செல்போன் பேச நடுரோடு சிறந்த இடமோ??? உதாரணப் புகைப்படம் இதோ..

காலேல Staff Busக்கு வெய்ட் பண்ணிகிட்டு இருந்தேன். அப்ப, நடு ரோட்ல ஒருத்தர் வண்டில போய்கிட்டு இருந்தார்.. திடீருனு போன் வந்துச்சு போல.. அப்படியே வண்டிய நிறுத்திட்டு போன் பேசினார்.. பின்  எந்த ரியாக்சனும் இல்லாம கிளம்பிட்டாரு.
(இடம்: மதுரை டிஸ்ட்ரிக்ட் கோர்ட் எதிரில், ட்ராபிக் போலீஸ் கண்முன் தான்)




இவரோட கடமை உணர்ச்சிய எப்படி பாராட்றதுனே தெரிலங்க..
.
(குறிப்பு : ரெண்டு பக்கமும் வாகனங்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கு.. அந்த கேஸ் வண்டி அவரை கடக்கும்போது எடுத்த புகைப்படம்.. அதுனால வண்டி நிக்குற மாதிரி தெரியும். படத்துல, அவரை தவிர எல்லா வாகனங்களுமே ஓடிகிட்டு இருக்கு)
.
.

Comments

ஆஹா, நாட்ல எப்படி எல்லாம் பதிவு தேத்தறாங்க
பிளாக்கின் சைடுல ஓடும் ட்வீட்ஸ் கலர் காம்பினேஷன் செம
க்கும் நேத்து ஒரு பொண்ணு செல் போன்ல பேசிக்கிட்டே வர்றவங்களுக்கு வழி விடாம கபடி ஆடினது செம கடுப்பு. ஏத்தி கொன்னிருக்கணும்
SURYAJEEVA said…
ஒன்னு கம்பனி முதலாளி கூப்பிட்டிருக்கணும் இல்ல மனைவி கூப்பிட்டிருக்கணும்...
atleast வண்டியை ஓட்டிட்டே பேசாமல் நிறுத்திப் பேசியதற்காக ஆறுதல் பரிசு எதானாச்சும் கொ(ட்)டுக்கலாம்னு நினைக்கிறேன்.
இது ஒன்றும் புதிதல்ல...

அவராவது பரவாயில்லை... ஓரமா கேஸ் வண்டி பக்கத்துல நிறுத்தி பேசி இருக்கிறார்... எத்தனையோ பேசிக்கிட்டே வண்டி ஓட்டுறாங்க.

(அவர் பேசி முடிக்கிறதுக்குள்ள கேஸ் வண்டி புறப்பட்டு போனது ஒரு குற்றமா யுவர் ஆனர்)

நடுரோட்டில் நடக்கும் கொடுமைகள் இன்னும் எத்தனையோ....
செல்போனில் பேசியபடியே வண்டி ஓட்டும் மாபாவிகள் பலரை நான் பார்த்துத் திட்டி இருக்கேன். போய்யாங்க... என்று திட்டும் வாங்கிருக்கேன். இம்சை இந்திராவுக்கே அவர் பேசினது இம்சையாத் தெரிஞ்சிருக்குன்னா... மத்தவங்களுக்கு சொல்லவா வேணும்?
//சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா, நாட்ல எப்படி எல்லாம் பதிவு தேத்தறாங்க//


ஹி ஹி ஹி...
//சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்கின் சைடுல ஓடும் ட்வீட்ஸ் கலர் காம்பினேஷன் செம//


நன்றிங்க..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

க்கும் நேத்து ஒரு பொண்ணு செல் போன்ல பேசிக்கிட்டே வர்றவங்களுக்கு வழி விடாம கபடி ஆடினது செம கடுப்பு. ஏத்தி கொன்னிருக்கணும்//


அட.. ரமேஷ்.. நீங்க இந்தப் பக்கமெல்லாம் வருவீங்களா??? ரொம்ப நாளா ஆளையே காணோமே..

அப்புறம்.. அந்த ஃபிகர் எப்படி???
//suryajeeva said...

