உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..
என்னுடன் நீ பேச மாட்டாயாமே .. அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா ? பிடித்ததை கண்சிமிட்டியும் பிடிக்காததை புருவம் உயர்த்தியும் எனக்குத் தெரிவிக்கிறதே .. சமாதானமாக நான் பேசும்போதெல்லாம் செவிகளை எனக்கும் விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய் .. அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது .. என்னிடமிருந்து ' லவ் யூ ' வும் உன்னிடமிருந்து ' ஹேட் யூ ' வும் பரிமாறப்படுகிறது .. பேசும் நேரங்களை விட பேசாத நேரங்களில் காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள் .. ' சாப்பிடு ' என்று நான் கெஞ்சவேண்டும் என்பதற்காகவே .. பசியோடு காத்திருக்கிறாய் .. கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு . பின்கூட்டி அணைக்கிறேன் .. பிடிக்காதது போல உதறுகிறாய் .. இறுக்காத பிடியிலும் கூட இறுகியதாய் தடுமாறுகிறாய் .. ஏனோ தெரிவதில்லை .. உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில் நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன் .. உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி உன்னை வெறுப்பெற்றுகிறேன் .. பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய் .. தொலைக்காட்சியை .. எனது சேஷ்டைகளைப் போலியாக வெறுக்கும் உன் நடிப்பு ஆஸ்கரையும் மிஞ்சும் .. உன் குழந்தைத் தனம...
Comments
அழகு இந்திராஅழகு
இனிய இம்சைகள்
ஸ்வாமி ஸூசாந்தா
உங்களுடைய வார்த்தை தெரிவுகள் அருமை
kavithai..
kavithai...
தலைப்பிற்கேற்ற வரிகள்
tm2
மிகவும் ரசித்தேன்...
வாழ்த்துக்கள்!
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!//
பிரமிப்பூட்டிப்போகும் வரிகள்
ஆயுதங்களுக்கென்று தனியாக வலிமை இல்லை
அதைக் கையாளுபவன் பொறுத்தே அதன் வலிமை
வார்த்தைகளும் அப்படித்தானே என்பதை
சொல்லாமல் சொல்லிப்போகும் கவிதை
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!////
எல்லா வரிகளுமே அருமை...
குறிப்பாக..
மேற்குறிப்பிட்ட வரிகள்...
இது
இந்திராவின் வரிகள்...
வாழ்த்துக்கள்...
எனக்கொரு சந்தேகம்...
எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணம்...
அது எப்படியிருக்கும்?
”வலிக்காதொரு வலி”....
ரசித்தேன்
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...
நன்றி...
Vazthukkal...
saringa...
வலிக்காதொரு வலி.....
andh வலி eppadiyirukkum medam...
Please explain
-சேது
-சேது
-சேது
-சேது
//swami sushantha //
//பால கணேஷ் //
//இராஜராஜேஸ்வரி //
//Rajeswaran Jeyaraman //
//Satish Sangavi//
//ஆர்.வி. ராஜி //
//திண்டுக்கல் தனபாலன் //
//காஞ்சி முரளி //
//sethu ram //
நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_3.html
உங்களை அங்கு கண்டு மகிழ்ந்து நிறைவாக வாழ்த்து சொல்லி வந்தேன்