பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..1.       அடிப்படைல லோக்கலா இருந்தாலும், எங்கள பார்க்கும்போது, கடந்துபோகும்போது மட்டும் என்னவோ ஃபாரின்ல இருந்து அப்பதான் Flightல வந்து இறங்கின மாதிரி அலட்டல் பண்றீங்களே.. அதெப்படி உங்களால முடியுது??
2.       வெளியிடங்களுக்குப் போனா நாங்களே தான் செலவு பண்ணனுமா?? நீங்க மட்டும் ஏன் பர்ஸை திறக்கவே மாட்டேன்குறீங்க?
3.       எப்பவும் நாங்க தான் உங்களுக்கு ரீசார்ஜ் பண்ணி விட்றோம். இருந்தாலும் ஏன் மிஸ்டு கால் குடுத்தே உயிர வாங்குறீங்க?
4.       நாங்க சைட் அடிச்சா எங்கள உண்டு இல்லைனு ஆக்கிட்றீங்க.. நீங்க சைட் அடிச்சா ஜஸ்ட் லுக்கிங்“னு சொல்றீங்க. இது என்ன நியாயம்?
5.       நீங்க கேள்வி கேட்டா பொசசிவ்“னு சொல்றீங்க.. நாங்க கேள்வி கேட்டா மட்டும் சந்தேகப்பட்றோம்னு கத்துறீங்க.. அது ஏன்?
6.       சண்டை வந்துட்டா நாங்களே தான் இறங்கி வந்து சமாதானப் படுத்தணுமா?? ஒரு தடவையாவது நீங்க சமாதானப்படுத்தினால் தான் என்ன?
7.       உங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா அப்புறம் பேசுறன்“னு கட் பண்றீங்க. அதையே நாங்க செஞ்சா கோவப்பட்றீங்க.. ஏன்?
8.       நாங்க வாங்கி குடுக்குற கிஃப்ட் மட்டும் பெருசா விலை உயர்ந்ததா இருக்கணும்.. உங்க கிஃப்ட் எப்பவுமே கீ-செயின், க்ரீட்டிங் கார்டோட முடிஞ்சுடுதே.. அது ஏன்?
9.       போன் பேசும்போது நீங்களா கட் பண்ணலாம். ஆனா நாங்க கட் பண்ணினா மட்டும் “என்கூட பேச பிடிக்கலையா“னு கேட்டு சாவடிக்கிறீங்க.. ஏன்?
10.    எப்ப பார்த்தாலும் உங்களுக்கு பாடிகார்ட் வேலை பாக்குறதே எங்களுக்கு பொழப்பாய்டுச்சு. நீங்க எங்க போனாலும் கூடவே வரணும்னு எதிர்பார்க்குறீங்க. எங்களுக்கும் வேலை வெட்டி இருக்குனு யோசிக்கவே மாட்டீங்களா?
11.    நீ இன்னைக்கு அழகா இருக்க, உன் டிரெஸ் நல்லாயிருக்கு, உன் சிரிப்பு அழகாயிருக்கு“னு மாறி மாறி நாங்க பொய் சொன்னாலும் அது பொய்னு தெரிஞ்சும் கெக்கே பெக்கேனு சிரிச்சுகிட்டே இருக்கீங்களே.. அது ஏன்?
12.    உங்களுக்காக மணிக்கணக்கா நாங்க காத்திருக்கலாம்.. காத்திருக்குறதுல சுகம்“னு டைலாக் விட்டு சமாளிச்சுக்குறோம். ஆனா ஒரு அஞ்சு நிமிசம் நாங்க லேட்டா வந்துட்டா உடனே மூஞ்சிய தூக்கி வச்சுக்குட்டு பழிவாங்குறீங்களே.. ஏங்க?
13.    அவனவனுக்கு ஆயிரம் வேலையிருக்கும்போது ஒரு நாய்குட்டிக்கு உடம்பு சரியில்லைனு ஓஓஓ“னு அழுது ஒப்பாரி வைக்குறீங்க.. அத கேட்டு நாங்க ஆறுதல் வேற சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்களே.. இது நியாயமா?
14.    எதுக்கெடுத்தாலும் நாங்க உங்ககிட்ட கெஞ்சுறதும் நீங்க அப்பாடக்கர் மாதிரி பிகு பண்ற மாதிரி நடிக்கிறதுமே பொழப்பாய்டுச்சு.. உங்களுக்கு போர் அடிக்கவே இல்லையா?
15.    எங்ககிட்ட “வரவேணாம்னு சொன்னா வா“னு அர்த்தமாம்.. பார்க்காதே“னு சொன்னா பார்க்கணும்“னு அர்த்தமாம்.. தெரியல“னு சொன்னா ஆமா“னு அர்த்தமாம்.. இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒரு அர்த்தம்னு நாங்க கஷ்டப்பட்டு புரிஞ்சுக்குறதுக்கு பதிலா அத நேரடியா சொல்லித் தொலைக்க வேண்டியது தானே.. அதை ஏன் செய்ய மாட்டீங்குறீங்க???
.
.

