ஒரு பயணம்.. ஒவ்வொரு அனுபவம்..



வெகு நேரக் காத்திருத்தலுக்குப் பின் ஒரு வழியாகப் பேருந்து வந்தது. தோளில் மாட்டியிருந்த பை, பழங்கள் வாங்கி அடைத்திருந்ததால் சற்று கனக்கவே, ஒரு கையால் வாகாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏற எட்டு வைத்தேன். என்னைப் போலவே கால்கடுக்கக் காத்திருந்தவர்களின் எண்ணிக்கையை அப்போதுதான் பார்க்க முடிந்தது. படியை நோக்கி சர சரவெனக் கூட்டம் மொய்க்க, ஒருவாராக உள்சென்றுவிட்டேன். அந்தக் கூட்டத்தில் உட்கார இடம் தேடுவது மடத்தனமெனத் தோன்றவே, நிற்பதற்கு ஏதுவான இடம் தேடி, நகர்ந்து நகர்ந்து, பிடித்து நிற்க வசதியான இடத்தில் கால்களை ஊன்றி நின்றுகொண்டதும் பெருமூச்சொன்று வந்துபோனது.
இரண்டு நிறுத்தங்கள் தாண்டி எனக்கருகே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, இறங்க வேண்டி எழுந்திரிக்க, “அப்பாடா“ என்ற நிம்மதி என் முகத்தில்.. காலியான இருக்கையில் அமர போட்டி போட்டவர்கள் மத்தியில், இருக்கைக்கு வெகு அருகே நின்றிருந்த நான் வெற்றி பெற்றேன். வெகுநேரம்  பேருந்துக்கு காத்திருந்த சலிப்பும் தோள்பையின் கணமும் கொஞ்சம் குறையத்தொடங்கிய நேரம், என்னருகே ஒரு பெண்மணி நின்றிருந்தாள். நான் நின்ற அதே இடத்தில் ஒரு குழந்தையை கையில் வைத்தவாறு.
கூட்டத்தின் இடிபாடுகளில் அவளால் அப்பிஞ்சுக் குழந்தையை தூக்கி நிற்க முடியவில்லை என்பது மட்டும், அவளது முகத்தில் தெரிந்த வெறுப்பில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவளுடைய அசவுகரியத்தைக் குறைக்க எண்ணி, என் மடியிலிருந்த பையை சற்று தள்ளி வைத்துக்கொண்டு குழந்தையை வாங்கக் கைநீட்டினேன்.
“இவன் யார்கிட்டயும் போகமாட்டாங்க, அழுவான்“ என்று அந்தப் பெண் கூறவும், அவன் அழுகவும் சரியாக இருந்தது. நானும் பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். ஆனாலும் என்னால் அவளருகே, அவளுடைய கஷ்டத்தைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாக உட்கார முடியும் என்று தோன்றவில்லை. ஒரு புறம் எழுந்து இடம் கொடுக்கலாம் என்று நினைத்தாலும், சராசரி மனிதருக்கே உரிய மறுபுறமாய், அடுத்தவர் பற்றி கவலைப்படுவானேன் என்று தோன்ற மௌனமாய் அமர்ந்திருந்தேன்.
ஒருசில வினாடிகளில் அந்தக் குழந்தையின் அழுகை கொஞ்சங்கொஞ்சமாய் பெருக்கெடுக்க ஆரம்பிக்கவே, முடிவெடுத்தவளாய் எழுந்து அந்தப் பெண்ணை உட்காரச் சொன்னேன். முதலில் சம்பிரதாயமாய் மறுத்தவள் பிறகு சந்தோசமாய் மகனை மடியில் வசதியாக வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள். பின், நன்றி கூற நினைத்தாளோ என்னவோ, “உங்க பையை குடுங்க, நா வச்சிருக்கேன்னு சொல்லி கை நீட்ட, நானும் அதை எதிர்பார்த்தவளாய் உடனே கொடுத்தேன்.
அரைமணி நேரப் பயணத்திற்குப் பிறகு நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வரவே, பையை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு இறங்கினேன். நின்று வந்தது அலுப்பாக இருந்தாலும், ஒரு தாயின் சுமையை என்னால் முடிந்த அளவு ஒரு அரைமணி நேரமாவது குறைத்தேனே என்கிற சிறு சந்தோசத்தை உணர்ந்தபடி வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன்.
அதே சமயம்...
என்னைத் தாண்டிச் சென்ற பேருந்தில், (என் தோள்பையில் எனக்குத்தெரியாமல் எடுத்த) என் பர்ஸை மெதுவாகத் திறந்து பணத்தை எண்ண ஆரம்பித்தாள் அந்தப் பெண். மடியிலிருந்த குழந்தையைப் பார்த்து சரியான லூசுடா அவ.. இந்தக் காலத்துல இப்படி ஒரு கேனை.. ம்ம்ம் இன்னிக்கு கலெக்சன் கம்மியாயிடுச்சேனு நெனச்சேன். நல்லவேளை இவ மாட்டினா..என்று சொல்ல, எதுவும் புரியாக அந்தக் குழந்தை மீண்டும் சிரிக்கத் தொடங்கியது.
.
.

