உன்னுள் என் நினைவுகள்
தென்றல், மழை, வெயில், ஞாயிறு, நிலவு
காலை, மாலை - இப்படி
இயற்கை என்னைக் கடக்கும்போதெல்லாம்
நீ தான் நினைக்கப்படுகிறாய்.
நீ என்னை நினைப்பது எப்போதடி?
எதாவது இறுதி ஊர்வலம்
உன்னைக் கடக்கும்போதா?
உயிர் விடும் முன்னாவது துளிர் விடுமா?
உன்னுள் என் நினைவுகள்..??
Comments
நன்றி கொத்துபரோட்டா நண்பரே