Comments

என்ன நைட் டி வீ டி ல உன்னாலே உன்னாலே பாத்தீகளா?
Thanks... nice to share... I think... this is your own experience... www.rishvan.com
நல்ல கற்பனை.
மிகவும் ரஸித்தேன்.

[பெரும்பாலான ஆண்களின் எண்ணங்களை நன்றாகவே
Study பண்ணியிருக்கிறீர்கள்.]
நாங்க வாங்கி குடுக்குற கிஃப்ட் மட்டும் பெருசா விலை உயர்ந்ததா இருக்கணும்.. உங்க கிஃப்ட் எப்பவுமே கீ-செயின், க்ரீட்டிங் கார்டோட முடிஞ்சுடுதே.. அது ஏன்?//

அவ்வ்வ்வ்வ்வ் சுரீர்னு எங்கேயோ குத்துதே, எலேய் சிபி அண்ணே எங்கேடா போயி தொலைஞ்சே...???
நீ இன்னைக்கு அழகா இருக்க, உன் டிரெஸ் நல்லாயிருக்கு, உன் சிரிப்பு அழகாயிருக்கு“னு மாறி மாறி நாங்க பொய் சொன்னாலும் அது பொய்னு தெரிஞ்சும் கெக்கே பெக்கேனு சிரிச்சுகிட்டே இருக்கீங்களே.. அது ஏன்?//

சிபி கண்ணாடி மேல சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை...
இப்பிடி எல்லாம் கேள்வி கேட்டால் நாங்க உயிரோடவே இருக்க முடியாது...!!!
ராஜி said…
பாவம்ங்க உங்க ”அவர்”
உண்மைதான் ரசிக்கும் படி இருந்தது அருமை
இம்புட்டு இருக்கா? அவ்வ்வ்வ்வ்...

இதுக்கு ஒரு எதிர்பதிவு வருமா?
உங்கள ரொம்பவே பாரட்டனும்...!
காரணம்..!
மனக்கெட்டு... இவ்வளவையும் டைப் செஞ்சதுக்கு....!
நீங்க போன் பண்ணி லைன்ல வந்தா ரெண்டே நிமிஷத்துல எதாவது சாக்கு சொல்லி கட் பண்ணிடறீங்க... நாங்க போன் பண்ணா... மணிக்கணக்குல ஆனாலும் பேசிட்டே போறீங்க... கட் பண்ண ட்ரை பண்ணா கோவிச்சுக்கறீங்களே... -இந்தக் கேள்வியையும் சேர்த்துக்கங்க இந்திரா மேடம். அழகா அனலைஸ் பண்ண உங்களுக்கு... ஒரு பொக்கே!
இவ்வளவு இருக்கா? நம்மால தாங்காது!
இதெல்லாம் கேட்க கூடாத கேள்விகள் இல்லீங்க, கேட்டு கேட்டு சலிச்சு போய் பொலம்புன கேள்விகள்ங்க........
Chitra said…
HAPPY NEW YEAR!!! HAPPY PONGAL!!!!
Tamilthotil said…
இதைப் படிக்கையில் என்னையறியாமல் இதழ்களில் லேசான நகைப்பை உணர முடிகிறது. இது எல்லாம் இல்லையென்றால் காதல் ரொம்ப சலிப்பாகி
விடுமல்லவா...
ஆனால் இதை எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் உண்மையில் இதில் எதேனும் ஒரு கேள்வியை கேட்டு விட்டு அதன் பின் அடிப்பட்டவர்களின் நிலையை இன்னொரு பதிவாக போடலாம்.அதுவும் நன்றாக இருக்கும்
அருமை இந்திரா அவர்களே
இதெல்லாம் கேட்க அவங்களுக்கு தைரியம் வருமா? அப்படி வந்தாலும் நாம சும்மா விடுவமா?
ஒண்ணு தெளிவா தெரியுது! இப்படி எல்லாம் ஆண்கள்? எப்படிங்க எப்படி?

