ஜாக்கிரதை - இணைய நட்பு (!!!)..



கம்ப்யூட்டர் என்பதே கனவா இருந்த காலம் மாறி, இன்னைக்கு யாரைப் பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாகத் திரியுற காலம் வந்தாச்சு. பொழுதே போகல, Browsing Centre போயிட்டு வரேன்னு சொல்றவங்க பல பேர். எதுவும் இல்லேனா போன்லயாவது இணையத்தை பார்த்துக்கொண்டிருப்பவங்க நிறைய..
தகவல்களுக்காக, தொழிலுக்காகனு இந்த ஊடகத்தை உபயோகிக்குறது தவிர்த்து பெரும்பாலானவங்க பங்கெடுத்துக்குறதுக்கு ஒரே முழுமுதற் காரணம் - எதிர்பாலின ஈர்ப்பு தான்.
மெயில் பார்க்குறதுல தொடங்கி ஆர்குட், ட்விட்டர், பேஸ்புக்னு எதுல பார்த்தாலும் இணைய நட்புங்குற ஒரு விஷயம் பரவிகிட்டு வருது. எந்நேரமும் ச்சாட்டிங்.. ச்சாட்டிங்.. ச்சாட்டிங் தான். இந்த மாதிரியான நட்புல ஆண் பெண் பாகுபாடில்லாம நட்பை வளர்த்துக்குறது நல்ல விஷயம் தான். ஆனா அந்த நட்பு ஆரோக்யமா இருக்குதா இல்லையாங்குறது தான் இன்னைக்கு கவலைக்குரிய விஷயம்.
செய்தித்தாள்கள்ல இப்ப எல்லாம் அடிக்கடி வரும் செய்திகள் இணைய நட்புக்களைப் பத்திதான்.. “நண்பர்போல பேசி ஏமாத்தினவங்க.. முகம் காட்டாம காதல் வளர்த்து மோசம் போனவங்க..“னு என்னென்னவோ கேள்விப்படுறோம். விபரங்கள் புதுசா இருந்தாலும் நடக்குற எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை ஒன்னுதான். சரியான புரிதல்களும் பக்குவமும் இல்லாததும் ஆர்வக்கோளாறும்தான் காரணம்.
பெயர்கள்ல ஆரம்பிச்சு, சுயவிபரம் எல்லாமே போலியா காண்பிச்சு மத்தவங்கள ஏமாத்துற ஆட்கள் இணையத்துல பரவிக்கிடக்குறாங்க. உண்மையான தகவல்களைப் பகிர்ந்து, அதுனால பிரச்சனைகள்ல மாட்டிக்கிற ஆளுங்களும் குறைவில்லாம இருக்காங்க.
இணையத்தைப் பொறுத்தவரைக்கும் ஆண்கள், பெண்கள்“னு பாகுபாடில்லாம ஏமாறுறாங்க. இதுல காமெடி என்னானா, பெண்கள் பெயர்கள்ல ஆண்களும், ஆண்கள் பெயர்கள்ல பெண்களும் கூட போலியா இருக்காங்க. மனசுல இருக்குற வக்கிரங்களை வெளிப்படுத்த இணையத்தை ஒரு நல்ல ஊடகமா இவங்க பயன்படுத்திக்குறாங்க. இதுக்கு அடிமையாகுற பலரால இந்த வட்டத்தை விட்டு வெளிவரவே முடியிறதில்ல.
அறிமுகமாகி ரெண்டாவது நாளே காதல் வசனம் பேசுற சில அதிகப்பிரசங்கிகள் இங்க உண்டு. எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும், எல்லை தாண்டலாம்னே வலை விரிக்குற சில வில்லன்களும் உண்டு.. நட்புங்குற பேர்ல நடிச்சு நம்ம ரசகியங்கள வாங்கி  நமக்கே ஆப்பு வைக்குற சில நல்ல்ல்ல்ல்லவர்களும் உண்டு.
இதெல்லாத்துக்குமே மூல காரணம், பாலின ஈர்ப்புங்குற ஒரு விஷயம் தான். இதுல ஆண்கள் மட்டும், பெண்கள் மட்டும்னு விதிவிலக்கே இல்லாம எல்லாருமே மாட்டிக்குறாங்க. நேர்ல பார்த்து, புரிஞ்சு, பழகுற நட்பே பாதில முடிஞ்சு போயி புலம்பிகிட்டு இருக்கானுக.. இந்த லட்சணத்துல பார்க்காம, புரிஞ்சுக்காம, வெறும் வாய்வார்த்தைகளோட வேஷங்கள மட்டுமே நம்பி உண்டாகுற நட்பு அல்லது காதல் எப்படி நிலைக்குமோ தெரியல. இங்கு நட்பை விட காதல் ரொம்ம்பவே பரிதாபம்..
இதுக்கெல்லாம் ஒரே வழி, சரியான புரிதலும் பகுத்தறியுற திறனும் தான். எந்த மாதிரியான ஆட்கள் பேசினாலும் உடனே பேசிடக்கூடாது.  ஒரு சிலரோட கொஞ்ச நேரம் பேசினாலும் அவர்களுடைய பேச்சுல இருந்தே, அவங்களோட நோக்கத்த நம்மளோட உள்மனம் கண்டுபிடிச்சுடும். குறிப்பா பெண்களுக்கு இந்த அனுபவம் கட்டாயம் இருக்கும். அந்தமாதிரியான சந்தர்ப்பங்கள்ல அவங்ககூட பேசுறதை மட்டுமில்லாம அவங்களையும் தவிர்த்துடலாம்.
அநாவசியமா நம்ம ரகசியங்கள யாரோடும் பகிர்ந்துக்குறத தவிர்க்குறது நல்லது. எந்த சூழ்நிலையிலும் எல்லை தாண்டாம, தாண்டவிடாம கவனமா பேசுறது முக்கியம்.
இணைய நட்பு சகஜமாகிட்டு வர்ற இந்த காலத்துல, அதுல இருக்குற பிரச்சனைகளையும் மனசுல வச்சுகிட்டு பேசுறது நல்லது. பொழுதுபோக்கா பேச ஆரம்பிச்சு தனக்கே சூன்யம் வச்சுக்குற நிலைமை உண்டாகாம பார்த்துக்கணும்..
.
.