ஒன்னு கம்பனி முதலாளி கூப்பிட்டிருக்கணும் இல்ல மனைவி கூப்பிட்டிருக்கணும்...//


அப்புறம் வண்டில அடிபட்ருந்தா யார் கூப்பிட்டாலும் கேக்காது...
//ஷர்மி said...

atleast வண்டியை ஓட்டிட்டே பேசாமல் நிறுத்திப் பேசியதற்காக ஆறுதல் பரிசு எதானாச்சும் கொ(ட்)டுக்கலாம்னு நினைக்கிறேன்.//


அதுக்காக நடுரோட்லயா???
நல்லா உத்துப்பாருங்க ஷர்மி.. ரெண்டு பக்கமும் வாகங்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கு..
இதுல ஆறுதல் பரிசு வேறயா???? ம்கும்..
//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இது ஒன்றும் புதிதல்ல...

அவராவது பரவாயில்லை... ஓரமா கேஸ் வண்டி பக்கத்துல நிறுத்தி பேசி இருக்கிறார்... எத்தனையோ பேசிக்கிட்டே வண்டி ஓட்டுறாங்க.

(அவர் பேசி முடிக்கிறதுக்குள்ள கேஸ் வண்டி புறப்பட்டு போனது ஒரு குற்றமா யுவர் ஆனர்)

நடுரோட்டில் நடக்கும் கொடுமைகள் இன்னும் எத்தனையோ....//


அட.. படத்தை நல்லா உத்துப்பாருங்க வாசன். ரெண்டு பக்கமும் வாகங்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கு.. அந்த கேஸ் வண்டி நிக்கலப்பா.. அவரை கடக்கும்போது எடுத்த புகைப்படம்.. அதுனால அப்படித் தெரியுது.. அவரை தவிர எல்லா வாகனங்களுமே ஓடுச்சு.
//கணேஷ் said...

செல்போனில் பேசியபடியே வண்டி ஓட்டும் மாபாவிகள் பலரை நான் பார்த்துத் திட்டி இருக்கேன். போய்யாங்க... என்று திட்டும் வாங்கிருக்கேன். இம்சை இந்திராவுக்கே அவர் பேசினது இம்சையாத் தெரிஞ்சிருக்குன்னா... மத்தவங்களுக்கு சொல்லவா வேணும்?//


இதெல்லாம் அசட்டு தைரியம்...
//Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! //


ஓகேங்க..
ச்சே பாவம் பொண்டாட்டிக்கு பயந்த பயலா இருக்கும் ..............
K.s.s.Rajh said…
எல்லா இடங்களிலும் இப்படியான சம்பவங்கள் நடந்து கிட்டுதான் இருக்கு என்ன பண்ண
ரொம்பதான் தையரியம் அவருக்கு.ஒரு ஓரமா நிறுத்தி பேசக்கூடாதோ?என்ன அவசரமோ தெரியலை.
எதிர் பார்காத நபரிடமிருந்து அழைப்பு வந்திருக்கு...
அதான் அப்டியே ஒரஞ்சிட்டர் போல... சகோ...
// ராஜா MVS said...
எதிர் பார்காத நபரிடமிருந்து அழைப்பு வந்திருக்கு...
அதான் அப்டியே ஒரஞ்சிட்டர் போல... சகோ...//

எனக்கும் அப்படித்தான் தோனுது..

ஆனாலும் ரொம்பத் தைரியம்தான்.. படமெல்லாம் எடுத்திருக்கிரீங்களே..!

அது சரி.. அந்த போலீசையும் சேத்து எடுத்திருந்தா கமிஷனர்ட்ட போட்டு உடலாம்லா.. மிஸ் பண்ணிட்டீயளே....
இவரோட கடமை உணர்ச்சிய எப்படி பாராட்றதுனே தெரிலங்க
வெளங்குமா இல்லை வெளங்குமா'ன்னு கேக்குறேன், சாவுறது இவன் மட்டுமில்லை, சம்பந்தமே இல்லாதவங்களும்தான், அந்த போலீசுக்கு ஒரு சபாஷ் போடுங்க ராஸ்கல்....
இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

க்கும் நேத்து ஒரு பொண்ணு செல் போன்ல பேசிக்கிட்டே வர்றவங்களுக்கு வழி விடாம கபடி ஆடினது செம கடுப்பு. ஏத்தி கொன்னிருக்கணும்//


அட.. ரமேஷ்.. நீங்க இந்தப் பக்கமெல்லாம் வருவீங்களா??? ரொம்ப நாளா ஆளையே காணோமே..

