அபிப்ராயங்கள் ≠ அனுபவங்கள்..



நம்ம ஊர்ல ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ஏதாவது அறிவுரையோ அபிப்ராயத்தையோ சொல்ல ஆரம்பிச்சவுடனே, “உனக்கு இதப் பத்தி என்ன தெரியும்? அனுபவமில்லாம பேசாத“னு சொல்லி வாய அடச்சிடுவாங்க.  வாஸ்தவம் தான்.. ஆனா இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தாது. உதாரணத்துக்கு, பத்தாவது மாடிலருந்து கீழ குதிச்சா என்ன ஆகும்னு சொல்றதுக்கு, அப்படி குதிச்சுப் பார்த்த அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. சரி தானே?
நா எழுதுன “சந்தோசமா சரக்கடிங்க பதிவுலயும் இந்தக் கேள்வி வந்துச்சு.. குடிப்பழக்கத்துல இருக்குற கெடுதல்கள்பத்தி சொல்றதுக்கு குடிச்சுப் பார்த்திருக்கணும்னும், குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகத்துல வேலை பார்க்குறதுக்கு குழந்தை பெத்திருக்கணும்னும் அவசியம் இல்லையே.. அனுபவப்பூர்வமா அறிவுரை சொல்றதுல நிறைய உபயோகம் இருக்கலாம். அதே மாதிரி ஒட்டுமொத்தமா அனுபவம் இருந்தா மட்டும்தான் ஒரு விஷயம் பற்றி பேசணும்னும் சொல்லிட முடியாது. கேள்வி ஞானம் மட்டுமே வச்சு சொல்லப்படுற அபிப்ராயங்களுக்கும் மதிப்பு இருக்கத்தான் செய்யும்.
“நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்“னு விளம்பரம் பண்ற மாதிரி ஒருசிலர் வெட்டியா, கடனேனு கருத்து சொல்வாங்க.. அவங்களுக்கு வேணும்னா இப்படி சொல்லி ஓரங்கட்டலாம். ஆனா உபயோகமா, நமக்கு உதவுற நோக்கத்துல அபிப்ராயங்களும் அறிவுரைகளும் சொல்றவங்கள நாம ஒதுக்கக் கூடாது.
அப்புறம் ஒரு சிலர் இருப்பாங்க.. வெறும் யூகங்கள் அடிப்படைலயே முடிவெடுத்துடுவாங்க. உதாரணத்துக்கு காட்டன் சேலை கட்டி கண்ணாடி போட்டு, கைல குடை வச்சிருந்தா “டீச்சர்“, முறுக்கு மீசையும் தொப்பையுமா இருந்தா “போலீஸ்“ங்குற மாதிரி! இது அந்தந்த துறைகளுக்குப் பொருந்தலாமே தவிர, இத வச்சு மட்டுமே உறுதி செய்திட முடியாது.. “சிகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்“னு சொல்ற மாதிரி.
நேத்து ஒரு நண்பர்கிட்ட பேசும்போது, “ஏன் இந்திரா.. காதல் தோல்வி கவிதைகள் அதிகமா எழுதுற மாதிரியிருக்கே.. உங்களுக்கு காதல் தோல்வியோ?“னு துக்கம் விசாரிச்சார்.. (அடக்கொடுமையே..). எழுத்துக்களுக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒரு சில சம்பந்தங்கள் இருக்கலாம். ஆனா எழுதுற எல்லாமே வாழ்க்கைல நடந்திருக்கணும்னு அவசியமில்ல. அதுலயும் சொந்த அனுபவமாகத் தான் இருக்க வேண்டும்குற கட்டாயமுமில்ல. புனைவுகளாக் கூட இருக்கலாமே.. எழுதுற கவிதை சந்தோசமா இருந்தா காதல் கைகூடிருச்சுனும், சோகமா இருந்தா தோல்வியடைஞ்சுடுச்சுனும் அர்த்தம் இல்ல. இத விட முதலாவது, கவிதை எழுதுறவங்க எல்லாருக்கும் காதலனோ காதலியோ இருக்கணும்னு சட்டமும் இல்ல.
நா முன்னாடியே சொன்ன மாதிரி, அபிப்ராயங்கள் சொல்றதுக்கும் அனுபவத்துக்கும் தொடர்பு இருக்கணும்னு அவசியமில்லை. பார்த்தது, கேள்விப்பட்டதா கூட இருக்கலாம். அதுல இருக்குற விஷயங்கள் எப்படிப்பட்டதுனு மட்டும் நாம எடுத்துக்கணுமே தவிர, அத யார் சொன்னது? அவுங்களுக்கு இதுல அனுபவம் இருக்குமா?ங்குற ஆராய்ச்சி தேவையில்லாதது.
தோழி ரேவா சொன்னது போல, “கவிதைகளுக்கு அனுபவம் தேவையில்லை”..   இது கவிதைக்கு மட்டும் இல்ல.. கருத்துக்களுக்கும் தான்.
சரியா?
.
.

