நீதானே என் பொன்வசந்தம் – இளைத்த(!!) ராஜா..
1980களில்
இசையில் மகத்தான ஆதிக்கம் செலுத்தியவர் இசைஞானி இளையராஜா. இவருடைய ஒவ்வொரு பாடலும்
ஒவ்வொரு சிறப்பைப் பெற்றிருக்கும். நம்முடைய பிடித்த பாடல்களின் பட்டியலில்
பெரும்பாலான இடங்களை இவருடைய பாடல்கள் பிடித்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க
முடியாது.
அதெல்லாம்
சரிதான்.. ரொம்ப நாளைக்குப்பிறகு இவருடைய இசையில் வெளிவரும் பாடல்களாச்சேனு ரொம்ம்ம்ப
எதிர்பார்ப்புடன் நேத்து கேட்டேன்.
ம்ஹூம்..
ஏமாத்திட்டீங்க ராஜா சார். “I AM BACK’னு காலரைத்
தூக்கிவிட்டுக்குற மாதிரி ஒரு பாடல் கூட உங்களோட சாயல்ல இல்ல. ஓவரா
எதிர்பார்த்துகிட்டு இருக்குறதுனாலயே சொதப்பிடுறாங்களோ என்னவோ!!
“சாய்ந்து
சாய்ந்து“ பாட்டு முதல் தடவை கேட்கும்போது ஏதோ மாதிரியிருந்தாலும் அடுத்தடுத்து
கேட்கும்போது பிடிச்சமாதிரியிருக்கு. “பெண்கள் என்றால் பொய்யா“ பாட்டு ரொம்ம்பவே
சுமாராயிருக்கு. (பொண்ணுங்களை குறை சொல்றதுனால) பசங்களுக்குப் பிடிக்கலாம். ஏன் யுவன்சங்கர்
எந்தவொரு பாட்டையும் (ஒரேமாதிரி) எந்த உணர்ச்சியுமில்லாம மண்ணு மாதிரி
பாடுறாருனுதான் தெரியல.
“முதல்முறை
பார்த்த ஞாபகம்“ பாட்டுபாடின பொண்ணுக்கு நல்லா வாய்ப்பாடு ஒப்பிக்கத் தெரியும்
போல.. அருமையா ஒப்பிச்சிருக்கு. நடுவுல படத்தோட தலைப்பு வரும்போதுதான் நமக்கு வேதனையா
இருக்கு. இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம். “புடிக்கல மாமு“ பாட்டு நண்பர்களோட
பாடுறது போல.. “ராஜா ராஜாதிராஜனிந்த ராஜா“ பாட்டுக்கு கிட்டக்கூட வரமுடியாது.
ரெண்டாவதா தொடர்ந்து வர்ற “வீதி பத்தாதே“ங்குற மெட்டு கொஞ்சம் நல்லாயிருக்கு.
“காற்றைக்
கொஞ்சம்“ பாட்டுல வாத்தியங்களோட அட்டகாசம் தாங்க முடியல. என்ன வரினு கண்டுபிடிக்க
முடியாத அளவுக்கு வாசிச்சுத் தள்ளியிருக்காங்க. S.A.ராஜ்குமாரோட
“லாலாலா“ங்குற ஹம்மிங் தான் ஞாபகத்துக்கு வருது. அந்தளவுக்கு கடுப்பேத்தியிருக்காங்க
மை லார்ட்.. கார்த்திக் பாடியிருக்காராம். அடக்கொடுமையே!!
“வானம்
மெல்ல கீழிறங்கி“ பாட்டு இளையராஜாவும் பாடியிருக்காரு. பியானோவா வயலினானு தெரியல,
பாடுறவங்க கூடயே அதுவும் கத்துறதுனால சில சமயம் எரிச்சலாயிருக்கு. வொய் திஸ்
கொலவெறி ராஜா சார்? “சற்று முன்பு“ பாட்டு சுமாராயிருக்கு. சரணத்தோட பின்பாதில வேற
பொண்ணு பாடுனமாதிரி குரல் மாற்றம் தெரியுது. சூப்பராயிருக்குனு சொல்லமுடியலனாலும்
ஏதோ கேக்கலாம்.
“என்னோடு
வா வா“ கார்த்திக் குரல்ல இந்தப் பாட்டு மட்டும் ஒரு சின்ன ஆறுதல். இதுல மட்டும்
தான் வாத்தியங்களை அடக்கி வாசிச்கிருக்காங்க, வரிகளையும் கவனிக்க முடியுது.
