மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..இன்னைக்கு சமுதாயத்துல நடக்குற எவ்ளவோ அனாவசியமான விழாக்களில் மட்டமான, மிகவும் கேவலமான ஒரு விழானு சொன்னா அது குடும்பங்கள்ல நடக்குற “பூப்புனித நீராட்டு விழா“ தான். “வயசுக்கு வந்துட்டா“னும் “பெரிய மனுஷியாயிட்டா“னும், பெண்களின் உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண மாற்றத்திற்கு, தனியாக ஒரு விழாவே எடுத்துக் கொண்டாடும் அசிங்கம் இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருமுட்டைகளோடு பிறக்கிறாள். பெண் வயதுக்கு வந்தபின் மாதம் ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து கருப்பையை நோக்கி நகர்கிறது. முதல் கருமுட்டை முதிச்சியடைந்து வெளிவருவதையே வயதுக்கு வருதல் என்று கூறுகிறார்கள். இது அவள் கருவுறுதலுக்குத் தகுதியாகும் அறிகுறியாகும்.
இது சராசரியாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு தான். இது சந்தோசமான மாற்றம் தான். ஆனாலும் இதுல விளம்பரப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? இது தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக்கிற மாதிரியான செயல் தான்.
அந்தக் காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து
கொடுத்து விடுவது வழக்கமாயிருதுச்சு. பால்ய விவாகங்கள் அதிகமாக இருந்த காலம் அது. தகவல் தொழில்நுட்பங்கள் குறைவாக இருந்ததால அவங்க வீட்டுப் பொண்ணு, வயசுக்கு வந்துட்டா, `எங்கள் வீட்டில் பெண் திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு வருபவர்கள் வரலாம்' என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள் நடத்தப் பட்டன. ஆனால் இன்றைய சூழலில் பெண் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் பற்றிய தொலைநோக்குப் பார்வை விரிவடைந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது இத்தகைய விழாக்கள் தேவையற்ற ஒன்று தான்.
முந்தைய நாள் வரைக்கும் அந்தக் குழந்தை சராசரியா சந்தோசமா விளையாடிகிட்டு இருக்கும். வயதுக்கு வந்ததும் ஏன் தான் இப்படி பாடாய்ப் படுத்துறாங்களோ தெரியல. அந்தச் சின்னப் பொண்ணுக்கு ஒரு சேலைய கட்டிவிட்டு, கழுத்துல மாலையப் போட்டு Chair’ல உட்கார வச்சு கண்காட்சிப் பொருளா ஆக்கிட்றாங்க. “மகா ஜனங்களே.. எங்க வீட்ல சைட் அடிக்கிறதுக்கு ஒரு ஃபிகர் இருக்கு“ங்குற மாதிரி, அந்தப் பொண்ணு வயசுக்கு வந்தத தண்டோரா போட்டு எல்லாருக்கும் சொல்றாங்க. இந்தப் பழக்கம் எப்ப தான் மாறுமோ..
தனக்கு என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்குற அளவுக்கு கூட அந்தப் பொண்ணுக்குப் பக்குவம் இருக்காது. ஏதோ திருவிழால காணாமப் போன குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கும். பத்திரிக்கை அடிச்சு பந்தல் போட்டு மைக்செட்டெல்லாம் வச்சு பெரிய விழாவாகக் கொண்டாடி மொய் என்ற பேரில் வசூல் செய்யும் முட்டாள்தனம் இன்னமும் நடக்குது.
என்னதான் கலாச்சாரம், வழிவழியாக வந்த பழக்கம்னு சொன்னாலும் ஒரு சின்னப் பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து வேடிக்கை காட்டுவது முட்டாள்தனம் தான். நன்கு படித்தவர்கள், பக்குவமடைந்தவர்கள் கூட இது மாதிரியான விழாக்களை நடத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர். இந்தப் பாழாய்ப்போன சமூகம் இவர்களை இப்படியே பழக்கி வைத்துவிட்டது. இதுபோன்ற விசேஷங்களைத் தங்களுடைய பகட்டுகளைக் காட்டுவதற்கெனவே நடத்தும் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை.
இத்துடன் எனது நூறாவது பதிவை முடிக்கிறேன்.
அடுத்த பதிவில் சந்திப்போம்..
.

Comments

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள.
///இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை///

true
டும்டும்...டும்டும்..

