சுஜாதாவின் “மீண்டும் ஜீனோ“ – என் பார்வையில்..




“என் இனிய இயந்திரா“ 1986லேயே எழுதப்பட்டிருந்தாலும் இன்றை சூழலுக்கான டெக்னாலஜி பற்றி குறிப்பிட்டிருந்தது அதிஅற்புதமான விஷயம். அதைத்தொடர்ந்து இந்தக் கதையிலும் டெக்னாலஜியின் ஆக்கிரமிப்புகள் அதிகம். ஜீனோ என்ற ரோபாட் நாயைப் பற்றிய கதையமைப்பு என்பதாலோ என்னவோ, சுற்றிச்சுற்றி ஹார்டுவேர்.. சாஃப்ட்வேர் பற்றிய வார்த்தைகளாகவே சுழன்று நம்மை மூச்சுத்திணற வைத்திருக்கிறார் எழுத்தாளர்.
நடுவில் ஒரு பத்து பக்கங்களை அடல்ட்ஸ் ஒன்லி ஆக்கினாற்போல தோன்றியது. கதாநாயகி சிபி, நிலா, காமா மூவருக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் மருந்தைக் கொடுத்து உடலுறவு மூலம் சூழ்ச்சியில் ஆழ்த்துவது தொடர்பான அத்தியாயம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டோஸ்.
ஜீனோ என்ற ஒரு மடிநாய் பலமடங்கு புத்திசாலி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா அந்த அளவிற்கு பலசாலியாய் (வரிசையாய் எதிரிகளை நொடிப்பொழுதில் கடித்து, பற்களின் மூலம் விஷம் செலுத்திக் கொன்று விடுவது போல) வடிவமைத்திருப்பது கொஞ்சம் மிகையே.
சுவற்றில் அந்த நாயை வீசி எறியும்போது, எதிர்விசை பயன்படுத்தி மிருதுவாய் மோதும் வித்தையை ப்ரயோகிப்பது ரசிப்பிற்குரியது. ஆன்டி லேசர் வைத்திருப்பது, டேட்டா பேஸை அலசி ஆராய்வது, டிஸ்க்கில் அலாதியான மெமரி.. என ஜீனோவை ஒரு சூப்பர்மேன்... ஸாரி.. சூப்பர்டாக் போல உருவமைத்திருக்கிறார் சுஜாதா. பறக்கும் சக்தி ஒன்று தான் மிஸ்ஸிங்.
முடிவிற்கு சற்றுமுன், திடீரென புரட்சிப் படை உருவாவதும், டாக்டர் ரா மற்றும் உதவி இருவர் மூலம் அது வளருவதும், அவ்வப்போது விவி திரையில் உரையாடல்களும்.. என கொட்டாவி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
கடைசியில் வில்லன்களில் ஒருவன் தப்பியோடியபின், இயந்திரங்களுக்கே உரிய இயந்திரக்கோளாறு காரணமாக ஜீனோ ஸ்தம்பித்துப்போவதும், பின் மியூசியத்தில் காட்சிப்பொருளாய் நின்றுவிடுவதும் வழக்கமான எண்டிங்.
“என் இனிய இயந்திரா“வில் புத்தகங்கள் பற்றிய நிறைய தகவலை ஜீனோ பகிர்ந்திருக்கும். ஆனால் “மீண்டும் ஜீனோ“வில் புத்தகங்களின் தலைப்பு மட்டும்.. அதுவும் அரிதாக சொல்லுகிறது.
“மீண்டும் ஜீனோ“ சிறப்பான கற்பனை, ஆனாலும் “என் இனிய இயந்திரா“ அளவிற்குப் பாராட்ட முடியவில்லை.
.
.

Comments

சீனு said…
எனக்கு மிகவும் பிடிதிருந்த்தது...என்பத்தி ஆறில் இவ்வளவு அற்புதமாக எழுதி இருப்பது எவ்வளவு அருமை... இந்து நமக்கு பரிச்சியமான வார்த்தைகள் அன்று தமிழுக்கு புதிது.. இருந்து சில இடங்களில் போர் அடிப்பது போல் இருந்தாலும் எனக்கு அப்படி தோன்றவில்லை....

விமர்சனம் அருமை சகோ
Admin said…
நானும் வாசித்திருக்கிறேன்.. உங்கள் பார்வை சிறப்பு..
பதிவு அருமை நானும் வாசித்திருக்கிறேன் நல்ல விமர்சனங்கள்
ஆத்மா said…
இதுவரைக்கும் கேள்விப்பட்டதே கிடயாது...
ரை பண்ணுகிறேன் படிப்பதற்கும் ரசிப்பதற்கும்
Thava said…
படிக்க வேண்டுமென்று ரொம்ப நாட்களாக ஆசைப்பட்டு வந்த புத்தகம் இது..விரைவில் படிப்பேன்..விமர்சனம் அருமை..நன்றி/
உங்கள் பார்வையில் விமர்சனத்தை ரசித்தேன்....

நன்றி...
tm4
வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்...

நன்றி...
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி.

வலைச்சரத் தகவலுக்கு (தாமதமான) நன்றி தனபாலன்.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..