அதை மட்டும் திருப்பிக்கொடு.. (படித்ததில் பாதித்தது)




ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்..
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்

காதலை எந்த
வடிவில் கண்டாலும்,
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்..
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்.
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.
கால் கொண்டு எட்டி உதைத்தாய்..
அட, எட்டி உதைத்தாலும்
உன்னிலே ஒட்டிக்கொள்ளும்
ஒட்டுண்ணியாய்
வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை.
என் வாழ்க்கையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்..
இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..

உணவைக்கூட
இதழிலிருந்து இதழிற்கு
தடம் மாற்றினாய்.
ஏன் உணர்வை மட்டும்
மறுத்து விட்டாய்?

எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.

அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு

இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?

நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...
ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.

திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு

-----  என் சிரிப்பை..

.

.

நன்றி - http://kavithaikadhalan.blogspot.in/2011/02/blog-post.html
.

Comments

Unknown said…
வாவ் அருமை நன்றி கவிதை காதலன்
Unknown said…
நல்ல இருக்கு இந்திரா
ஆனால் உங்க மொக்கைதான் மிஸ்ஸிங் :(
ரொம்ப நன்றாக இருக்கு இந்திரா.

//கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..//

சிறப்பான வரிகள்.
வலிகள் நிறைந்த வரிகள்...

தங்களுக்கு பிடித்தது எனக்கும் பிடித்திருக்கிறது..

பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்...
திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு


----- என் சிரிப்பை..

அருமையான படைப்பு
படிக்கும் எவரையும் நிச்ச்யம் பாதிக்கும்
பகிர்வுக்கு நன்றி
யாருக்கெல்லாமோ கால் செய்தேன்.
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.

உணவைக்கூட
இதழிலிருந்து இதழிற்கு
தடம் மாற்றினாய்.

இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?

வரிகள் அருமை! நன்றி !
"எங்கிருந்தாலும் வாழ்க!"
Marc said…
அருமை அருமை
Tamilthotil said…
எந்த வரியையாவது எடுத்துக் காட்டலாம் என்றால் எல்லா வரிகளும் வலியை சுமந்தபடியே இருக்கிறது.

மிகவும் எதார்த்தமான வரிகளாக என்னை வலிக்க மட்டுமில்லை, வருத்தப்படவும் வைத்தவை

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை.
என் வாழ்க்கையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

மிகவும் அருமை...
COOL said…
அருமையான வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி...
அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி
ஆர்வா said…
நன்றி இந்திரா... என் கவிதையை நீங்கள் அதிகம் ரசித்திருக்கிறீர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி.. இங்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
கவிதை காதலனின் கவிதை மிகவும் அருமை. காதலர் தினத்திற்கான முன்னோட்டமா... இக்கவிதை உங்கள் வலைத்தளத்தில்...?

வாழ்த்துகள் பகிர்ந்த உங்களுக்கும் எழுதிய கவிதை காதலனுக்கும்...
Anonymous said…
vali miguntha unarvu purvamana kathal varikal namakku ...!!


Kathalanukku adhu valikalaa enna......???
Admin said…
நல்ல கவிதையைத் தான் ப்கிர்ந்திருக்கிறீர்கள்..நன்றி..
இந்த காதல் கசக்குதையா...!


///நன்றி - http://kavithaikadhalan.blogspot.in/2011/02/blog-post.html///

சூடு கண்ட பூனை போலிருக்கு...!
ஹா...! ஹா...! ஹா....!
ஹேமா said…
கவிதைக் காதலனின் கவிதை எப்போதுமே காதல் ததும்பும் வார்த்தைகளோடு ரசிக்கக்கூடிய வரிகளோடு அமைந்திருக்கும்.நானும் ரசித்திருக்கிறேன்.நன்றி இந்திரா !
கவிதைக் காதலினின் கவிதை அருமை - நீளம் சற்றே அதிகம் - காதல் தோல்வியினை விவரிக்கும் விதம் நன்று. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மாலதி said…
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்..
இன்று சிலுவையில்....//அருமையான படைப்புபகிர்வுக்கு நன்றி
Avainayagan said…
"பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு" நெஞ்சைத் தொடும் வரிகள். அருமையான கவிதை
கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..
:))
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...
உணர்வு பூர்வமான கவிதை, அருமை!
Anonymous said…
மிக நல்ல கருத்துடை உணர்வு வரிகள் சகோதரி.
ரசித்தேன் நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
LIC said…
நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...
ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.

திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு

----- என் சிரிப்பை.. very nice lines...
kandeepan said…
நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை.
என் வாழ்க்கையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

மிகவும் அருமை...

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..