உப்புமா பதிவு.. (13.12.2011)


தினமும் வகை வகையா சமைச்சிட்டு, ஏதாவதொரு நாள் சோம்பேறித்தனமாவோ.. இல்ல நேரமில்லாமலோ இருந்தா, அவசரத்துக்கு உப்புமா செஞ்சு சாப்பிடுவோம். அது மாதிரி பதிவெழுத நேரமில்லாதனால (ம்கும்..) அவசரத்துக்கு ஒரு உப்புமா பதிவு..
***********************
நா அருமையா (!!!) பதிவெழுதுறது எங்க ஆபீஸ்ல யாருக்கோ பிடிக்கல போல.. பத்து நாளா கணிணில கொஞ்சம் இன்டர்நெட் பிரச்சனை.. ப்ளாக்கோ.. ட்விட்டரோ.. அட.. மெயில் கூட பாக்க முடியல.. எல்லாமே போன்ல தான். வர்ற பின்னூட்டங்களுக்கு கூட ரிப்ளை பண்ண முடியல.. மத்த பளாக்குக்கும் கமெண்ட் போட முடியல. கடுப்பு கடுப்பா வருது.. இப்ப கூட திருட்டுத்தனமா வேற ஒருத்தரோட கணிணில தான் இந்தப் பதிவ எழுதுறேன்.. என்ன கொடுமை சார் இது????
************************
ரெண்டு நாளுக்கு முன்னாடி மீசைக்காரனுக்குப் பிறந்தநாள். போன வருஷம் வாழ்த்து சொல்லிப் பதிவு போட்டேன். ஆனா இந்த வருஷம் முடியல. அதுக்கு ஓவரா சண்டை போட்டா. அப்புறம் வேற வழியில்லாம ஆசிர்வாதம் பண்ணி ஒரு நூறு ரூபாய் குடுத்தேன்.. (கால்ல விழுகுறேன்னு கூட கெஞ்சினா.. நா தான் வேணாம்னு சொல்லிட்டேன்.. ஹிஹிஹி..). முழு பதிவா போட முடியலனாலும் இந்த உப்புமா பதிவுல சொல்லிட்றேன்.. வாழ்த்துக்கள் மீசைக்காரா...
************************
என் அலுவலகத்துல இன்டர்நெட் வசதி, என்னோட கணிணிலயும் இன்னும் ரெண்டு கணிணிலயும் வரும். பத்து நாளா என் சிஸ்டம்ல நெட் பிரச்சனை.. யாருமே கண்டுக்கல.. சொல்லி சொல்லி அலுத்துட்டேன். அதுனால யாருக்கும் தெரியாம மத்த ரெண்டு கணிணிலயும், இந்த பதிவ எழுதிட்டு, இணையத்த புடுங்கி விடப் போறேன். (கடுப்பேத்துறாங்க மை லார்ட்...). அப்பதான் அலறியடிச்சுகிட்டு மொத்தமா சரி செய்வாய்ங்க..
************************
கணிணிக்கு சொந்தக்காரன் வர்ற மாதிரியிருக்கு.. சட்டுபுட்டுனு பதிவ முடிச்சுட்டு செட்டிங்க்ஸ்ல நெட்“ட டிஸ்கனெக்ட் பண்ணனும். (என்ன ஒரு நல்லெண்ணம்...). இணையம் சரியானதுக்கப்புறம் மத்த நண்பர்களோட வலைதளங்களுக்கு வரேன்.. யாரும் கோவிச்சுக்காதீங்கப்பூ...
(சந்தோசப்படாதீங்க.. சீக்கிரம் வந்துடுவேன்..  நாளைக்கே கூட..)
அடுத்த பதிவுல சந்திக்கிறேன்..
.
.