Comments

vinu said…
me firsttuuuuuuuu
vinu said…
padichchaachu padichchaachuuuuuuuu
Unknown said…
என்ன சொல்ல இந்திரா எல்லாரும் ஒரு குறுகிய வட்டத்தில தான் தன் பார்வையை மேய விடுறாங்க, அனுபவத்திற்கும், எழுத்துக்கும் தொடர்பு இருந்தாலும் அந்த அனுபவம்ங்கிறது நமக்கு ஏற்படுற நடக்கிற விசயமாத்தான் இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை தானே...

என்னைக்கு தான் இந்த பார்வைகள் மாறப்போகுதோ தெரியலை...........
Athisaya said…
சரியாகச்சொன்னீர்கள்..இப்போதெல்லாம் இப்படி பார்பது ஒரு வழக்கமாகிவிட்டது.சகோ ம தி.சுதாவின் மதியோடையின் கடைசிப்பதிவும் இதைத்தான் சொல்கிறது..
மன்னிக்க வேண்டும்...!

தங்கள் இந்த கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன்...!

////அபிப்ராயங்கள் சொல்றதுக்கும் அனுபவத்துக்கும் தொடர்பு இருக்கணும்னு அவசியமில்லை. பார்த்தது, கேள்விப்பட்டதா கூட இருக்கலாம்.////

கடலில் விழுந்து மீண்டவன்தான்...!தான் தண்ணீர் குடித்தானா...! மூச்சு முட்டியதா...! உயிர் போய் வந்ததா..! என்ற தன் அனுபவத்தை.. தான் உயிர் பிழைத்ததை ஒவ்வொரு நொடியாக... தான் அனுபவித்த மரண வேதனையை சொல்லமுடியும்...!

வெளியிலிருந்து வேடிக்கை பார்த்தவனுக்கு என்ன தெரியும்.?

அவன் சொல்வான்
"அவன் கடல் அலையில் சிக்கி தவித்தான்...! என ஒரே வார்த்தையில்...!

கொஞ்சம் வர்ணனையுடன் சொல்வானாயின்...
அவன் ஆழ்கடலில் மூழ்கி... மூச்சுதிணறி கைகளை அசைத்து... மூழ்கி.. மூழ்கி.. எழுந்தான்... பின்னர் உயிர் பிழைத்தான்" என்றுதான் சொல்ல முடியுமே தவிர..!

ஆனால்....!
கடலில் மூழ்கி உயிர் பிழைத்தவன்....

தான் அனுபவித்ததை....
தன் உயிர், எமலோகம் சென்று திரும்பி வந்த அனுபவத்தை...
தன் ரண வேதனையை...
தன் உயிர் ஊசலாடியதை....
உயிர் தன் உடலைவிட்டு நீங்கி... பின் திரும்பி தன் உடலுக்குள் நுழைந்த அனுபவத்தை...
கடலில் விழுந்தவன்தான்... தன் அனுபவத்தை விவரமாய் சொல்லமுடியுமே தவிர...!

வேடிக்கை பார்த்தவன் எப்படி விவரமாய் சொல்லமுடியும்...!

ஏட்டில் "சர்க்கரை" என்று படித்த ஒருவன்...!

"சர்க்கரை இனிக்கும்" என பொதுவாய் 'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என பொத்தம்பொதுவாய் சொல்லலாம்...!

ஆனால்..!

சர்க்கரை சாப்பிட்டவன்தான்.... தான் அனுபவித்த இனிப்பின் சுவையை சொல்லமுடியுமே தவிர....

ஏட்டில் "சர்க்கரை" என்று படித்த ஒருவன் எப்படி சொல்லமுடியும்..!

எனவே...!

////அபிப்ராயங்கள் சொல்றதுக்கும் அனுபவத்துக்கும் தொடர்பு இருக்கணும்னு அவசியமில்லை. பார்த்தது, கேள்விப்பட்டதா கூட இருக்கலாம்.////

அபிப்ராயம் சொல்வதுக்கும் - பார்த்ததை... கேள்விப்பட்டதை சொல்வதுக்கும்...!

ஒருவர்...
தான் அனுபவித்த, அனுபவத்தை சொல்வதுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது...! இந்திரா அவர்களே..!


தங்கள் இக்கருத்தை சிலர் "ஆமாம்" எனச் சொல்லியிருப்பவர்கள் "கற்றிந்து கரைகண்ட மேதாவிகளாய்" இருக்கலாம்...!