Comments

Anonymous said…
சமுதாயத்தில் இன்று சகஜமாகிவிட்ட ஒரு விடயம் இது...எச்சரிக்கையாக கையாண்டு இருப்பது பாராட்டுக்குரியது. கீப் இட் அப்!
ஜாக்கிரதை - இணைய நட்பு (!!!).

நன்றாகவே எழுதப்பட்டுள்ளது.

ஜாக்கிரதையாகவே இருங்கள்.
எப்போதுமே இப்படித்தானா...!
இல்லை..!
இப்படித்தான் எப்போதுமேவா...!
ஆத்மா said…
Nalla pakiru

Keep it up
ஆத்மா said…
Nalla pakiru

Keep it up
இப்போது வரும் செய்திகளை ஒருவாரம் கவனித்தாலே போதும், விழிப்புணர்வு தானே வந்துவிடும். பொதுவாக பெண்கள் (அதிகம் படித்தவர்கள் கூட) செய்திகள், நாட்டு நடப்புகளில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. என்னதான் ஐபேட், ஃபேஸ்புக் என்று அட்வான்சாக இருந்தாலும் இந்த விஷயத்தில் அறியாமை, ஆர்வக்கோளாருதான் அதிகம் இருக்கிறது!
Unknown said…
விளிப்புணர்வு என்பது அவரவர் புரிந்து கொள்ளும் விதத்தில் அக்கா ஆனாலும் இணைய நட்பில் யாக்ரதை தேவைதான்...
Moortthi JK said…
great indria..... i agree with this one....
விபரங்கள் புதுசா இருந்தாலும் நடக்குற எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை ஒன்னுதான். சரியான புரிதல்களும் பக்குவமும் இல்லாததும் ஆர்வக்கோளாறும்தான் காரணம்.
//Krishna //

//வை.கோபாலகிருஷ்ணன் //

//காஞ்சி முரளி //

//சிட்டுக்குருவி //

//பன்னிக்குட்டி ராம்சாமி //

//எஸ்தர் சபி //

//Moortthi JK //

//chicha.in //


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
Anonymous said…
    இன்றய காலக்கட்டத்திற்கு ஏற்ற தேவையான  பதிவு! நன்றி!

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..