அப்புறம்.. அந்த ஃபிகர் எப்படி???//

அட பாவமே. படிக்கிறதோட சரி. இப்பெல்லாம் கமென்ட் போட நேரமே இல்லைங்க. அப்புறம் வீட்டுக்கு போற அவசரத்துல பிகரை யார் பாக்க? (நான் ரொம்ப நல்லவானாக்கும்)
Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html//

அதுக்கு நாங்க என்னய்யா பண்ணனும். போற இடமெல்லாம் சாவடிக்கிறாங்களே!!
நண்பியே...!

உங்களுக்கு இது ஆச்சர்யமாய் இருக்கா...!

அண்ணா சாலைதான் சென்னையின் சுறுசுறுப்பான... பரபரப்பான... விறுவிறுப்பான சாலை...!

இதுல ரோடு கிராஸ் செய்ற...
அதுவும் மொபைல காதுல வைச்சுகிட்டே.... அத எடுக்காம.... எங்க "மாநகர யுவதிகள்" கிராஸ் செய்ற போட்டோ வேணுமா...!

நான் நிறைய எடுத்து... புடிச்சு தாரேன்...!

"இந்த செல் போன் வந்தது வந்துச்சு.... சாப்பிடாமக்கூட அல்லது சுவாசிக்காமக்கூட இந்தக் காலத்து மனுஷ ஜன்ம இருந்துடும் போலிருக்கு... ஆனா...! இந்த செல் போன் இல்லாம...! அதில் பேசாம... அதுல மெசேஜ் அனுப்பாம... இருக்க மாட்டாங்க போலிருக்கு" அப்படீன்னு இன்னைக்கு காலைலதான் அலுவலகம் வரும்போது நினைச்சே...
நீலப்பல் உபயோகிக்க மாட்டாங்களோ...
தருமி said…
இது போன்ற பல நாய்களுக்குப் புத்தியே இல்லை.
இந்த மாதிரி செய்பவர்களால் மற்றவர்களுக்கு தான் தொல்லை.... திருந்தாத ஜென்மங்கள்...



நம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0
Vizhippunarvu pugaippadangal arumai. Athellam o.k.
'Online Data Entry Works' ku neenga kodutha reply yai nenaichale sirippa adakka mudiyala. Superunko!
TM 5.
Unknown said…
இந்தப் பதிவுக்கு விமர்சனமே தேவையில்ல....
முதல் கமென்ட்...ஜோக் எழுத்தாளர் !!!:)
rajamelaiyur said…
இது போல செய்பவர்கள் செல் ல உடைத்து விடனும் .. அதான் தண்டனை
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
Unknown said…
படங்காட்றீங்க.. சரி அப்படியே நம்ம கடைக்கும் வாங்க...
http://mydreamonhome.blogspot.com/
நான் காறிதுப்பலை; இதுவே என் கருத்து.
ம்ம். இந்த செல்போன் தான் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்குது..
ஹேமா said…
விபத்துக்களைக் குறைக்க என்ன வழின்னு அரசாங்கம் யோசிச்சுக்கிட்டு இருக்கு.எப்பிடிக் குறையும் !
இவரு எவ்வளவோ பரவாயில்ல! :)
அது சரி...நீதிமன்ற பஸ் ஸ்டாப்புக்கு எதிரே இருந்த கற்பகம் ஹோட்டல் என்னாச்சு?
Unknown said…
தக்க சமயத்தில் அதை படம் எடுத்து ஒரு விழிப்புணர்வு பதிவிட்டதற்கு நன்றி.
//தக்க சமயத்தில் அதை படம் எடுத்து ஒரு விழிப்புணர்வு பதிவிட்டதற்கு நன்றி.//

இதனால் நீங்க என்ன விழிப்புணர்வு அடைஞ்சிங்கன்னு தெரிஞ்சா நாங்களும் கத்துக்குவோம்.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..