விலகிச் செல்லும் வாழ்க்கை.. (படித்ததில் பிடித்தது)



இன்றும் ஒன்றை என்னைவிட்டு வழியனுப்ப நேர்கிறது..
நேற்றும் அதற்கு முன்பும் கூட..

இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல.
ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தை கணக்க வைக்கிறது.

இப்படியே நம் நண்பர்களை
நம் நினைவுகளை
நம் சிந்தனைகளை என
தினமும் ஏதாவது ஒன்றை வழியனுப்பிக் கொண்டிருப்பதை
நாம் யாரும் ஆழமாய் அறிவதில்லை..!!

ஆனால் பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்..!

இந்த வாசலில் மிகவும் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறோம்..
ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச் செண்டுகளாய் அனுப்பப்படுகின்றன..!!
.
.

Comments

நல்லதொரு சிந்தனை வரிகள்...


/// நம் நினைவுகளை
நம் சிந்தனைகளை என
தினமும் ஏதாவது ஒன்றை வழியனுப்பிக் கொண்டிருப்பதை
நாம் யாரும் ஆழமாய் அறிவதில்லை..!! ///

உண்மை... நன்றி...
aninthe said…
really nice !!!!!
சிறப்பான சிந்தனை! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




Athisaya said…
அருமை சொந்தமே!
ஆனால் பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்..!

அழகிய சிந்தனை சகோ.
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
Athisaya said…
இந்த வாசலில் மிகவும் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறோம்..
ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச் செண்டுகளாய் அனுப்பப்படுகின்றன..!!....என்னடா மஞறுபயும் வந்தேன் என்று பார்க்கிறீர்களா????மிக நேசித்த வரிகள் இவை.உண்மையும் கூட
அருமையான பதிவு. வாழ்த்துகள்.

என் பேத்தி போன்று தங்கள் பதிவில் உள்ள படத்திற்கு என் அன்பான வாழ்த்துகள்.

I am very Happy to share an award with you in the following Link:

http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

This is just for your information, please.

If time permits you may please visit and offer your comments.

Yours,
VGK
HariShankar said…
நிதர்சனமான உண்மை ... மிக அருமை ... வாழ்த்துக்கள் ..

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

நீ அழையாத என் கைபேசி..

மரணவலி தரும் உன் மௌனம்..