நின் இருப்பு..!
குறுஞ்செய்திகளின் சேமிப்பிலும்
காகிதங்களின் மடிப்பிற்குள்ளும்
மின்னஞ்சலின் கிடப்புகளிலும்
ஆக்கிரமித்தபடி நிறைந்துகிடகிறாய்..!
தத்தெடுத்த வீட்டினுள்
புதிதாய் நுழையும் சிறுமியாய்
ஒட்டாது ஒதுங்கிக்கொள்கிறேன்
உனதிருப்பில்லா எவ்விடத்திலும்..!
நுனிவிரல் பிடித்து ஏக்கமாய்
நீ தருமந்த சிறு அழுத்தம்
போதுமாயிருக்கிறது
ஆயுளுக்குமான ஆத்மத்ருப்திக்கு..!
.
Comments
அற்புதமான தென்றலெலென மனதை வருடும் வரிகள்!
அற்புத கவிதை! மிகவும் ரசித்தேன்....
வாழ்த்துக்கள் தோழி!
த ம.2
ரொம்ப புடிச்சிருக்கு....
நீ தருமந்த சிறு அழுத்தம் போதுமாயிருக்கிறது///
அருமையான வரிகள்...
அயல்நாட்டுக் கலாச்சாரத்தின் பக்கவிளைவாய் உதடோடு உதடு வைத்தும் தரும் முத்தத்தைவிட
வலிமை அதிகம்...
வலியும் அதிகம்...
நுனிவிரல் பிடித்து ஏக்கமாய்
நீ தருமந்த சிறு அழுத்தத்திற்கு...
உயிரோடும்..
உணர்வோடும்
உலாவரும்
உள்ளக் காதலுக்கு இது சான்று...
நல்ல கவிதை
ஒரு நீண்ண்ண்ணடடடடடடடடட நாட்களுக்குப் பின்...
நண்பியிடமிருந்து...
நட்புடன்...
காஞ்சி முரளி...