ஜாக்கிரதை - இணைய நட்பு (!!!)..

கம்ப்யூட்டர் என்பதே கனவா இருந்த காலம் மாறி, இன்னைக்கு யாரைப் பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாகத் திரியுற காலம் வந்தாச்சு. ” பொழுதே போகல, Browsing Centre போயிட்டு வரேன் ” னு சொல்றவங்க பல பேர். எதுவும் இல்லேனா போன்லயாவது இணையத்தை பார்த்துக்கொண்டிருப்பவங்க நிறைய.. தகவல்களுக்காக, தொழிலுக்காகனு இந்த ஊடகத்தை உபயோகிக்குறது தவிர்த்து பெரும்பாலானவங்க பங்கெடுத்துக்குறதுக்கு ஒரே முழுமுதற் காரணம் - எதிர்பாலின ஈர்ப்பு தான். மெயில் பார்க்குறதுல தொடங்கி ஆர்குட், ட்விட்டர், பேஸ்புக்னு எதுல பார்த்தாலும் இணைய நட்புங்குற ஒரு விஷயம் பரவிகிட்டு வருது. எந்நேரமும் ச்சாட்டிங்.. ச்சாட்டிங்.. ச்சாட்டிங் தான். இந்த மாதிரியான நட்புல ஆண் பெண் பாகுபாடில்லாம நட்பை வளர்த்துக்குறது நல்ல விஷயம் தான். ஆனா அந்த நட்பு ஆரோக்யமா இருக்குதா இல்லையாங்குறது தான் இன்னைக்கு கவலைக்குரிய விஷயம். செய்தித்தாள்கள்ல இப்ப எல்லாம் அடிக்கடி வரும் செய்திகள் இணைய நட்புக்களைப் பத்திதான்.. “நண்பர்போல பேசி ஏமாத்தினவங்க.. முகம் காட்டாம காதல் வளர்த்து மோசம் போனவங்க..“னு என்னென்னவோ கேள்விப்படுறோம். விபரங்கள் புதுசா இருந்தாலும் நடக்குற எல்லா ...