ஏண்டா இப்படி மானத்தை வாங்குறீங்க??
காலேல அலுவலகத்துல வேலை பார்த்துகிட்டு இருந்தேன். திடீருனு என்னோட சீனியர் ஒருத்தர், போன் பேசிகிட்டே என் பக்கத்து நாற்காலில உக்காந்து, நெட்“ல கூகுள் இமேஜஸ் எடுங்கனு சொன்னாரு. நானும் சரினு எடுத்தேன். அதுல “National Flag of India“னு தேட சொன்னாரு. நானும் எதுக்கோ கேக்குறாரு“னு நெனச்சு புகைப்படத்த எடுத்தேன். அவர் அத பாத்துட்டு, போன்ல “சிகப்பு வெள்ளை பச்சை தான்“னு சொன்னாரு.
சொல்லிட்டு என்னைப் பார்த்து “தேங்க்ஸ்“னு சொல்லி எழுந்தாரு. நா புரியாம “என்ன விஷயம் சார்“னு கேட்டேன். அவரோட பொண்ணு ஒன்றாம் வகுப்பு படிக்குதாம். அவங்க மிஸ் தேசியகொடி வரைய சொன்னாங்களாம். கொடியோட வண்ணம் என்னானு கேட்டுச்சாம். “மூணு கலர் என்னென்னனு தெரியும்.. ஆனா அதோட வரிசை மறந்துடுச்சு. பச்சை வெள்ளை சிகப்பா?? இல்ல சிகப்பு வெள்ளை பச்சையா“னு குழப்பமாய்டுச்சு. அதான் நெட்ல பாத்து சொன்னேன்“னு சொன்னாரு.
என்ன சார், இதையெல்லாம் மறக்கலாமா“னு கேட்டா.. “நல்லா தெரிஞ்ச விஷயமே திடீருனு கேட்கும்போது மறந்துடுது.. என்ன செய்ய“னு கேனத்தனமா ஒரு சமாளிப்பு வேற..
இந்த மாதிரி ஆளுங்கள என்ன சொல்றதுனு தெரியல. கிரிக்கெட் பாக்கும்போதும், சினிமாவுல ஹீரோ பாகிஸ்தான் நாட்டு வில்லனப் பாத்து ஆக்ரோசமா வசனம் பேசும்போது கைதட்டி விசிலடிக்கும்போதும் மட்டும் தான் மக்களுக்கு நாட்டுப் பற்று இருக்கும்போல.. அதுக்காக எப்பவும் தேசியக்கொடிய நெஞ்சுல குத்திகிட்டு அலைய சொல்லல. ஆனா அதோட வண்ணம் மறந்துடுச்சுனு சொல்றது...............
நா தெரியாம தான் கேக்குறேன்.. உங்கப்பன் யாருனு கூடத் தான் உனக்கு நல்லா தெரியும்.. யாராவது திடீருனு கேட்கும்போது அதுல எதுவும் குழப்பம் வந்ததுண்டா???
ஏண்டா இப்படி மானத்தை வாங்கித் தொலைக்கிறீங்க??
.
இந்த மாதிரி அலட்டல் ஆசாமிகளைப் பார்க்கும்போது கோவம்தான் வருது.. அதுக்காக புத்தாண்டு வாழ்த்து சொல்லாம இருக்க முடியுமா???
.சக பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
”மனதின் காயங்களை மறக்கக் கற்றுக்கொண்டால் மாயமாகிப்போகும் வலிகள்”
கசப்பான நிகழ்வுகளை செரிக்கவும் சுகமான சந்தோசங்களை அனுபவிக்கவும்.. ஆக மொத்தம் இந்தப் புது ஆண்டு நம்பிக்கையாய் அமைய வாழ்த்துக்கள்.
.
.
Comments
" WISH YOU A HAPPY NEW YEAR "
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வாழை இலைய கீழ போட்டு (பச்சை) அதுமேல சாப்பாட்டை போட்டு (வெள்ளை), அதுமேல காரக்குழம்பை (சிவப்பு) ஊத்தணும்ன்னு.......
ஹி..ஹி.. நாங்க எல்லாம் அப்பவே அப்படி.. இப்ப சொல்லவா வேணும்?... என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஏங்க எல்லாரும் உங்கமாதிரி இருக்கமுடியுமா...!
எப்புடி...!
எல்லோரும்...
எல்லாமும்
இவ்வாண்டு
அளவோடு பெற்று...!
நலமோடும்...!
வளமோடும்....!
வாழ்க...! என்ற
வாழ்த்துக்களுடன்....
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்...!
"என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"....!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"
with full of great achievements and experiences. A meaningful chapter waiting to be written HAPPY NEW YEAR!
Greet with trees on this New Year
புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி...
I am also agree with him