ம்....
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மனசாட்சியின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
//MANASAALI said...

என்ன நைட் டி வீ டி ல உன்னாலே உன்னாலே பாத்தீகளா?//


ஹி ஹி ஹி..
//Rishvan said...

Thanks... nice to share... I think... this is your own experience... www.rishvan.com//


டாங்க்ஸ்ங்க...
//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கற்பனை.
மிகவும் ரஸித்தேன்.

[பெரும்பாலான ஆண்களின் எண்ணங்களை நன்றாகவே
Study பண்ணியிருக்கிறீர்கள்.]//நன்றிங்க.. :)))
//MANO நாஞ்சில் மனோ said...

நாங்க வாங்கி குடுக்குற கிஃப்ட் மட்டும் பெருசா விலை உயர்ந்ததா இருக்கணும்.. உங்க கிஃப்ட் எப்பவுமே கீ-செயின், க்ரீட்டிங் கார்டோட முடிஞ்சுடுதே.. அது ஏன்?//

அவ்வ்வ்வ்வ்வ் சுரீர்னு எங்கேயோ குத்துதே, எலேய் சிபி அண்ணே எங்கேடா போயி தொலைஞ்சே...???//


ஆகா.... ஆரம்பிச்சுட்டீங்களா...
//MANO நாஞ்சில் மனோ said...

நீ இன்னைக்கு அழகா இருக்க, உன் டிரெஸ் நல்லாயிருக்கு, உன் சிரிப்பு அழகாயிருக்கு“னு மாறி மாறி நாங்க பொய் சொன்னாலும் அது பொய்னு தெரிஞ்சும் கெக்கே பெக்கேனு சிரிச்சுகிட்டே இருக்கீங்களே.. அது ஏன்?//

சிபி கண்ணாடி மேல சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை...//


அவர் தான் ரொம்ப நாளாவே இந்தப் பக்கம் வர்றதேயில்லையே.. தப்பிச்சுகிட்டே இருக்காரு.
//MANO நாஞ்சில் மனோ said...

இப்பிடி எல்லாம் கேள்வி கேட்டால் நாங்க உயிரோடவே இருக்க முடியாது...!!!//


ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்.
//ராஜி said...

பாவம்ங்க உங்க ”அவர்”//


“அவர்“ உங்களுக்கு நன்றி சொல்லச் சொல்றார்..
//sasikala said...

உண்மைதான் ரசிக்கும் படி இருந்தது அருமை//


நன்றிங்க..
//தமிழ்வாசி பிரகாஷ் said...

இம்புட்டு இருக்கா? அவ்வ்வ்வ்வ்...

இதுக்கு ஒரு எதிர்பதிவு வருமா?//


சீக்கிரம் நானே கூட எழுதலாம். ஆண்களிடம் பெண்கள் கேட்க வேண்டிய கேள்விகள்“னு தலைப்பு வைக்கலாமா???
//காஞ்சி முரளி said...

Good Questions...!//


நன்றி முரளி சார்..
//காஞ்சி முரளி said...

