சுஜாதாவின் “மீண்டும் ஜீனோ“ – என் பார்வையில்..

“என் இனிய இயந்திரா“ 1986லேயே எழுதப்பட்டிருந்தாலும் இன்றை சூழலுக்கான டெக்னாலஜி பற்றி குறிப்பிட்டிருந்தது அதிஅற்புதமான விஷயம். அதைத்தொடர்ந்து இந்தக் கதையிலும் டெக்னாலஜியின் ஆக்கிரமிப்புகள் அதிகம். ஜீனோ என்ற ரோபாட் நாயைப் பற்றிய கதையமைப்பு என்பதாலோ என்னவோ, சுற்றிச்சுற்றி ஹார்டுவேர்.. சாஃப்ட்வேர் பற்றிய வார்த்தைகளாகவே சுழன்று நம்மை மூச்சுத்திணற வைத்திருக்கிறார் எழுத்தாளர். நடுவில் ஒரு பத்து பக்கங்களை அடல்ட்ஸ் ஒன்லி ஆக்கினாற்போல தோன்றியது. கதாநாயகி சிபி, நிலா, காமா மூவருக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் மருந்தைக் கொடுத்து உடலுறவு மூலம் சூழ்ச்சியில் ஆழ்த்துவது தொடர்பான அத்தியாயம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டோஸ். ஜீனோ என்ற ஒரு மடிநாய் பலமடங்கு புத்திசாலி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா அந்த அளவிற்கு பலசாலியாய் (வரிசையாய் எதிரிகளை நொடிப்பொழுதில் கடித்து, பற்களின் மூலம் விஷம் செலுத்திக் கொன்று விடுவது போல) வடிவமைத்திருப்பது கொஞ்சம் மிகையே. சுவற்றில் அந்த நாயை வீசி எறியும்போது, எதிர்விசை பயன்படுத்தி மிருதுவாய் மோதும் வித்தையை ப்ரயோகிப்பது ரசிப்பிற்குரியது. ஆன்டி லேசர் வைத்திருப்பது, டேட்டா ...