Comments

Unknown said…
me the first eating uppuma
Unknown said…
very taste and nice...

happy to hear that no net connection..:)
Unknown said…
HAPPY Birthday to Raasikkarn.

best wishes..
அவசரத்துல கிண்டற உப்புமாகூட சமயத்துல ரொம்ப டேஸ்டா அமைஞ்சிடும். இந்த உப்புமா அப்படித்தாங்க இந்திரா... சீக்கிரமே உங்களுக்கு நெட் கிடைக்கணும்னு வாழ்த்தறதோட, மீசைக்காரனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன். (லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா) ஹி.. ஹி...
முதலில்...!

தங்கள் "மீசைக்காரனுக்கு" வாழ்த்துக்கள்...! (போன்வருடமும் சொன்னமாதிரி நினைவு)....!

////கணிணிக்கு சொந்தக்காரன் வர்ற மாதிரியிருக்கு.. சட்டுபுட்டுனு பதிவ முடிச்சுட்டு செட்டிங்க்ஸ்ல நெட்“ட டிஸ்கனெக்ட் பண்ணனும். (என்ன ஒரு நல்லெண்ணம்...)////

நீங்களும் நம்மால்தான் போலிருக்கு....!
COOL said…
//
இப்ப கூட திருட்டுத்தனமா வேற ஒருத்தரோட கணிணில தான் இந்தப் பதிவ எழுதுறேன்..
//

பரவா இல்லங்க எப்படியாவது பதிவு எழுதுனா போதும்...

மீசைக்காரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
K.s.s.Rajh said…
அட உப்புமா கூட நல்லாயிருக்கே
முதலில்...!

தங்கள் "மீசைக்காரனுக்கு" வாழ்த்துக்கள்...! (போன்வருடமும் சொன்னமாதிரி நினைவு)....!

////கணிணிக்கு சொந்தக்காரன் வர்ற மாதிரியிருக்கு.. சட்டுபுட்டுனு பதிவ முடிச்சுட்டு செட்டிங்க்ஸ்ல நெட்“ட டிஸ்கனெக்ட் பண்ணனும். (என்ன ஒரு நல்லெண்ணம்...)////

நீங்களும் நம்மால்தான் போலிருக்கு....! (நம்மளப் போலிருக்கு)
SURYAJEEVA said…
அப்பாடா என்று சந்தோஷப் பட்டால், நாளைக்கே வந்தாலும் வந்துடுவேன் அப்படின்னு எச்சரிக்கை வேறா? முடியல

உங்க நெட் கனக்ஷன புடுங்கி விட்ட நல்லவன் எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் வாழ்க
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
அவசரத்துல செய்த உப்புமா சுவையாத்தான் இருக்கு.

உங்க நல்ல எண்ணத்துக்கு ---வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!
தங்கள் "மீசைக்காரனுக்கு" வாழ்த்துக்கள்...!
>>அடுத்த பதிவுல சந்திக்கிறேன்..

இதுக்கு ஏதாவது பரிகாரம் பரி ஸ்வீட் இருக்கா?
நல்லாத்தான் இருக்கு.... உப்புமா?
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
நீங்களும் என்னை மாதிரிதானா.. இன்னிக்கு கூட இன்னொருத்தர் கணினில இருந்து பின்னூட்டம் போட்டேன்..
மீசைக்காரனுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
vimalanperali said…
இது வேறயா?
அதுவும் இன்னோர்த்தரு வீட்டுல உப்புமா கிண்டுரதும்.. ஒரு திர்லிங் தான்... சகோ...
(தாம்தூம் கதாநாயகி மாதிரி.)
உப்புமா பதிவு..... நல்ல தலைப்பு!
Anonymous said…
என்னே ஒரு நல்ல எண்ணம்!!!
Moortthi JK said…
dear indra madam....

i need some help to develop my blog... can you help me plz.... hope you remember me..... kindly reply to my mail address. moovjabi@gmail.com....
thanks in advance....

moortthi JK
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்
//Moortthi JK//


வருகைக்கு நன்றி நண்பரே...
நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எனது ஆலோசனைய தெரிவிக்கிறேன்.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்