உப்புமா.. (04.10.2012)
ரொம்ப
நாளைக்கப்புறம் போன மாதம் தான் ஒன்பது பதிவு எழுதியிருக்கேன். 2010ல வலைப்பூ
ஆரம்பிச்சு, இடையில ஹேக் ஆகி மறுபடியும் பேக்-அப் எடுத்து புது வலைப்பூ தொடங்கி
பதிவுகள் எழுதி..னு நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. நடுவுல கொஞ்ச நாள் பதிவுகளோட
எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. எழுதுற ஆர்வம் குறைஞ்சதும், முகநூல்பக்கம் ஒதுங்குனதும்
முக்கியமான காரணம்னு சொல்லணும். ஜூலை மாசத்துல நாலே நாலு பதிவு தான்
எழுதியிருந்தேன். அப்புறம் ஒருவழியா திரும்பவும் ஓரளவு வேகம்பிடிச்சு, செப்டம்பர்ல
ஒன்பது பதிவு தேத்தியாச்சு. (ஒருநாளைக்கு நாலு பதிவு போடுறவங்களுக்கு இது சாதாரணமா
தெரியலாம். ஆனா எனக்கு இது பெரிய விஷயமுங்க..) எழுதுற ஆர்வம் இருந்தாலும் இந்திரா“ங்குற
அங்கீகாரமும் அடையாளமும் கிடைச்சது வலைப்பூவுல தான். நடுவுல கொஞ்சம் டல்லானாலும் மறுபடியும்
பழைய சுறுசுறுப்போட பதிவுகள் தொடரச் செய்யணும்.
:-)
----------------------------------------------------
இந்த
மாசத்தோட நான் அலுவலகத்துல சேர்ந்து அஞ்சு வருஷமாகுது. நிரந்தரப் பணியாளராகுற
தகுதியை அடைஞ்சுட்டேன். ஆனா நிரந்தரமாக்குறது தான் நிலுவைல இருக்கு. அதுக்கு இன்னும்
வருஷக்கணக்காகலாம்.. அரசாங்க அலுவலகமாச்சே!! ஆமை வேகத்துல தான் நடக்கும். இந்த
அஞ்சு வருஷத்துல எத்தனையோ தனியார் நிறுவனத்துல வேலைக்கு முயற்சி பண்ணி, கிடைக்குற
நேரத்துல வேண்டாம்னு தவிர்த்திருக்கேன். அரசாங்கப்பணி நிரந்தரமாகிடும்குற
நம்பிக்கைல. என்ன பண்றது.. நம்பிக்கைதானே வாழ்க்கை. ம்ம்ம் பார்க்கலாம்!!
----------------------------
மீசைக்காரனுக்கு
கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்கப் போகுது. போன வாரம் தான் வளைகாப்பு போட்டு கூட்டிகிட்டு
வந்துருக்காங்க. டிசம்பர்ல குழந்தை பிறந்திடும்னு சொல்லியிருக்காங்க. அவளுக்கு
நல்லபடியா சுகப்பிரசவமாகனும்னு வாழ்த்துங்கப்பா..
.
.
Comments
நம்பிக்கைதான் வாழ்க்கை உறவுகளுக்காக இறைவனிடம் பிரார்த்தித்தால் அப் பிரார்த்தனை விரைவில்ல் ஏற்றுக் கொள்ளப்படும்
நல்ல எழுத்தாழுமை உங்களிடம் இருக்கிறது..
தொடருங்கள் சகோ,,,
இந்திரா...
இதுமாதிரி தொடர்ந்து பதிவுகள் தொடரவேண்டுமென்ற அவாவின் காரணமாகத்தான்... கடந்த ஆகஸ்ட் 31ல்... பேஸ்புக்கில் தாங்கள் கவனம் செலுத்தியதன் காரணமாக... அதிகம் பதிவிடுவதில்லை என்று சொன்னேன் நான்...
