அத்தனையும் மீறி..

நேசத்தின் அவசியமின்றி நிகழ்ந்திடலாம் ஒரு பிரிவு..! நேரடியாகச் சொல்லாமல் நெருங்கிடலாம் ஒரு ஏமாற்றம்..! தார்மீகப் பொறுப்பேற்று தாக்கிடலாம் ஒரு தோல்வி..! அடக்க முடியாமல் ஆர்ப்பரித்திடலாம் ஒரு அழுகை..! நட்பைத் தகர்த்து நையாண்டி செய்யலாம் ஒரு துரோகம்..! வெறுமை சூழ்ந்து வேடிக்கை காட்டலாம் ஒரு இயலாமை..! ஏதுமற்ற வெற்றிடமாய் எளிதாய்த் தோன்றிடலாம் ஒரு விரக்தி..! நெஞ்சுக்கூட்டுக்குள் சுருண்டு நீங்காமல் வந்திடலாம் ஒரு வலி..! அத்தனையும் மீறி வீழ்ந்துவிட்ட இடத்திலிருந்து விலகாமல் எழக்கூடும் ஒரு (தன்)நம்பிக்கை..!! . .