தைகளாலும்

என்னைக் கூப்பிடு.

.

எப்படி உன் உள்ளங்கை சிவக்கச் சிவக்க

மருதாணி உன்னைக் கூப்பிடுகிறதோ..

அப்படியே

உன் உதடுகள் சிவக்கச் சிவக்க

நீ என்னை

எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொண்டே இரு.

.

உனக்கொன்று தெரியுமா?

“டூ“ விட்டுக் கொள்ளாத நட்பும்

“டா“ போட்டுக் கூப்பிடாத காதலும் பாழ்

.

---

காதலிக்கிறேன்

என்ற இருமாப்புடன் நீ எனக்கு வைத்த

செல்லப் பெயர்களுடன்...

... உன் காதல்மிராண்டி.
எப்பா...கவிதைலையே மெரட்டுரீங்களே சகோ....
இந்த கவிதைக்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்...

எந்த வரியையும் விட்டுவிட முடிவதற்கில்லை...

ஆழமான வார்த்தைகள்..கோர்வையாக...

அழகு...

அன்புடன்
ரஜின்
//இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க//

ஆஹா ஆர்வத்துல இந்த லைன படிக்க உட்டுடேனே,...பரவா இல்லை..இதை உணமையாக ஒப்புக்கொண்ட உங்களின் நேர்மைக்கு ஒரு குட்டி சல்யூட்..

அன்புடன்
ரஜின்
நல்லாத்தான போச்சி.கடைசில கவுத்துட்டீங்களே!
நல்லாயிருக்கே. ஒரு வேளை நீங்க எழுதாததினாலையோ...
Balaji saravana said…
சூப்பர்! ரொம்ப அருமையா இருக்கே, நம்ம இந்திராவானு நினைச்சுக்கிட்டே இருந்தேன். கடைசில தான் தெரியுது ;)
நல்ல இருக்குங்க . ரசித்து பகிர்ந்தமைக்கு நன்றி
Chitra said…
(இந்தக் கடிதம் ஒரு புத்தகத்தில் சுட்டது. நான் ஜிந்திச்சது இல்லங்க)


...Thank you for sharing it.
R.Gopi said…
வித்தியாசமா இருந்தது...

பகிர்வுக்கு நன்றி....

//“டூ“ விட்டுக் கொள்ளாத நட்பும்

“டா“ போட்டுக் கூப்பிடாத காதலும் பாழ்//

என்னை கவர்ந்த வரிகள் இவை....
Sorry...! for the distabance...!
ரொம்ப அருமையாயிருக்கு..


















டிஸ்கி :-)))))))))
nigdyn said…
thanks for sharing this....
//பெயர் சொல்லி அழைப்பது

மனித நடைமுறையின் எதார்த்தம் என்றால்

பெயர் விடுத்து

வாய்க்கு வந்த வார்த்தைகளால்

கூப்பிடுவது அதீத அன்பின் அத்துமீறல்களே!//
wonderful lines....
மிக அருமை மிக மிக அருமை
எழுதியவர் யாரோ அறியத்தருவீரோ அம்மையாரே :)

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..