தேவதைகள்..


எப்போதும் பாக்கு இடித்தபடியே சிரிக்கிறாள்
பக்கத்துவீட்டு செல்லம்மா பாட்டி..

பனியாரம் சுட்டு விற்றுக்கொண்டிருந்தாள்
தெருமுக்கில் கடைபோட்டிருக்கும் பார்வதியம்மா..

சிகரெட் விற்பனை இல்லையென்ற போர்டுடன் 
தூரத்துப் பெட்டிக்கடையில் வள்ளியக்கா..

இடுப்பிலிருக்கும் குழந்தையை வாங்கி 
மடியில் வைத்க்கொண்டதும் ஸ்நேகமாய் சிரிக்கிறாள் 
பேருந்தில் நின்றுவந்த பெயர்தெரியா சகோதரி..

பிஸ்கட் துண்டொன்றை பிய்த்துத் தருகிறாள்
அலுவலகத்தில் டீ கொண்டுவரும் லட்சுமியக்கா..

தலைவலிக்கு மாத்திரை கொடுத்து
கூடுதலாய் உச்சி வருடல் செய்கிறாள்
வீட்டிலிருக்கும் சிவகாமி அம்மா..

-----
தேவதைகளுக்கு இறக்கைகள் இருப்பதில்லை போலும்..!
.

.

Comments

அழகான கவிதை...

வாழ்த்துகள்... முதல் வருகை என நினைக்கிறேன்... இனி தொடர்வேன் என நம்புகிறேன்...

பகிர்விற்கு நன்றி...
வணக்கம்...
// தேவதைகளுக்கு இறக்கைகள் இருப்பதில்லை போலும்..!
//

இறக்கை இருப்பதால் தான் பறந்து போய்விடுகின்றனர்... நாங்களும் பின்னாடியே சுத்துகின்றோம்...
கவிதை மாதிரி இல்லை
புதிதாக எழுதுபவர்களுக்கு இது மாதிரிக் கவிதை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
என்ற ப்லாக்குல ஓட்டுபட்டை வரமாட்டிக்குதுங்கோ, என்ன பண்றதுன்னு கொஞ்சம் சொல்லி தர்றிங்களா!
ezhil said…
அருமையான கவிதை...ஆமாம் அந்தத் தேவதைகளெல்லாம் இன்னமும் இருக்கிறார்களா?
எல்லாமும் வருடலாக..
வணக்கம், தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரியில் சென்று காணவும். நன்றி...

http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_18.html
//
இரவின் புன்னகை
சங்கவி
Ramani S
கிரேஸ்
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி s
//

கருத்துக்கு நன்றிங்க..
// வால்பையன் said...
என்ற ப்லாக்குல ஓட்டுபட்டை வரமாட்டிக்குதுங்கோ, என்ன பண்றதுன்னு கொஞ்சம் சொல்லி தர்றிங்களா!//

நமக்கு அந்த அளவுக்கெல்லாம் கிட்னி வேலை செய்யாதுங்க.
:D
// ezhil said...
அருமையான கவிதை...ஆமாம் அந்தத் தேவதைகளெல்லாம் இன்னமும் இருக்கிறார்களா?//

ஆமாம் எழில்..
உங்கள் பக்கத்திலும் கூட
:)
// ஸ்கூல் பையன் said...
வணக்கம், தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரியில் சென்று காணவும். நன்றி...
//

மிக்க நன்றிங்க

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்