அப்போது...
தாங்கள் கோவத்தில்...
நீங்கள் பதிவுகள் பக்கம் வருவதில்லையென்பதாலேயே இதுமாதிரி சொல்லக்கூடாது என்று சொன்னீர்கள் என்று சாஸ்ப்டா சொல்லல... எழுத்துக்களாலேயே பிராண்டி எடுத்துட்டீங்க..(எனது பதிலில் தொலைந்துபோனவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்)
அன்று நான் அப்படி குறிப்பிட்டதற்குக் காரணமே...
ஓர் நல்ல எழுத்துகளினாலும்... கவிதையினாலும்... பதிவிடுபவர் என்ற அக்கறையின் காரணமே தவிர வேறில்லை...
ஆனால்...
அன்று மறுத்த நீங்கள்...
இன்று
இப்பதிவில் முதல் பாராவிலேயே
////நடுவுல கொஞ்ச நாள் பதிவுகளோட எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. எழுதுற ஆர்வம் குறைஞ்சதும், முகநூல்பக்கம் ஒதுங்குனதும் முக்கியமான காரணம்னு சொல்லணும்./// என
அந்த உண்மையை ஒத்துக் கொண்டமைக்கு நன்றி...
இப்பவாச்சும் புரியுதா மேடம்...
any have...
இந்த உப்புமா பதிவில் குறிப்பிட்டுள்ள மூன்றுக்குமே என் வாழ்த்துக்கள்...
//தொழிற்களம் குழு //
வருகைக்கும வாழத்துக்கும் நன்றிகள்..
வாழத்துக்கு நன்றி முரளி..
//அப்போது...
தாங்கள் கோவத்தில்...
நீங்கள் பதிவுகள் பக்கம் வருவதில்லையென்பதாலேயே இதுமாதிரி சொல்லக்கூடாது என்று சொன்னீர்கள் என்று சாஸ்ப்டா சொல்லல... எழுத்துக்களாலேயே பிராண்டி எடுத்துட்டீங்க.//
அதற்குப்பின்னான ரிப்ளையை நீங்க படிக்கலையா முரளி??
மனிதருக்கே உரிய வீண் வாதங்களைத் தவிர்த்துவிட்டு பதில் அளிக்க நினைக்கிறேன்னு சொல்லி பதிலளித்திருந்தேனே..
இருப்பினும்..
அன்றும் சரி.. இன்றும் சரி..
தவறினையும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டியமைக்கு தோழி என்ற வகையில் நன்றி முரளி.
:-)
//வியபதி //
நன்றிங்க..
தவறினையும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டியமைக்கு தோழி என்ற வகையில் நன்றி முரளி.////
ஒரு படத்தில்...பிச்சைக்காரனா இருந்து கவுன்சிலராகும் வடிவேலு… பிச்சைக்காரனா இருக்கும்போது சொல்லும் வசனம் போல...
நன்றி சொல்லி என்னப் பிரிச்சிடாதீங்கப்பா... பிரிச்சிடாதீங்க...
****
ரைட்டு... எனக்கு ஒண்ணு புரிச்சிடுச்சு...
இனிமே...
இப்படி...
இந்திராவா உசுப்பேத்தி... உசுப்பேத்தி ரணக்களமாக்குனா...
மாதத்துக்கு ஒன்பதும் அதற்கு மேலும் பதிவு கிடைக்குன்னு...
என்ன கரீட்டா...
எங்கேயோ கேட்ட பாடல் வரிகளைத்தான் இந்திராவுக்கும் சொல்ல நினைக்கிறேன்...!
“உன்னைக் கேட்டுப்பாரு...! நீ யாரென்று...!
உனை நீ அறிவாயோ...! நீ எவனென்று...!” என்ற வரிகள்தான்...!
நன்றி...! வணக்கம்...!
:)
தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்.
எங்கிட்டும்
நாங்க தேடி வருவோம் :))