நான்.. பெயரற்றவள்!!
“சனியனே.. நேரமாகுது எழுந்திரிடீ“
அம்மாவின் சுப்ரபாதத்தை ஏந்தியபடி சோம்பலாய் கண்திறந்து, சாம்பலும் பற்களுமாய் ஆரம்பித்தேன் என் நாளை! சில்லென்ற நீரிலொரு காக்கா குளியலிட்டு, ஒட்டுப்போட்ட பாவாடை சட்டையுமாய் தேநீரென்ற பெயரில் குடித்தேன் ஒரு திரவத்தை..!
அவசரமாய்  தலைவாரிப் பொட்டு வைத்து, பழைய கஞ்சியை டப்பாவிலும் வாயிலும் அடைத்தபடி, ஓட்டமும் நடையுமாய் இடம்பெயர்ந்தேன் தொழிற்சாலைக்கு. மேனேஜருக்கு வணக்கத்தையும் மேற்பார்வையாளனுக்கு சல்யூட்டையும் காணிக்கையாக்கி பெருமூச்சுடன் ஆரம்பித்தேன் எனக்கான கடமையை..
கட்டளையிடாத குறையாய் கைகள் பரபரக்க, நக இடுக்கில் கூட புகையிலைகளாய்..!!
ஒவ்வொன்றாய் நெம்பி, நிரப்பி, அடக்கி அடுக்கி கட்டுக்களாக்கி நிமிர்ந்தபோது மணியடிக்கவே, ஆளுக்கொரு பக்கமாய் அவரவர் கஞ்சியை எடுத்துக்கிளம்பினர்.. அறைகுறையாய் கைகழுவி, முதற்கவளைக்கு வாய்திறந்தேன்..
உச்சந்தலையில் “நங்“கென்றொரு கொட்டு விழுகவே அலறியடித்துக்கொண்டு எழுந்தேன்...
கட்டுக்களின் அளவுகள் மாறுபடுகிறதென அறை விழுந்தது!
ஏதேதோ கெட்ட வார்த்தைகள் எனைப்பார்த்துச் சிதறவிட்டு எல்லோரும் வேடிக்கை பார்க்க எட்டிமிதித்தான் எடுபிடியாளன்..
“ஆ“வெனக் கத்தியபடி சுருண்டுவிழுந்தேன்!!
யாரோ தண்ணீர் கொடுத்து உதவவே, விசும்பியபடி அடுக்கத்துவங்கினேன் மீண்டுமொருமுறை கற்றுக்களை..
அன்றைக்கான எண்ணிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பெட்டியிலடைக்க, ஒருவழியாய் முடித்தெழுந்து கூலிக்குக் கையேந்தி, வேலை சரியில்லையென்ற திட்டுக்களோடு தூக்கியெறியப்பட்ட ரூபாய்களைப் பொறுக்கிக்கொண்டு வெளியே நடந்தேன்.
தளர்ந்த நடையுடன் தள்ளாடியபடி, வாசலில் நின்ற அம்மாவிடம் கூலியைக் கொடுத்துவிட்டு கழிவறைக்கு ஓடினேன். காலையிலிருந்து அடக்கிவைத்த சிறுநீர் வேகமாய் வெளியேற, தூரத்தில் யாரோ ஒரு சிறுமி படித்துக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.
.
.

Comments

இலட்சங்கள் ஊதியமாய் பெறும் இந்நாளில்...
இவர்களின் சோகங்களையும் துயரங்களையும் யாரறிவர்...?
இலட்சங்கள் ஊதியமாய் பெறும் இந்நாளில்...

இவர்களின் சோகங்களையும் துயரங்களையும் யாரறிவர்...?
இலட்சங்கள் ஊதியமாய் பெறும் இந்நாளில்...
இவர்களின் சோகங்களையும் துயரங்களையும் யாரறிவர்...?
ஆத்மா said…
இந்தப் பெயரற்றவளைப் போன்று இன்னும் இன்னும் எத்தனையோ பெயரற்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்......

வரிகளில் தெரிகிறது வறுமையின் கெடுபிடிகள்
ஏழை என்றால் எத்தனை பேரிடம் அடி வாங்க வேண்டியிருக்கு..

வரிகளில் வலிகளில் தெரிகின்றது.
This comment has been removed by the author.
Anonymous said…
பல ஏழைப்பெண்களின் நிலையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டினீர்கள்! நன்றி!
கதையாகச் சொல்லப்பட்ட அழகிய கவிதை
மனம் கவர்ந்தது
சுடவும் செய்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
காட்சிகள் கண் முன் தெரிந்தன-மனதில் வலியுடன்...

tm4
//சிட்டுக்குருவி //

//ஷர்மி //

//சுடர்விழி //

//Ramani //

//திண்டுக்கல் தனபாலன் //


நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்..
siva said…
ஏழை படும் பாடு..இதயத்தை யார் தேற்றுவார்? மீண்டும் பாரதி பிறக்கட்டும்.

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..