படிச்சு நொந்துகிட்டேன்



பொறுக்கி:- சார், உங்களை பார்த்தோன ஒன்னுமே ஒடலை

கிறுக்கன்: ஏன்? என் பெயர் பந்த் இல்லையே

பொறுக்கி:- உங்க பெயரை பற்றி நான் கேட்கவே இல்லையே?

கிறுக்கன்: இல்ல, பந்த்'னா தான் எதுவுமே ஓடாது.. அதான்..

பொறுக்கி:- ஹி ஹி உண்மைக்குமே உங்களை பார்த்தோன ஒன்னுமே ஒடலை சார்

கிறுக்கன்: வேணும்னா ரெண்டு ஆட்டோ'வ கேப்'ல விட்டு ஒட விடுவோமா?

பொறுக்கி:- விட்டா, கெடா வெட்டி பொங்கல் வைப்பீங்க போலஓவர் பால் போட்டா, பாயாசத்துக்கு நல்லது இல்லை…..

கிறுக்கன்: அய்யோடா, சுடு தண்ணிர் வைக்கிறவன் எல்லாம் இப்போ பால் பாயாசம் ரேஞ்ச்'க்கு போயிட்டான்…. என்னத்த சொல்ல..

பொறுக்கி:- நீங்க ஒன்னுமே சொல்ல வேணாம் சார்…….சும்மா இருந்தீங்கனாலே போதும் :)

கிறுக்கன்: சும்மா இருக்கிறது'னா நான் வீட்லையே இருந்து இருப்பேன்'ல எதுக்கு வர சொன்ன?

பொறுக்கி:- கொஞ்சம் தனியா பேசனும் அதுதான்…….

கிறுக்கன்: தனியா பேசனும்னா பாத்ரூம் உள்ளே போய் வாஷ்பேசினோட பேசிக்க வேண்டியது தானே.. நான் எதுக்கு..

பொறுக்கி:- சார், என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா FM மாதிரி சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க...

கிறுக்கன்: ஏன் சொல்ல மாட்ட, முதல்'ல என்னை வர சொன்ன, அப்புறம் தனியா பேசனும்', இப்ப சம்பந்தம் கூட பேசனும்ங்கற….முதல்'ல ஒரு முடிவுக்கு வா பேசிக்கலாம்

பொறுக்கி:- சார், முதல்'யே எப்படி சார் முடிவு வரும்?

கிறுக்கன்: ஏன் வராதா?

பொறுக்கி:- கண்டிப்பா வராது, ஏன்னா முதல்'ல வந்தா முன்னுரை கடைசில வந்தா

கிறுக்கன்: கட்டுரையா?

பொறுக்கி:- இப்ப தெரியுது, எப்படி நீங்க பத்தாங் கிலாஸை கூட தாண்டலைனு.

கிறுக்கன்: ஏன் அந்த கட்டுரை'ல எழுதி இருக்காங்களா என்னை பற்றி?

பொறுக்கி:- அந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு? போடுறது மொக்கை அது என்னை தவிற வேற யாருக்குமே புரியாது….

கிறுக்கன்: ஸ்ஸஸஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடேய் நீ தனியா பேசுவியோ, இல்ல தண்ணிய போட்டுட்டு பேசுவியோ எனக்கு தெரியாது. நான் கிளம்புறேன் இப்போ..

பொறுக்கி:- பிரதர் கொஞ்சம் நேரம் லொட லொட'னு ஸ்டார்ட் பண்ணுன டாடா வேன் மாதிரி இல்லாம அமைதியா இருந்தீங்கனா.. நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடுவேன்..

கிறுக்கன்: டேய், அவ்வளவு ஈசியா நீ சொல்லிட்டு போயிட முடியாது சொல்லிட்டேன்

பொறுக்கி:- நான் தானே சொல்லுறேனு சொன்னேன்? இப்போ நீங்க சொல்லிட்டேனு சொல்லுறீங்க?