கண்டிப்பாக... தவிர்க்க வேண்டிய விஷயம்.நீங்கள் ' பூப்பு நீராட்டு'என தலைப்பிட்டிருந்தால் இன்னும் நிறைய பேருக்கு விஷயம் சென்றடைந்திருக்கும்.
இன்னும் பல நூறு பதிவுகள் தர வாழ்த்துகிறேன்..
இந்த சமூகம் யோசிக்க வேண்டிய விஷயம்..
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

பதிவுலகில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
அணைத்து பெண் குழந்தைகளிடமும் இந்த மனோ பாவம் வரவேண்டும். வீட்டில் உள்ளவர்கள் "அதனை சிறப்பாக நடத்த வேண்டும் " என்று சொன்னால் கூட "வேண்டாம் " என்று மறுக்கும் தெளிவும் அறிவும் வேண்டும். வீணாக எது எதற்கோ ஆர்பாட்டமாக அலம்பல் செய்யும் பெண்கள் இந்த விஷயத்தில் அடங்கிபோவது ஏன்? இது இன்றைய கால கட்டத்தில் தேவையற்ற கொண்டாட்டம் என்று தெரியவில்லையா? மகளிர் அணிகளே இதை முடிவு செய்யவேண்டும். இதையே சாக்காக வைத்துக்கொண்டு முறைகாரர்கள் பண்ணும் அட்டகாசம் ,கறிசோறு, சாராயம் ,ஆட்டம் ,பாட்டம் என ஒரே காட்டு மிராண்டித்தனம் .இதுதான் தமிழர் பண்பாடு என்பார்கள்.

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ரேவா said…
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள.
Ramani said…
இன்றைய நிலையில் என்கிற வார்த்தையை
மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்
இன்று தகவல் தொடர்பில் நூறு சதவீதம் முன்னேறியிருக்கும்
நாம் அன்றைய நிலையில் மிக மோசமான
நிலையில் இருந்தோம்
அன்று அது தேவையாகக் கூட இருந்திருக்கலாம்
இன்றைய நிலையில் இது தேவையா என்கிற
கேள்வி நிச்சயம் நியாயமானதே
சமூக உணர்வுள்ள பதிவுக்கும்
நூறாவது பதிவுக்கும் எனது
மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
மிக அவசியமான பதிவு. இதே கருத்தில் என்னுடைய பதிவு

http://ambikajothi.blogspot.com/2010/09/blog-post_20.html

பூப்புனித நீராட்டு விழாக்கள்.., விளம்பரம் தேவையா..?
பொ.முருகன் said…
நல்லக்கருத்து,இப்படிக்கு ரெண்டு பென் களுக்கு மஞ்சள் நீராட்டு விழா {வேறு வழியில்லாமல்} நடத்திய தகப்பன்.
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
//இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை.///

உண்மையான வரிகள்...
சடங்குகளுக்கு உள்ள உள்ளார்ந்த அர்த்தம் தெரியாமல் வெறுமனே பேசாதீர்கள்..
//தோழி பிரஷா said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள.//


நன்றி தோழி..
//# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த சமூகம் யோசிக்க வேண்டிய விஷயம்..//


உண்மை தான் சௌந்தர்
//நையாண்டி மேளம் said...

டும்டும்...டும்டும்..

கண்டிப்பாக... தவிர்க்க வேண்டிய விஷயம்.நீங்கள் ' பூப்பு நீராட்டு'என தலைப்பிட்டிருந்தால் இன்னும் நிறைய பேருக்கு விஷயம் சென்றடைந்திருக்கும்.//

தங்களது கருத்துக்கு நன்றி
//தோழி பிரஷா said...

///இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை///

true//


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்
//middleclassmadhavi said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

பதிவுலகில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!//


வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி மாதவி
//# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னும் பல நூறு பதிவுகள் தர வாழ்த்துகிறேன்..//


நிச்சயமாக..
வாழ்த்திற்கு நன்றிகள்
//Ramani said...

இன்றைய நிலையில் என்கிற வார்த்தையை
மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்
இன்று தகவல் தொடர்பில் நூறு சதவீதம் முன்னேறியிருக்கும்
நாம் அன்றைய நிலையில் மிக மோசமான
நிலையில் இருந்தோம்
அன்று அது தேவையாகக் கூட இருந்திருக்கலாம்
இன்றைய நிலையில் இது தேவையா என்கிற
கேள்வி நிச்சயம் நியாயமானதே
சமூக உணர்வுள்ள பதிவுக்கும்
நூறாவது பதிவுக்கும் எனது
மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்//


கருத்திற்கும் வாழ்த்திற்கும் என் நன்றிகள்
//ரேவா said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள.//


நன்றி ரேவா
//கக்கு - மாணிக்கம் said...