எட்டு
பாட்டு கேட்டேன். ரெண்டு மட்டும் தான் சுமார். மத்த எல்லாத்துலயுமே ட்ரம்ஸ்,
பியானோ, வயலின்னு (குறிப்பிட்டு எதுனு தெரியல) ஏகபோகத்துக்கு வாசிச்சுத்
தள்ளியிருக்காரு. தல வலிதான் மிச்சம். வழக்கு எண் 18/9ல வர்ற
மாதிரி வாத்தியமே இல்லாம பாடியிருந்தாகூட தேவலாம்போல இருக்கு. கௌதம் மேனன் படத்துல
இந்தப் பாடல்களை வச்சு காட்சிகள் கற்பனைக்கே வரமாட்டீங்குது. ம்ம் படம் வெளியானதும்
பார்க்கலாம்.
நாம
ஓவரா எதிர்பார்த்துட்டோமா.. இல்ல அவர் தப்புபண்ணிட்டாரானு யூகிக்க முடியல. இளையராஜா
இசைனாலே ஒரு ரம்யம் இருக்கும். இந்தப் பாடல்கள்ல அது சுத்தமா மிஸ்ஸிங். என்ன
படம்னு தெரியாம பாடல்களைக் கேட்டா சத்தியமா இளையராஜானு உணரவே முடியாது.
அடப்போங்க
ராஜா சார்..
.
.
Comments
சில பாட்டு(ம்) கேட்டவுடனே பிடிக்காது... கேட்க கேட்க பிடிக்கும்...
ராஜா சாரின் சிறப்பு அவரின் பழைய பாடல்கள் இப்போதும் அதே சுகத்தைக் கொடுப்பது தான்...ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் எவ்வளவு நாட்களுக்கு வாழப்போகிறது என தெரியவில்லை...
ஒரே ஒரு கருத்து...ஹாரிஸ் ஜெயராஜ், இசையமைத்திருந்தால், மற்ற கவுதம் சாரின் படங்களைப் போல் பெரிய வெற்றியடைந்திருக்கும் என தோன்றுகிறது...!!!
இன்னைக்கு ஆசிரியர் தினம் அப்படீன்னு நினைக்றேன்....
உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த... அட்லீஸ்ட் ஒரு வாத்தியாரைக்கூடவா பிடிக்காம போச்சு....
கௌதம் மேனன் படத்துல இந்தப் பாடல்களை வச்சு காட்சிகள் கற்பனைக்கே வரமாட்டீங்குது. ம்ம் படம் வெளியானதும் பார்க்கலாம்.
பார்ப்போம் !
Sorry Raja Sir,
we can't believe it.
Better Luck Next Time...
இன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html
தீர்மானம் செய்து கொண்டு நம்மை 30 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்லும் முயற்சியில் இம்முறை ராஜாவிற்கு எப்போதும் போல வெற்றிதான். முதலில் அத்தனை பாடல்களும் நம் பிடிக்குள் வரவில்லையாயினும் , கேட்கக்கேட்க இந்த வசந்தம் மனதினுள் புகுந்து இம்சை செய்தே தீரும் என்பது உறுதி, J பாடல்களிலிருந்து பாடகர்களின் குரலை நீக்கிவிட்டு வெறும் இசையாகக்கேட்டாலும் போதுமென்றே தோணுகிறது எனக்கு
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21004:2012-09-04-02-44-10&catid=11:cinema-review&Itemid=129
***
ஆனாலும் பழைய ராஜா 'டச்' இல்லை என்றுதான் நினைக்கிறேன்!!
isai endru indru kerkum kandravikku idhu pudu anubavam..
nalla audio system moolam indha iasayin sirappai anubavikka mudiyum..
nep padalgal namma sinimavukkum ini pon vasanthamaga amaiyum...........
நானும் இளைய ராஜா அவர்களைப்
பொருத்தவரையில் தங்கள் மன நிலையில்
இருப்பவன்தான்.ஒருவேளை பாடல்கள்
ஏமாற்றமளித்தால் கொஞ்சம்
வருத்தப்படத்தான் செய்வேன்
இறுதிவரியில் உரிமையோடு அலுத்துக் கொண்டது
மிகவும் பிடித்திருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
என் பையன் என்னைப் போட்டுத் தாளிச்சுருவானே
\\“பெண்கள் என்றால் பொய்யா“ பாட்டு ரொம்ம்பவே சுமாராயிருக்கு. (பொண்ணுங்களை குறை சொல்றதுனால) பசங்களுக்குப் பிடிக்கலாம். \\ இதுக்கு கொஞ்சம் நம்ம கடைப் பக்கம் வந்திட்டு போங்க மேடம்!!
http://jayadevdas.blogspot.in/2012/09/18.html