கிறுக்கன்: எனக்கு குழப்பமா இருக்கா இல்லை நீ என்னை குழப்புறீயானே தெரிய மாட்டேங்குது

பொறுக்கி:- நீங்க குழம்பி இருக்கீங்க அதுதான்

கிறுக்கன்: ?????

பொறுக்கி:- கல்யாண வீட்டுல மூனாவது பந்திக்கு மேல சாம்பார் கேட்டா, எப்படி கரண்டி மட்டும் வாலி'ல இருந்து எட்டி பார்க்குமோ அதே மாதிரி, நான் உங்க கிட்ட எப்படி இருக்கீங்கனு கேட்டா நீங்க உங்க பாட்டிக்கு நாக்கு'ல சுளுக்குனு பதில் சொல்லிறீங்க.. விளங்குமா? …

கிறுக்கன்: பதஸ்டத்தை கொஞ்சம் லெஸ் பண்ணிக்கோ

பொறுக்கி:- ஒரு அவசரத்துக்கு உங்க கிட்ட பேச முடியுதா? அப்படியே பேசுனாலும் ஒரே அட்டம்ட்'ல புரிஞ்சிடுமா உங்களுக்கு? எப்படி சார் இப்படி ?

கிறுக்கன்: சரி சரி கொஞ்சம் சிரி.. எதுக்கு இவ்வளவு சீரீயஸ்? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? சொல்ல வந்ததை சொல்லு

பொறுக்கி:- அப்பாடா.. கடைசியா ஒரு பிரேக் கொடுத்தீங்களே.. நன்றி. இதோ ஐந்து நிமிஷிசத்தில சொல்லிட்டு கிளம்பிடுறேன்……

கிறுக்கன்: பிரதர், நீங்க சொல்லிட்டு அவ்வளவு சுலபமா இங்க இருந்து கிளம்பிட முடியாது

பொறுக்கி:- ஏன் ??????

கிறுக்கன்: ஏன்னா இது உங்க வீடு, நான் தான் உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்.. சோ, நீங்க சொல்லி முடிச்சோன, நான் தான் கிளம்பனும். நீங்க இல்லைபுரிஞ்சதா?????? நீங்க சொல்லிட்டு கிளம்பி போனா, நான் எங்க போறது?

பொறுக்கி:- முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
துப்புங்கடா இந்த மொக்கைக்கு காரி……………கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.

மொக்கைக்கு நன்றி கோபி...

http://pakkatamilan.blogspot.com/2009/08/blog-post.html

.

.

Comments

sulthanonline said…
என் சார்பா நீங்களே காரி துப்பீருங்க.

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
நான் என்னத்த சொல்ல..
ஹா ஹா ஹா ஹா இதுல ரெண்டுபேருமே கவுண்டமணிதான், டபுள் ரோல் சூப்பர் ரசிச்சேன்....
My days(Gops) said…
ஹா ஹா ஹா ஹா yaar da adhu gopi.. vidungada naaalu auto va :) ..

nanri nanri..
My days(Gops) said…
innum mokkai venum na try coffee with gopi post.. he he he...
மொக்கை எழுதிய கோபியை பாராட்டி இந்த பதிவை போட்டிருக்கீங்களா? இல்லை திட்டியா?
siva said…
good post...
logu.. said…
த்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊ...


வந்த வேலை முடிஞ்சது..
விட்டா நம்ம்ளையும் லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க போல.. ஜூட்ட்ட்ட்ட்ட்ட்டு..
அரசன் said…
நடத்துங்க ...
/////தனியா பேசனும்னா பாத்ரூம் உள்ளே போய் வாஷ்பேசினோட பேசிக்க வேண்டியது தானே.. நான் எதுக்கு.////

ஹ..ஹ.. பாத்திரத்துக்கு ஏற்ற பேச்சங்கோ.. ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
ஓவர் பால் போட்டா, பாயாசத்துக்கு நல்லது இல்லை…//
நல்லா இருக்கு.
>>>>படிச்சு நொந்துகிட்டேன்

hi hi ஹி ஹி நல்ல டைட்டில்.
நண்பர்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..