இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்
வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி இன்டர் வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க.. 1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்? இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..) 2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்? இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல