எங்க புத்திசாலித்தனத்த பார்த்து கண்ணு வைக்காதீங்க..
வர வர இந்த செல்போன் தொல்லை தாங்க முடியிறதில்ல. ஏதாவது முக்கியமான வேலை பார்த்துகிட்டிருக்கும் போதோ, இல்ல நல்லா கண் அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதோ தான் எவனாவது போன் செஞ்சு கழுத்தறுப்பான். அட்டெண்ட் பண்ணாம இருக்கவும் முடியாது, வேலையிருக்கு அப்புறம் பண்ணுங்கனு சொல்லவும் முடியாது. அப்படி சொன்னா உடனே அவங்களுக்கு முனைப்பு வந்திடும்ல.
நேத்து கடைத்தெருவுக்கு டூவீலர்ல, மீசைக்காரனோட போய்கிட்டிருக்கும்போது என் சொந்தக்காரர் கிட்டயிருந்து தொலைபேசி அழைப்பு வந்துச்சு. திரும்ப திரும்ப கால் பண்ணினதால ஏதோ அவசரம் போலனு, வேற வழியில்லாம ஓரமா வண்டிய நிறுத்தி அட்டெண்ட் பண்ணேன். மனுஷன் அப்ப தான் ரொம்ப அக்கறையா “என்ன இந்திரா, நல்லாயிருக்கியா? வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?“னு ஆரம்பிச்சு சகலத்தையும் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாரு. (யார் அந்த சகலம்னு கேக்கப்படாது சொல்லிப்புட்டேன்..)
நானும் பொறுமையா பதில் சொல்லிட்டு ஒரு வழியா வச்சுட்டேன். ரெண்டே நிமிசத்துல மறுபடியும் போன் வந்துச்சு. யாருனு ஆன் பண்ணி பார்த்தா.. கஸ்டமர் கேர் கடன்காரன். சிம் பத்தின தகவல் தெரியணும்னு சொல்லி கேள்வி மேல கேள்வி... சாபம் விடாத குறையா பதில் சொல்லி கட் பண்ணேன். மறுபடியும் அப்ப தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணேன்.. திரும்பவும் போன் அடிச்சுச்சு. ஏதோ புது நம்பர்ல இருந்து வந்துச்சு. அட்டெண்ட் பண்ணி ஹலோ சொன்னேன். “ஹலோ பாஸ்கர் இருக்கானா? நா பாலாஜி பேசுறேன்“னு குரல்.. அட ராங் நம்பர்யா“னு முனங்கிட்டு கட் பண்ணேன். அடுத்த அஞ்சாவது நிமிசம், என் தூரத்து சொந்தக்காரப் பொண்ணுகிட்ட இருந்து மிஸ்டு கால்.. கால் மீ“னு ஒரு மெசேஜ் வேற. (நம்மள கலாய்க்கிறதுக்குனே உக்காந்துருப்பாய்ங்களோ,,,??)
ம்ஹூம்.. இது ஆவுறதில்ல.. நம்ம வேலையப் பாக்க விடமாட்டாய்ங்க போலயே.. பேசாம ஸ்விட்ச் ஆஃப் பண்ணலாம்னா வீட்ல இருந்து கால் வந்தா, தெரியாம போய்டும். அதுவுமில்லாம சும்மாவே எங்கம்மா, எங்கள ஊர் சுத்துறோம்னு சொல்வாங்க.. இதுல போன் ஆஃப் பண்ணினா, வேணும்னே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு ஊர் சுத்துறோம்னு டென்சன் ஆய்டுவாங்க. அதுனால என்ன பண்ணலாம்னு ஜிந்திச்சேன். அப்ப தான் என் தங்கை, “பசங்க“ படத்துல வர்ற ஒரு சீன்ல, விமல் தன்னோட போன் ஸ்விட் ஆஃப் பண்ணாம பேட்டரிய எடுத்தா கால் பண்றவங்களுக்கு Not Reachable’னு வரும்னு சொல்வாரே.. அத ஞாபகப்படுத்தினா..
நல்ல யோசனைனு சொல்லி நானும் என் மொபைல் போன் பேட்டரிய கழட்டி, சிம் கார்ட வெளிய எடுத்துட்டேன். அப்பாடா.. இனிமேலாவது இவனுக இம்சை இருக்காதுனு கிளம்பினோம். கொஞ்ச நேரத்துலயே எனக்கு அசரீரி கேட்டுச்சு (அட.. மைண்ட் வாய்ஸ் மாதிரிங்க...). என் அலுவலகம் சம்மந்தமா கால் வந்தா என்ன பண்றதுனு...
மீசைக்காரன் கிட்ட சொன்னேன். உடனே சொன்னா பாருங்க ஒரு ஐடியா...
உன் போனுக்கு கால் பண்றவங்களுக்குத் தான் Not Reachable வரும்ல. அதுனால உன் சிம் கார்ட என் போன்ல போட்டுக்க. முக்கியமான கால் எல்லாம் இதுக்கு வந்துடும்னு சொன்னா. சே.. என்னமா ஐடியா குடுக்குறானு பெருமைப்பட்டுகிட்டு உடனே, என் போன்ல கழட்டுன சிம் கார்ட, அவளோட போன்ல போட்டுகிட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கே தெரியும்.
எப்படி அவளோட ஐடியா????? என் தங்கைல... புத்திசாலியா தான் இருப்பா.
.
.
Comments
எப்படி அவளோட ஐடியா????? என் தங்கைல... புத்திசாலியா தான் இருப்பா.//
ஏங்க அது எப்படி போன் வந்த அவங்களுக்கு போய் இருக்குமே..எப்படியும் கால் வராம இருக்காதே
எங்கியோ இடிக்குதே...அவ்வவ்
என்ன நான் சொல்றது சரிதானே..?
அப்புறம் அந்த படத்தில வலது கைல பிடிச்சிருக்கறது 'கன்' ஆ இல்ல செல்போனா..?
ரொம்ப violent..
நீங்க சொன்னதுல ஒண்ணு பொய்.,
ஒண்ணு உண்மை..!
mee the firstu..//
வாங்க சிவா..
hey mee the secondu..//
வர்றது பெருசில்ல.. ஒழுங்கா பதிவ முழுசா படிக்கணும்.. சொல்லிட்டேன்.
ஏங்க அது எப்படி போன் வந்த அவங்களுக்கு போய் இருக்குமே..எப்படியும் கால் வராம இருக்காதே
எங்கியோ இடிக்குதே...அவ்வவ்//
இந்த ட்யூப்லைட் லேட்டா எரியும் போலயே...
இது சுமையை குறைக்க சும்மாடுவை கீழ வெச்சிட்டு சுமையைத் தூக்குன கதை..
என்ன நான் சொல்றது சரிதானே..?//
நீங்க சொன்னா சரியாதான் இருக்குமுங்க..
//அப்புறம் அந்த படத்தில வலது கைல பிடிச்சிருக்கறது 'கன்' ஆ இல்ல செல்போனா..?
ரொம்ப violent..//
ஹிஹிஹி..
பதிவு தான் டெரரா இல்ல... படமாவது டெரரா இருக்கட்டுமேனு தான்.... ஹி ஹி
// என் தங்கைல... புத்திசாலியா தான் இருப்பா.//
நீங்க சொன்னதுல ஒண்ணு பொய்.,
ஒண்ணு உண்மை..!//
அட... சத்தியமா அவ என் தங்கச்சி தான் வெங்கட்..
(எங்ககிட்டயேவா...???)
நம்ம மக்கள் எதை செய்ய கூடாதுன்னு சொன்னாலும் அதை உடனே செய்து பார்ப்பார்கள் என்று தானே படிக்காதிங்க என்ற தலைப்பு வைத்தீர்கள்
பூனை கண்ண மூடிக்கிட்டா உலகம் இருளும் என்பது போல் சிம்ம கலட்டி அவர்கள் செல்லில் போட்டால் கால் வராதா ?
நல்ல நியாயம் உங்க நியாயம்
ஹா ஹா ஹா
சிம்கார்டை கழட்டி இன்னொரு போன்ல போட்டுட்டா நமக்கு போன்கால்வராதா?.. நல்ல கண்டுபிடிப்பு :-)))))
அப்றம், அந்த டூவீலர்ல போகறச்சே, கையிலிருந்த லக்கேஜை, டூவீலரோட லக்கேஜ் பாக்ஸ்ல போட்டா, டூவீலர்க்கு சுமை கூடும்ன்னுட்டு, மடியிலேயே வெச்சிருந்தீங்களே ... அது நீங்கதானே
:-)))))))
சிம்கார்டை கழட்டி இன்னொரு போன்ல போட்டுட்டா நமக்கு போன்கால்வராதா?.. நல்ல கண்டுபிடிப்பு :-)))))
அப்றம், அந்த டூவீலர்ல போகறச்சே, கையிலிருந்த லக்கேஜை, டூவீலரோட லக்கேஜ் பாக்ஸ்ல போட்டா, டூவீலர்க்கு சுமை கூடும்ன்னுட்டு, மடியிலேயே வெச்சிருந்தீங்களே ... அது நீங்கதானே
:-)))))))
விடாப்பிடியா படிக்கனும்னு முடிவு பண்ணி படிச்சா ஒரு விசயம் தெரிஞ்சிக்கிட்டேன்.... உலகத்திலயே இரண்டே ரெண்டு புத்திசாலி தாங்க... முத புத்திசாலி நீங்க ...இரண்டாவது அதிபுத்திசாலியான உங்க தங்கை... ரெண்டு புத்திசாலிகளுக்கும் வாழ்த்துக்கள்...ஹா ஹா ஹா...
