Posts

அத்துணையும் அர்த்தமற்றதாய்..

Image
என் பெயர்..   எப்போதும் நினைவிருப்பதில்லை ‘ பிச்சைக்காரன் ’ என்பதைத் தவிர..! எதிர்காலம் பற்றிய ப்ரஞ்கையில்லாது பிற எச்சிலின் மிச்சத்திற்காகவே   காத்துக்கொண்டிருக்கிறேன்.. ! கள்வனாயும் கையேந்தியவனாயும் காலப்போக்கை கடத்திச்செல்கிறேன்..! புறக்கணிப்பும் பரிகாசமும் புதைகுழியாய் இழுத்துக்கொண்டிருக்க புறம்பாய் வெளித்தள்ளுகிறேன் எனக்கான இருத்தல்களை..! சமூகமெனும் சாக்கடையோரம் நீந்திக்கொண்டிருக்கும் கழிவுப்புழுவாய் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறேன். .! கடந்துசெல்கையில் சுழிக்கும் முகங்களுக்கு கடுகளவும் கவலையில்லை.. காணாமல் போன என் கனவுகள் பற்றி..! எனக்கான மறுவாழ்வென்பது   மறவாமல் நிரப்பப்படுகிறது சூன்யம் எனும் மொழிபெயர்ப்பு கொண்டு..! அத்துணையும் அர்த்தமற்றதாய் , கண்ணெட்டும் தூரத்திலோர் குழந்தையின்   பிஸ்கெட் துண்டுகள் கீழே விழக்கோறியபடி   பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன் பொறுக்குவதற்கு ஆயத்தமாய்..!! .

விநோதினி, வித்யா, நான், நீ..

Image
புதிய தலைமுறையில் நேற்று வித்யா சம்பவம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் ஆசிட் அமிலத்தை ஒரு கடையில் எவ்வளவு எளிதாக வாங்கிடலாம் என்ற கோப்புக் காட்சியும் ரகசியமாக படம் பிடித்துக் காட்டப்பட்டது. மனுஷ்யபுத்திரனின் கூற்றுப்படி, இக்காட்சியானது இரண்டுவிதமாகப் பார்க்கப்படும். எளிதாகக் கிடைக்கும் இவ்வகை அமிலத்தை தடை செய்யக்கூறும் கண்ணோட்டம் முதலாவது. மற்றொன்று, “இவ்வளவு எளிதாகக் கிடைக்குமா.. நாமும் இதையே உபயோகித்துவிட வேண்டியதுதான்“ என்ற மனநோயாளியின் கண்ணோட்டம். ஒரு சகமனுஷியை, தனக்கு கிடைக்காத ஒரு பொருளாய், அதன் மீது வன்மம் கொண்டு பழிதீர்த்துக்கொள்ளும் மனிதநேயமிக்க செயலை, ஆணாதிக்கம் என்றும் மிருகத்தனம் என்றும் ஆளாளுக்கு வசைபாடி புகழாரம் சூட்டிவிட்டு, அவரவர்தம் பணிகளில் ஆழ்ந்துவிடுவது, காலங்காலமாக நடந்தேறிக்கொண்டிருப்பது தான். ஆண் குழந்தை புத்தகம் படிப்பது போலவும், பெண் குழந்தை காய் நறுக்குவது போலவுமான படங்கள் இன்றளவும் பாடப்புத்தகத்தில் இடம்பெறத்தான் செய்கின்றன. எவ்வளவுதான் உயரவே பறந்தாலும் பெண் என்பவளுக்கான வரையறைக் கோடுகள் ஒரு வட்டத்திற்குள்ளேயே அடங்கிவிடுகின்றன.. அல்லது அடங்கவேண்...

விஸ்வரூபம் – என் பார்வையில்..

Image
படம் முழுக்க கமல்.. கமல்.. என கமல்ஹாசனின் ஆக்கிரமிப்புகள் தான். பல இடங்களில் அமைதியாக, நடிப்பில் அசத்துகிறார். ஆரம்பக்காட்சிகளில் கதக் மாஸ்டராக வரும் கமல் தான் மனதில் நிற்கிறார். குறிப்பாக நடனப்பயிற்சி முடிந்ததும் வரும் தொலைபேசியை எடுக்க, மெலிதான ஓட்டத்துடன் வரும் காட்சி.. ஸ்பெஷல் அப்ளாஸ் கமல் ஜி. கைகளைக் கட்டிப்போட்டபடி உண்மைகளை கூறுமாறு கேட்கும் தீவிரவாதியிடம், பெண்மை கலந்த கண்சிமிட்டலுடன் பதில் சொல்வது கதாப்பாத்திரத்திற்கே உரிய யதார்த்தம். இந்தப் படத்துல ஆண்ட்ரியா எதுக்குனே தெரியல. அவ்வப்போது வந்து போவது தவிர நடித்ததாய் தெரியவில்லை. பாடல்கள் சுமார் ரகம் தான். காதல் ரோஜாவே படத்துல வந்த பூஜா குமார் தானே இது? வயசே தெரியல. அவருக்கு அபிராமியின் டப்பிங் குரல் கணகச்சிதம். இருந்தாலும் தசாவதாரம் ஹீரோயினின் வாயாடித்தனம் வந்துபோகுது. வெளிநாட்டுல நடக்குற கதைங்குறதால நிறைய வேற்று மொழிகள் உலவுது. இருந்தாலும் சாமான்யனுக்கு சத்தியமா புரியுறது கஷ்டம். இத்துனூண்டா தமிழ்ல எழுத்துக்கள் போட்டாலும் தேடிப் படிக்கிறதுக்குள்ள அடுத்த காட்சி போய்டுது. அதென்னப்பா... தமிழ் சினிமாவுல வர்ற FBI மட்ட...

ஆங்கோர் காதல்..!

Image
வெகுநேரப் பேச்சிற்குப்பின் கிளம்பிச்செல்ல எத்தனிக்கிறேன்.. விரல்கள் கோர்த்தபடி விட்டகல மறுக்கிறாய்..! விருட்சமாய் வளர்ந்திருப்பினும் வேரூன்றித் துளிர் விடுகிறது ஆங்கோர் காதல்..!! .   விரல்கள் பிணைத்துக்கொள்வதைப் போல அவ்வளவு எளிதாக இருப்பதில்லை... பிணைத்த விரல்களிலிருந்து விடுவித்துச் செல்வது..!! .