அணைத்து பெண் குழந்தைகளிடமும் இந்த மனோ பாவம் வரவேண்டும். வீட்டில் உள்ளவர்கள் "அதனை சிறப்பாக நடத்த வேண்டும் " என்று சொன்னால் கூட "வேண்டாம் " என்று மறுக்கும் தெளிவும் அறிவும் வேண்டும். வீணாக எது எதற்கோ ஆர்பாட்டமாக அலம்பல் செய்யும் பெண்கள் இந்த விஷயத்தில் அடங்கிபோவது ஏன்? இது இன்றைய கால கட்டத்தில் தேவையற்ற கொண்டாட்டம் என்று தெரியவில்லையா? மகளிர் அணிகளே இதை முடிவு செய்யவேண்டும். இதையே சாக்காக வைத்துக்கொண்டு முறைகாரர்கள் பண்ணும் அட்டகாசம் ,கறிசோறு, சாராயம் ,ஆட்டம் ,பாட்டம் என ஒரே காட்டு மிராண்டித்தனம் .இதுதான் தமிழர் பண்பாடு என்பார்கள்.

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//

உங்கள் கருத்துக்களும் உண்மைதான். இது வெறும் பகட்டுக்காக நடக்கும் நிகழ்ச்சிதானே தவிர வேறெதுவுமில்லை.

வாழ்த்திற்கு நன்றி.
//B.MURUGAN said...

நல்லக்கருத்து,இப்படிக்கு ரெண்டு பென் களுக்கு மஞ்சள் நீராட்டு விழா {வேறு வழியில்லாமல்} நடத்திய தகப்பன்.//

உங்கள் ஆதங்கம் புரிகிறது முருகன்.
என்ன செய்ய.. இந்த சமுதாயம் அப்படி பழக்கி வைத்துள்ளது. ஆனாலும் இது மாற வேண்டுமென்பதே என் கருத்து.
//அம்பிகா said...

மிக அவசியமான பதிவு. இதே கருத்தில் என்னுடைய பதிவு

http://ambikajothi.blogspot.com/2010/09/blog-post_20.html

பூப்புனித நீராட்டு விழாக்கள்.., விளம்பரம் தேவையா..?//


கருத்துக்கு நன்றி அம்பிகா..
இதோ உங்கள் தளம் வருகிறேன்.
//நிகழ்காலத்தில்... said...

:)//


வருகைக்கு நன்றி..
(அபராதக் கண்டிசனைப் பார்க்கவில்லையா??)
//சே.குமார் said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான பதிவு...!//


வாங்க பன்னி சார்..
ரொம்ப நாளைக்கப்புறம் இங்குட்டு வறீங்க..
நன்றிங்க..
//சங்கவி said...

//இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை.///

உண்மையான வரிகள்...//


கருத்திற்கு நன்றி சங்கவி.
//சமுத்ரா said...

சடங்குகளுக்கு உள்ள உள்ளார்ந்த அர்த்தம் தெரியாமல் வெறுமனே பேசாதீர்கள்..//


ஓ அப்படியா??
சரி உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்களேன்..
நாங்களும் தெரிந்துகொள்கிறோம்..
அப்படி என்ன உள்ள்ள்ள்ளாஆஆஆர்ந்த அர்த்தம் இருக்கிறது என்று????
logu.. said…
\\ “மகா ஜனங்களே.. எங்க வீட்ல சைட் அடிக்கிறதுக்கு ஒரு ஃபிகர் இருக்கு“\\

ஹி..ஹி..
ஹிஹிஹிஹிஹி...

ஹா..ஹ..ஹா..ஹி..ஹீ..

ஊஹ்..ஓஹ்ஹ்..
logu.. said…
100-ஆவது பதிவுக்கு வழ்த்துகள்.
இப்போ எல்லாம் இந்த விழா நடக்குத என்ன? எனக்கு தெரிஞ்சு நான் கேள்வி பட்டு ரொம்ப நாள் ஆச்சு ,
கடசிய மைனா சினிமா ல பார்த்ததோட சரி ...
நகர் புற மக்கள் இப்போ இதெல்லாம் கொண்டாடுறது இல்லன்னு நினைக்குறேன் ,
சிட்டி மக்களுக்கு , அவங்க பொண்ணு , டாக்டர் க்கு , இன்ஜினியரிங் படிக்க வைக்க என்ன பண்ணலாம் , எங்க டியூஷன் அனுபலாம் ? , எங்க கோச்சிங் அனுப்பலாம்ன்னு தான் பாக்குறாங்க . இப்போ எல்லாம் பெண்கள் 12th முடிக்குரதுகுல்லையே பல கலைக்கல்ல தேர்ந்து வராங்க ,
may be சிறிய நகர் புறங்களில்லும் , கிராம புராங்களில்லும் வேன்னும்ன இந்த
மஞ்சள் நீராட்டு விழா நடாகாம்ன்னு நினைக்குறேன் . என்னக்கு தெரியல . . .
100-ஆவது பதிவுக்கு வழ்த்துகள்.. . .