உங்கள ரொம்பவே பாரட்டனும்...!
காரணம்..!
மனக்கெட்டு... இவ்வளவையும் டைப் செஞ்சதுக்கு....!//


இன்னும் நிறைய தோணுச்சு. நேரம் பத்தலங்க. (இதுல எதுவும் உள்குத்து இல்லையே???)
//கணேஷ் said...

நீங்க போன் பண்ணி லைன்ல வந்தா ரெண்டே நிமிஷத்துல எதாவது சாக்கு சொல்லி கட் பண்ணிடறீங்க... நாங்க போன் பண்ணா... மணிக்கணக்குல ஆனாலும் பேசிட்டே போறீங்க... கட் பண்ண ட்ரை பண்ணா கோவிச்சுக்கறீங்களே... -இந்தக் கேள்வியையும் சேர்த்துக்கங்க இந்திரா மேடம். அழகா அனலைஸ் பண்ண உங்களுக்கு... ஒரு பொக்கே!//


நன்றிங்க.
பொக்கேவுக்கும் வருகைக்கும்.
//ஓசூர் ராஜன் said...

இவ்வளவு இருக்கா? நம்மால தாங்காது!//


யாரும் தப்பிக்க முடியாதுங்க..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் கேட்க கூடாத கேள்விகள் இல்லீங்க, கேட்டு கேட்டு சலிச்சு போய் பொலம்புன கேள்விகள்ங்க........//


கேட்டீங்களா???? அடி எப்டி???
அத சொல்லுங்க முதல்ல???
//Chitra said...

HAPPY NEW YEAR!!! HAPPY PONGAL!!!!//


Thanks chitra.
wish u the same.
:)))
//வால்பையன் said...

is it repost?//


சத்தியமா இல்லங்க.
இப்ப தான் புதுசா டைப் பண்ணினேன்.
//Tamilraja k said...

இதைப் படிக்கையில் என்னையறியாமல் இதழ்களில் லேசான நகைப்பை உணர முடிகிறது. இது எல்லாம் இல்லையென்றால் காதல் ரொம்ப சலிப்பாகி
விடுமல்லவா...
ஆனால் இதை எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் உண்மையில் இதில் எதேனும் ஒரு கேள்வியை கேட்டு விட்டு அதன் பின் அடிப்பட்டவர்களின் நிலையை இன்னொரு பதிவாக போடலாம்.அதுவும் நன்றாக இருக்கும்
அருமை இந்திரா அவர்களே//


அதையும் ரிசர்ச் பண்ணி பதிவா போட்றலாம் விடுங்க.
வருகைக்கு நன்றிங்க.
//RAMVI said...

இதெல்லாம் கேட்க அவங்களுக்கு தைரியம் வருமா? அப்படி வந்தாலும் நாம சும்மா விடுவமா?//அது என்னவோ வாஸ்தவம் தான்.
//மனசாட்சி said...

ஒண்ணு தெளிவா தெரியுது! இப்படி எல்லாம் ஆண்கள்? எப்படிங்க எப்படி?

ம்....//

என்ன பண்றது???
அவங்க தலையெழுத்து.
//மனசாட்சி said...

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மனசாட்சியின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்//


நன்றிங்க.
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Anonymous said…
ஹா ஹா ஹா அணைத்து கேள்விகளும் அற்புதம். அவளாவது என்கிட்டே சிக்கட்டும் கண்டிப்பா ஒன்னு விடாம கேக்றேன். யாரும் உருட்டு கட்டிய எடுத்துட்டு அடிக்க வந்த மட்டும் உங்க அட்ரெஸ் குடுத்து விடறேன்
இங்க பாரு, நீ ஆணா பெண்ணான்னு தெரியல, ஆனா அது ஒரு பொருட்டில்ல. என் வீட்டுக்காரி பேர்ல எழுதரதனால (என் மூஞ்சியப் பாத்து அவ ஒண்ணும் எழுத முயற்சிக்கல) சும்மா என்னதான் இருக்கின்னு எட்டிப் பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு. நடத்து.

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்