நின்னைச் சரணடைந்தேன் (2)
வாசலில் சம்பிரதாய வரவேற்புகள்.. காதைக் கிழிக்கும் ஸ்பீக்கர்கள்.. அனைத்தையும் கடந்து உள்ளே சென்றனர் சித்தார்த்தும் காயத்ரியும். அப்போது தான் மாங்கல்யம் தந்துனானே வாசித்திருந்தார்கள் போலும்.. சராசரியான விசாரிப்புகளுக்கு பதில் சொல்லிவிட்டு மேடையேறினர். சித்தார்த்தின் கண்கள் மட்டும் தயக்கமாய் மேடையை சுற்றி வந்தது.. சாஹித்யா தென்படாதிருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
இருவரும் மணமக்கள் அருகில் சென்று தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து, வாங்கி வந்திருந்த பரிசுப்பொருளையும் கொடுத்தனர். வந்திருந்தவர்களில் பாதி, காயத்ரியின் உறவினர்கள் என்பதால் அவர்களோடு அரட்டையடிக்க உட்கார்ந்து விட்டாள். சித்தார்த்தும் தன் பழைய நண்பர்களின் வட்டத்துடன் சேர்ந்து கொண்டான்.
திருமணச் சடங்குகள் ஓரளவு குறைந்தவுடன், மணமக்கள் சம்பிரதாய உடைகளை மாற்றச் சென்றனர். அவர்கள் வரும்வரை வீடியோ கிராஃபர், கூட்டத்தினைப் பதிவு செய்துகொண்டிருந்தார்.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த்தின் இதயத் துடிப்பு திடீரென கூடுதலாகாத் துடித்தது.
“அது.. அது... சாஹித்யாவின் குரல்... அவளே தான்..“. மெதுவாக குரல் வந்த பக்கம் தலையைத் திருப்பினான். யாரைப் பார்க்கக்கூடாதென வேண்டிக்கொண்டிருந்தானோ அவள்..
அங்கே.. சாஹித்யா யாருடனோ பேசிக்கொண்டு நின்றிருந்தாள். இந்த நான்கு வருடத்தில் அவளிடம் பெரிதாக ஒன்றும் மாற்றமில்லை.. கையில் ஒரு ஆண் குழந்தை,
“அவளுடையதாக இருக்குமோ.. அதற்கு என் பெயர் வைத்திருப்பாளா? என்னையே வேண்டாமென்றவள்.. என் பெயரையா வைத்திருப்பாள்..“
“ச்சே நான் ஏன் இப்படி அல்லாடுகிறேன்.. அவள் என்னை நியாபகம் வைத்திருப்பாளா?“
“என்னைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது? அவளுடைய கண்களை நேருக்கு நேராக சந்திக்கும் தைரியம் எனக்கில்லை. அவளுடைய ஏளனமான பார்வையை எதிர்நோக்கும் சக்தி எனக்கில்லை.“
“அவளை மறக்க முடியால் நான் தவித்துக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியுமா?? ஒருவேளை இந்த மண்டபத்தில் என்னைத் தேடியிருப்பாளா? என்னைப் பார்க்கும் ஆவல் அவளுக்கும் இருக்குமா??“
“ஆண்டவா.. எனக்கேன் இந்த நிலைமை? அவளுடைய பார்வையில் நான் பட்டுவிடக்கூடாது. ஒரு புழுவை விடக் கேவலமாக என்னை அவள் நோக்குவதை என்னால் தாங்க முடியாது.“
சாஹித்யா தன்னைப் பார்ப்பதற்குள் கிளம்பிவிடலாமென முடிவு செய்து காயத்ரியைத் தேடினான். அவளைக் காணவில்லை.
“ச்சே.. இந்த நேரம் பார்த்து காயத்ரி எங்கே போய்விட்டாள்..“ தன்னையே நொந்து கொண்டவனாய் சுற்றும் முற்றும் தேடினான்.
உள்ளுக்குள் வேதனையிருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், சாஹித்யாவின் பார்வையில் பட்டுவிடாதபடி முடிந்தவரை விலகிச் சென்றான்.