ஆமா எது உங்களோடைய 100 ஆவது பதிவு ?
முன்னாடியே 100 ஆவது பதிவு போட்டாச்சு இல்ல?
இப்போ இந்த பதிவுக்கு ஏன் எல்லலரும் வாழ்த்து சொல்லுறாங்க?
என்ன மோ , எல்லாரும் சொல்லுறாங்க , நானும் சொல்லிட்டேன் .
கூட்டத்துல கோவிந்த ....... ஹி ஹி ஹி
ஐயையோ இதுதான் உங்க 100 ஆவது பதிவா ? நான்தான் தப்பா சொல்லிபுட்டேன் ....
சின்ன புள்ளைல இருந்தே நான் கணக்குல ரொம்ப இல்ல , ரொம்ப ரொம்ப வீக் .... ஹி ஹி ஹி
இப்பதான் விரல் விட்டு எண்ணி பார்த்தேன் கணக்கு கரெக்ட் ஆஹ இருக்கு .. 98 , 99 , 100
அவ்வவ்வ்வ்வ் . . . .
சிட்டியில இந்த காலத்து மக்கள் இதெல்லாம் இப்ப பண்றது இல்லனு நினைக்கிறேன்.. எதிர்காலத்துல இது கொஞ்சம் கொஞ்சமா போய்டும்.. செய்பவர்க்கு சொன்னாலும் புரியாது, அதில் ஈடுபடுத்தபடும் பெண் குழந்தைகளுக்கு அது என்னன்னே தெரியாது.. எதிர்காலத்துல இதெல்லாம் காணாம போய்டும்ங்க.. கல்யாணமே எதிர்காலத்துல இருக்குமா இல்லையான்னு தெரியாது.. இதுல இதெல்லாம் எங்க இருக்க போகுது..

வாட் ஐ ட்ரை டு சே ஈஸ்.. எந்திரனா மாறிவிட்ட உலகுல எப்பவாச்சும் தான் உறவுகள் ஒண்ணுகூடுது அதுக்கான சந்தர்ப்பமா இத நினச்சிகிடலாமா.???

டே கூர்.. நீ எந்தபக்கம் டா பேசுற.???
Ravindran said…
சிட்டி பகுதிகள்ல குறைஞ்சுக்கிட்டு வருது. கிராமத்துல இருக்கு. இந்த மடத்தனம் ஒழியனும். நல்ல பதிவு. நன்றி.
Jey said…
சரியான கருத்து. ஆனா இந்த மாதிரி கொண்டாடனும்னு பெரும்பாலும் வீட்டு அம்மணிகதான் விரும்புராங்க...


100க்கு வாழ்த்துக்கள்.
baleno said…
மிகவும் சரியான கருத்து.
நல்ல விழிப்புணர்வுடன் பதிவிட்டிருக்கிறீர்கள்.ஓ.. 100 வது பதிவில்லையா, பாராட்டுக்கள்.எனக்கு தெரிந்தவரை தமிழ் மக்களிடம் மட்டும்தான் இந்த மூடத்தனம் இருப்பதாக நினைக்கிறேன், இதை எனது வலைதளத்திலும் காப்பி பேஸ்ட் செய்ய அனுமதிக்கவும். நன்றி.
ஹேமா said…
இந்திரா....முதல்ல 100 ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி !

அடுத்து உங்களைவிட எனக்கு இந்தப்பதிவின் விஷயத்தில் சரியான கோவம்.என்ன சொல்ல இந்திரா.

சரி...எங்களின் கலாசார சடங்கு என்று வச்சுக்கொண்டாலும் அந்த நாளில் வயது வந்த பெரியவர்கள் சுத்திப்போடுகிறோம் கண்ணூறு கழிக்கிறோம் என்று சுத்திப்போடுவார்கள்.இவ்வளவும்தான் இந்தச் சடங்கு.