சகோ இதுல இருந்து எனக்கு ஒன்னும் பிரியல....அதனால இங்கயும் டியூப் லைட் இன்னும் எரியல!//
நம்பிக்கைய கை விட்றாதீங்க..
இன்னும் ஒரு பத்து தடவை படிங்க..
விளங்ங்ங்ங்கிடும்..
அடேங்கப்பா என்ன ஒரு புத்திசாலித்தனம்? என்ன ஒரு ஐடியா? சத்தியமா சான்ஸே இல்லைங்க...//
ஹிஹி.. டாங்க்ஸ்ங்க..
ரொம்ப புகழாதீங்க மணி சார்.
photo nallaaa irrunthathuuuuuuuuuu//
நன்றி வினுஉஉஉஉஉஉஉஉஉ..
ஆகா.... ஆகா....//
வாங்க வாங்க...
அட இவ்வளவு நாளா தெரியாமப் போச்சே எனக்கு - நல்ல ஐடியாவா இருக்கே - வாழ்க வளமுடன் - நீங்களும் உங்க புத்திசாலி தங்கையும்//
நன்றி சீனா சார்.
இப்பயாவது தெரிஞ்சுகிட்டீங்களே..
சந்தோசம்.
தங்களின் தளத்திற்கு இன்றுதான் வருகிறேன் அசத்தல் படம் (தற்கொலை )
நம்ம மக்கள் எதை செய்ய கூடாதுன்னு சொன்னாலும் அதை உடனே செய்து பார்ப்பார்கள் என்று தானே படிக்காதிங்க என்ற தலைப்பு வைத்தீர்கள்//
முதல் முறையாக வருகை தந்ததற்கு நன்றி.
கருத்துக்கும் தான்.
அடிக்கடி வாங்க.
நல்ல நகைச்சுவை .
பூனை கண்ண மூடிக்கிட்டா உலகம் இருளும் என்பது போல் சிம்ம கலட்டி அவர்கள் செல்லில் போட்டால் கால் வராதா ?
நல்ல நியாயம் உங்க நியாயம்
ஹா ஹா ஹா//
ஆமாங்க.. எப்படி எங்க புத்திசாலித்தனம்????
கண்ணு வைக்காதீங்க பாஸ்.
ஆஹா.. சுத்திப்போட மறக்காதீங்க..
சிம்கார்டை கழட்டி இன்னொரு போன்ல போட்டுட்டா நமக்கு போன்கால்வராதா?.. நல்ல கண்டுபிடிப்பு :-)))))
அப்றம், அந்த டூவீலர்ல போகறச்சே, கையிலிருந்த லக்கேஜை, டூவீலரோட லக்கேஜ் பாக்ஸ்ல போட்டா, டூவீலர்க்கு சுமை கூடும்ன்னுட்டு, மடியிலேயே வெச்சிருந்தீங்களே ... அது நீங்கதானே
:-)))))))//
அட... எப்படிங்க கரெக்டா கண்டுபிடிச்சீங்க???
(அடுத்த பதிவ தேத்தலாம்னு பார்த்தேன்.. கெடுத்துட்டீங்களே... அவ்வ்வ்)
ஆஹா உள்ள நுழையரப்பவே... படிக்காதிங்கன்னு சொன்னா நான் என்ன செய்வேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
விடாப்பிடியா படிக்கனும்னு முடிவு பண்ணி படிச்சா ஒரு விசயம் தெரிஞ்சிக்கிட்டேன்.... உலகத்திலயே இரண்டே ரெண்டு புத்திசாலி தாங்க... முத புத்திசாலி நீங்க ...இரண்டாவது அதிபுத்திசாலியான உங்க தங்கை... ரெண்டு புத்திசாலிகளுக்கும் வாழ்த்துக்கள்...ஹா ஹா ஹா...//
ஹிஹிஹி தாங்க்ஸ்ங்க...
முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் சுத்திப் போடணும்..
.