“இந்த காயத்ரி எங்க தான் போனாளோ.. சொந்தக்காரவுங்கள பாத்துட்டா போதுமே.. உலகத்தயே மறந்துட்டா போல“ மெல்லிய கோபம் எட்டிப்பார்க்க, அவளைத் துலாவினான்.
மேடையில் குட்டி குட்டி வாண்டுகள் இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருந்தன. கூட்டத்திலுள்ளவர்கள் தனித்தனி வட்டங்களாகப் பிரிந்துகொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் சராசரியாய் இருக்க, சித்தார்த்துக்கு மட்டும் இருப்புக்கொள்ளவில்லை. மண்டபத்திலிருந்து கிளம்புவதே அவனுடைய எண்ணமாக இருந்தது.
காயத்ரியைத் தேடியவாறு மேடையை ஒட்டி நடந்து சென்றவன் சட்டென நின்றான். பார்வை மணமகன் அறைக்குள் ஊடுருவி நின்றது. அங்கே ரமேஷும் காயத்ரியும் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. இவள் இங்கே என்ன செய்கிறாள்??
தான் இங்கே அல்லல்பட்டுக் கொண்டிருக்க, இவள் சாவகாசமாக ரமேஷிடம் பேசிக்கொண்டிருக்கிறாளே என் எரிச்சலடைந்தான். அறை நோக்கி வேகமாக நடந்தவனின் அடி, அவர்களின் பேச்சுச் சத்தம் கேட்டு மெதுவாகக் குறைந்தது.
அது சகஜமான உரையாடல் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது சித்தார்த்துக்கு. அப்படி என்ன பேசுகிறார்கள்.. காதைத் தீட்டினான். சற்றும் எதிர்பார்க்காத அவர்களின் அந்த உரையாடல் அவனை அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
(தொடரும்..)
.
.
Comments
கலக்கற இந்திரா...
ஜாமீன் கிடைக்கிலியா?
:)
கதை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.
அடுத்த பாகம் ரிலீஸ் எப்போ?
தல சி.பி.செந்தில்குமார், இந்திரா பாரதியார் ரேஞ்சுல நின்னையே சரணடைந்தேன்னு டைட்டில் வச்சா, நீங்க டைரக்டர் சரண் ரேஞ்சுக்கு கம்பேர் பண்றீங்களே!! நியாயமா தல?
மிகத் தெளிவாக உங்களுக்கு தெரிந்திருக்கிறது
நல்ல படைப்பு தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
ஆமா என்ன பேசியிருப்பாங்க? குடும்ப சிக்கல் வேண்டாம் தோழி.. :P
Ashwin Arangam
(மேடம் ட்ரீட் இன்னும் வரல. நியாபகம் இருக்கட்டும் )
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
அடுத்த வாட்டி அருவாளோட வறோம்.
நல்ல முயற்சி... கதை ரொம்ப இன்டரஸ்டா போகுது...
கலக்கற இந்திரா...//
நன்றி சங்கவி
என்னது மறுபடியும் தொடருமா?//
ஹிஹிஹி
4thuuuuuuuuuuu//
ஓகே.. ரைட்டு
நின்னைச் சரணடைந்தேன் (2)//
ஜாமீன் கிடைக்கிலியா?//
கடல்லயே இல்லையாம்...
ம்ம்ம் அப்புறம்?
:)//
ம்ம்ம்ம்... வேறென்ன...
தொடரும் தான்.
இயக்குநர் சரண் கோவிச்சுக்க மாட்டாரா?# டைட்டிலில் சரண் ஹி ஹி//
ஹையோ.. ஹைய்யோ...
கதையில எதிர்பாராத திருப்பம் இந்திரா! குட்! :)//
நன்றி பாலாஜி
இந்திரா...
கதை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.
அடுத்த பாகம் ரிலீஸ் எப்போ?//
நன்றி கோபி..
இதோ உடனே..
ம்...நல்லாவே போகுது இந்திரா.பயப்படாமத் தொடருங்க !//
பயப்படலைங்க..
இதோ அடுத்த பகுதி போட்டாச்சு.
எந்த இடத்தில் தொடரும் போடணும்னு சரியாக தெரிஞ்சு போட்டு இருக்கீங்க....//
வாங்க சித்ரா..
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.
நன்றி