ஆனால்...!

நான் கல்லாதவன்...!
அதோடு... என்றும் "கற்றது கைமண் அளவு...! கல்லாதது உலகளவு...!" என்ற மூதோர் மொழியை பின்பற்றுபவன்...!

அதோடு...!

ஒருவன் உலகத்தின் மெத்தபடித்த... அனைத்து துறைகளிலும் கல்வி கற்று.. மாபெரும் அறிவாளியே ஆனாலும்... அனுபவம் இல்லை என்றால்... தான் கற்றதை சொல்லி புரிய வைப்பதுக்கும்...!

ஓர் சராசரி மனிதன் தன் அனுபவத்தை சொல்லி புரிய வைப்பதுக்கும்...!

நிறைய வேறுபாடு உள்ளது...!

எப்போதும்...!
எக்காலத்திலும்...!
"ஏட்டுச் சுரைக்காய்... கறிக்கு உதவாது"...! இந்திராவே...!

கல்வி அறிவை விட...
கேட்டு அறிதலை விட....
பார்த்து அறிதலை விட...!
அனுபவ அறிவு மிகமேன்மையானது...!
மிகவும் பயன்படக்கூடியது...!
மிகவும் அவசியமானது...!

இதைவிட வேறேதும் பெரிதில்லை...! முதன்மையானதில்லை..! என்பது என் தாழ்மையான கருத்து....!
அனுபவம் ஒரு சிறந்த பாடம் என்பதே என் கருத்து ஆனாலும் எல்லா பதிவிற்கும் அதுவே போதுமானதாக இருக்க முடியாது ...
//vinu //

//ரேவா //

//Athisaya //

வருகைக்கும் கருத்துக்ககும் நன்றி..
:-)
//காஞ்சி முரளி //

நண்பரின் வருகைக்கு நன்றி.
என்னுடைய பதிவில்
//அனுபவப்பூர்வமா அறிவுரை சொல்றதுல நிறைய உபயோகம் இருக்கலாம். அதே மாதிரி ஒட்டுமொத்தமா அனுபவம் இருந்தா மட்டும்தான் ஒரு விஷயம் பற்றி பேசணும்னும் சொல்லிட முடியாது. கேள்வி ஞானம் மட்டுமே வச்சு சொல்லப்படுற அபிப்ராயங்களுக்கும் மதிப்பு இருக்கத்தான் செய்யும்.//
என்று கூறியிருப்பேன். அதாவது அனுபவசாளிகளின் அபிப்ராயங்களும் கருத்துக்களும் மிகுந்த பயனளிக்கும்.. நான் மறுக்கவில்லை. ஆனால் கேள்வி ஞான அடிப்படையில் சொல்லப்படும் கருத்துக்களுக்கும் பயன் உண்டு என்பது தான் என் கருத்து.
தான் பட்ட கஷ்டங்களை எடுத்துரைக்க அனுபவம் தேவை என்றாலும், தோராயமாக என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படலாம் என்று கூறுவதற்கு அனுபவம் தேவையில்லையே.. ஒட்டுமொத்தமாக ஒதுக்கிட முடியாது என்று தான் கூறுகிறேன்.

தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே..
:-)
//Sasi Kala //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
:-)
சீனு said…
//எழுத்துக்களுக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒரு சில சம்பந்தங்கள் இருக்கலாம். ஆனா எழுதுற எல்லாமே வாழ்க்கைல நடந்திருக்கணும்னு அவசியமில்ல.//

எல்லாவற்றையும் பார்க்கும் பார்வையில் இருந்து புரிந்து கொள்ள முடியாது என்பத உண்மையே. சிலவற்றை அனுபவம் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும். சிலவற்றை பிறரின் அனுபதிளிருந்து பெறலாம். அனுபவம் கொடுக்கும் படம் தானே எரிய படமாக இருக்க முடியும்


படித்துப் பாருங்கள்

காவி நிறத்தில் ஒரு காதல்

seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.html
This comment has been removed by the author.
தாங்கள் இப்பதிவில் கேட்ட கேள்வியை நண்பர் ஜெய்லானியிடம் கேட்டேன்...!

அவர்...! ஓர் சிறந்த பதில் தந்தார்...!

இதோ...! அது...!

Jailani ஜெய்லானி

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

... அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

--கண்ணதாசன் :-)///



எப்புடி...!!!!!!!!!!!!1
அருமையாக சொன்னீங்க தோழி பெரும்பான்மையான வாசகனின் மனநிலையை படம் போடு காட்டிவிட்டீர்கள் சுள்ளுன்னு உரைக்கிற அறிவுரை ...........தொடர்ந்து தாருங்கள் உங்கள் எழுத்துகளை

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..