சிகரம் – என் பார்வையில்..
நான் இதுவரைக்கும் விமர்சனம்னு எழுதினது இல்ல. இதுவும் விமர்சனம் இல்ல. ரொம்ப நாளைக்குப் பிறகு நேத்து ராஜ் டிஜிடலில் “சிகரம்“ படம் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டுமொரு முறை பார்க்கத்தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று. எதனாலோ அது பற்றி பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு. சிகரம் - காதல், நட்பு, கணவன் மனைவி அந்நியோன்யம், நம்பிக்கை, இழப்பு, யதார்த்தம்னு எல்லாம் கலந்த கவலையா இந்தப் படத்தைச் சொல்லலாம். ரேகா, ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், நிழல்கள் ரவினு மற்ற கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் மனசுல நிக்கிறது என்னவோ, ராதா - எஸ்பிபி இந்த இருவருக்குமிடையேயான நட்பு ரீதியான காதல் தான். இதில் எனக்குப் பிடித்த காட்சிகளெனில், தான் காதலித்த பெண்ணை பல வருடங்கழித்து தனக்கான மருத்துவராக சந்தித்து, பின் நட்பு கொண்டு, பழைய நினைவுகள் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் காட்சிகள். குறிப்பா.. “நா இல்லாம நீங்க இல்ல.. நீங்க இல்லாம நா இல்லனெல்லாம் பேசினோம். ஆனா இப்ப.. நா இல்லாம நீங்க இருக்கீங்க. அது மாதரி நானும் இருக்கேன். சொல்லப்போனா இன்னும் ஹெல்த்தியாவே இருக்கேன். வெய்ட் வேற ஜாஸ்த்தியாகிட்டே போகுது..“...