அத்தனையும் மீறி..
நேசத்தின் அவசியமின்றி
நிகழ்ந்திடலாம் ஒரு பிரிவு..!
நேரடியாகச் சொல்லாமல்
நெருங்கிடலாம் ஒரு ஏமாற்றம்..!
தார்மீகப் பொறுப்பேற்று
தாக்கிடலாம் ஒரு தோல்வி..!
அடக்க முடியாமல்
ஆர்ப்பரித்திடலாம் ஒரு அழுகை..!
நட்பைத் தகர்த்து
நையாண்டி செய்யலாம் ஒரு துரோகம்..!
வெறுமை சூழ்ந்து
வேடிக்கை காட்டலாம் ஒரு இயலாமை..!
ஏதுமற்ற வெற்றிடமாய்
எளிதாய்த் தோன்றிடலாம் ஒரு விரக்தி..!
நெஞ்சுக்கூட்டுக்குள் சுருண்டு
நீங்காமல் வந்திடலாம் ஒரு வலி..!
அத்தனையும் மீறி
வீழ்ந்துவிட்ட இடத்திலிருந்து
விலகாமல் எழக்கூடும் ஒரு (தன்)நம்பிக்கை..!!
.
.
Comments
இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html
மனம் கவர்ந்த அழகிய கவிதை படைப்பிற்கு .
இதில்
இது
எது...?????????
எதுவாயிருந்தாலும் "சூப்பர்"...!
வீழ்ந்துவிட்ட இடத்திலிருந்து
விலகாமல் எழக்கூடும் ஒரு (தன்)நம்பிக்கை..!! // அருமை.
தொடருங்கள்.
வீழ்ந்துவிட்ட இடத்திலிருந்து
விலகாமல் எழக்கூடும் ஒரு (தன்)நம்பிக்கை..!!
தன்னம்ப்பிக்கைக்குப் பாராட்டுக்கள்..
ஆம்
நம்பிக்கையில்தான்
ஞாயிறு புலறுகிறது
நாமும் வாழ்கிறோம்
//ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //
//சங்கவி //
//s suresh s//
//அம்பாளடியாள் //
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
//சித்தர்கள் ரகசியம் //
//T.N.MURALIDHARAN //
நன்றிங்க..
///சும்மா, நம்பிக்கை, மொக்கை, வலி, வாழ்க்கை ///
இதில்
இது
எது...?????????
எதுவாயிருந்தாலும் "சூப்பர்"...!//
“கவிதை“னு சொன்னா மொக்கைனு தோணும்.. அதுனால கவிதை மாதிரி“னு சொல்லுவேன். அதுமாதிரி உங்களுக்கு எந்த வகைனு தோணுதோ அந்த மாதிரி எடுத்துக்கங்க.
வருகைக்கு நன்றி முரளி.
//திண்டுக்கல் தனபாலன்//
வருகைக்கு நன்றி நண்பர்களே..
தங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி தோழரே..
விரைவில் உங்கள் அறிமுக புகைப்படத்தை அனுப்பி வைக்கிறோம்.. மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்//
அறிமுகப் புகைப்படமா?? நா தரவேயில்லையே.
அவ்வ்வ்.. ஏங்க இப்டிக் குழப்புறீங்க.
இராஜராஜேஸ்வரி //
கருத்துக்கு நன்றிங்க.
//dafodil's valley //
//அ. வேல்முருகன்//
நன்றிங்க..