இன்றோ பணமும் நாகரீகமும் கூடி என்னென்ன அட்டகாசம் எல்லாம் செய்கிறார்கள்.இங்கு வெளிநாட்டில் நம்மவர்கள்...கடவுளே...ஹெலிக்கப்டரில் வந்து பூத்தூவுகிறார்கள்.இதைவிட அநியாயம் வேறென்ன சொல்ல !
வாழ்த்துக்கள், அவசியமான பதிவு.
sulthanonline said…
சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்டக்கூடிய பதிவு. 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
kathir said…
||ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..||

:)))))))))

-----
அவசியமான இடுகை.

மற்ற குழந்தைகளுக்கு நடக்கும் அலங்காரம், புதுத்துணி, கொண்டாட்டம் எனக் கவனித்த மற்ற குழந்தைகளும் தங்களுக்கும் தெரட்டி சீர் நடத்துவாங்கன்னு எதிர்பார்க்கவும் செய்யுது!

இது தடுக்கப்படவேண்டிய ஒரு நிகழ்வே!
மஞ்சள் நீராட்டு விழா என்றால் ஏதோ கோவில் திருவிழாவில் மஞ்சள் நீரை ஊற்றி விளையாடுவார்களே அது தானே இது பூப்பு நன்னீராட்டு விழா தானே தலைப்பை சரியாக வையுங்கள். நான் முதலாவதை நினைத்து வந்து ஏமாந்தேன்.
அரசன் said…
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ...
அரசன் said…
உங்களின் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன் ...
நீங்கள் கூறுவது போல் ஒரு சில பெண்கள் மட்டுமே ..
திருவிழாவில் காணா போனது மாதிரியும்
ஒன்றுமே தெரியாம முழிக்கிறது மாதிரியும்
இருக்காங்க,,

பெரும்பான்மையான பெண்கள் இதை பற்றிய
விவரங்கள் அனைத்தையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள் ...
தகவல் தோழில் நுட்பம் வளர்ந்து போச்சுங்க ,...

கிராமத்தில் மட்டும் தான் இப்படி ...
நகரத்தில் இப்படி இல்லையே ...
நல்ல பார்வை..

வாழ்த்துக்கள்- நூறாவது பதிவுக்கும் சேர்த்துத்தான்.

God Bless You
ரொம்ப கோபகாரரா இருப்பீங்களோ????? அப்படியெல்லாம் இருக்காது.. ஒரு நிமிட கோபமா தான் இருக்கும்.. எனக்கு இதெல்லாம் நடக்கலைங்க.. சோ எனக்கு கவலை இல்லீங்க..
100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
முற்போக்கு சிந்தனைவாதி மாதிரியே ஆக்ட் கொடுக்குறிங்களே!

நீங்க கருத்து மட்டும் தான் சொல்விங்களா?
TamilRockzs said…
தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

www.tamilrockzs.com

www.tamilrockzs.blogspot.com
mahavijay said…
100 வது பதிவுக்கு வாழ்த்துகள்..

இந்த கொடுமை இப்போ star hotel ல கூட நடக்குது.
நம்மாளுங்க திருந்தவே மாட்டாங்கப்பா...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
அன்னு said…
//“மகா ஜனங்களே.. எங்க வீட்ல சைட் அடிக்கிறதுக்கு ஒரு ஃபிகர் இருக்கு“ங்குற மாதிரி, அந்தப் பொண்ணு வயசுக்கு வந்தத தண்டோரா போட்டு எல்லாருக்கும் சொல்றாங்க. இந்தப் பழக்கம் எப்ப தான் மாறுமோ.. //

aanith tharamaana oru vishayathai 100vathu pathivaaga irakkiyirukkireergal.vaazththukkal sollavaa vishayaththai ninaithu kavalai kollavaa theriyavillai. enraalum menmelum nalpathivugalaith thara vaazthukkal ithiraakka. :))
அன்னு said…
101வது பதிவு இங்கிருந்து ஆரம்பியுங்கள் இந்திராக்கா. ஹெ ஹெ ஹெ...

http://mydeartamilnadu.blogspot.com/2011/04/blog-post_2488.html

எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்!!
கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
ஐம்பதாவது பதிவில் வாழ்த்திய... வாழ்த்துக்களுடன்...!

ரீப்ப்ப்பப்ப்ப்பபபிபிபிபிப்பிபிபிபிபிபிட்டு...!

காஞ்சி முரளி said...
நண்பியே...

ஐம்பது....
ஐநூறாகி...
ஐயாயிரமாக வளர...
"வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்.......!"

இன்று 100kku வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி....
//காஞ்சி முரளி //


வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி முரளி சார்..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..