Comments

Athisaya said…
இந்திரா யாருங்க??இம்சை இந்திராங'க...யாராச்சும் ஏமாத்திடுவாங்களா???பாப்பம் வாழ்த்துக்கள் சொந்தமே..சந்திப்போம்.
உதவி செய்து
உபத்திரவம் வாங்கிய கதை!
அப்டியே நீங்க போற பஸ்ரூட்ட சொன்னிங்கன்னா வசதியாயிருக்கும்..... அட நான் ஒங்க செக்யூரிடிக்காகத்தானுங்க கேக்குறேன்...
MARI The Great said…
சில இடங்களில் நல்லது செய்தாலும் நிதானித்து செய்யவேண்டும் என்பதே உண்மை ஆனால் இதற்க்காக நம்மை மாற்றிக்கொள்ள தேவையில்லை. அது சில சமயம் உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு உதவாமல் போய்விடும் சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.

எப்போதும் நீங்கள் நல்லதே செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் யாராவது ஒருவரிடமிருந்து அவை டன்டன்னாக திரும்பக் கிடைக்கும் சில சமயம் முகமே அறியாதவரிடமிருந்தும் கூட :)
//Athisaya //

//இராஜராஜேஸ்வரி //


நன்றிங்க..
//சுட்டபழம் said...

அப்டியே நீங்க போற பஸ்ரூட்ட சொன்னிங்கன்னா வசதியாயிருக்கும்..... அட நான் ஒங்க செக்யூரிடிக்காகத்தானுங்க கேக்குறேன்...//

ஹிஹி.. டாங்க்ஸ்ங்க..
உங்க நல்ல்ல்ல எண்ணம் புரியுதுங்க..
//வரலாற்று சுவடுகள் //

கருத்துக்கு நன்றிங்க..
உண்மை சம்பவமா
இன்றைய உலகத்தில்...

இரக்கம் தேவைதான்... ஆனாலும்...
அதிக இரக்கம் இரக்கபட்டவனுக்கு ஆபத்தை உருவாக்கும்...!
இது அனுபவப் பாடம்...!

ஆனால்...!

"நன்மையை விதைத்தவன் நன்மையை அறுப்பான்...!

தீமையை விதைத்தவன் தீமையை அறுப்பான்...!" என்ற முன்னோரின் சொற்படி...!

அததற்கு உரிய பலன்கள்... நிச்சயமாய் கிட்டும்...!

அது சரி...!

கைப் பையை கொடுத்த நீங்கள்...!
அதன்மீதே கவனம் செலுத்தாமல்... ஏமாந்துவிட்டு...
ஏமாற்றியவரை குற்றம் சொல்வது என்ன நியாயம்...?

என்னை பொறுத்தளவில்...

எமாற்றுபவனைவிட...
ஏமாந்தவர்மீதுதான் கோவப்படுவேன்...!
இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/06/7.html
சீனு said…
இந்தக் கதையை எப்படி படிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லையே, அருமையாக கதை சொல்லி இருகிறீர்கள், மனிதனின் மறுபக்கம் என்ற ஒன்று இந்த வரத்தை பிரயோகம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்
இந்த காலத்துல வுதவி செஞ்ச நம்ள லூசுன்னு சொல்வாங்க

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..