மனிதன் எனும் மிருகம்
சில சமயங்களில் வார்த்தைகளை விட மௌனத்திற்கு அதிக வலிமை உண்டு.
அதுபோல சில நேரங்களில் எழுத்துக்களை விட புகைப்படங்கள் நம்மை அதிகமாக பாதிக்கின்றன.
இந்தப் பதிவில் உள்ள புகைப்படங்களும் அந்த வகையை சேர்ந்தவை தான்.
எட்டு வயது சிறுவன், சந்தையில் ஒரு ரொட்டித்துண்டை திருடிவிட்டான் என்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இது.
மனிதத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒரு சம்பவம் இது.
ஒரே ஆறுதல்…
நம் நாட்டில் அல்ல, இது ஈரான் நாட்டில் நடந்த அரக்கத்தனம்.
மிருகங்கள் கூட நேசிக்கும் தன்மை கொண்டவை.
மனிதன் எனும் மிருகம் எப்போது இதை கற்றுக்கொள்ளப் போகிறான்?
இந்த புகைப்படங்கள் பாதிக்காத மனிதன் இருக்க முடியாது. உங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது தானே?
Comments
WHAT???????????? WHY?????????????//
எனக்கும் அதே அதிர்ச்சி தான் சித்ரா.
//ஜெய்லானி said...
ச்சே..என்ன கொடுமை இது. இதை வேடிக்கை பாத்தவனை முதல்ல உதைக்கனும் .//
உங்கள் கோபம் நியாயமானது ஜெய்லானி.
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி//
பெற்றுகொண்டேன். ஜெய்லானிக்கு என் நன்றிகள்.
அடக்கடவுளே....என்னங்க இது...ச்சே...மிருகத்தை விட மோசமானவர்கள்....//
மிருகங்கள் கூட நேசிக்கும் தன்மை கொண்டது. இவர்களை அதோடு ஒப்பிட கூட முடியாது hanif .
//பிரவின்குமார் said...
மிக கொடிய அரக்கர்களை விட மோசமானமர்களை நினைக்கும் போது மனித இனத்தையே வெறுக்கும் நிலைக்கு தள்ளுப்படுகிறோம். வருந்துவதற்குரியது. மனிதம் இறந்துவிட்டது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பகிர்வுக்கு நன்றி.!//
உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது பிரவீன். கருத்துக்கு நன்றி.
//யாதவன் said...
வாழ்த்துக்கள்//
நன்றி யாதவன்.
இதுதான் - தங்கள்
இந்த
இடுகையின் தலைப்பு....
தவறு...! என்பது என் வாதம்....
மனிதர்க்குள்...
'மனிதன்' என்ற பெயர் மட்டுமே எச்சமாய் உள்ளது...
மனிதனுள் இருந்த "மனிதம்" மறைந்துபோய் நீண்டநாட்கள் ஆகிறது...
இந்த படங்களை கண்டு...
இரக்கப்படாதவன்...
இறந்தவனுக்குச் சமம்...
இதைத்தான்... - என்
"மனதில் மலர்ந்தவை" எனும் கவிச் சேகரிப்பில்....
"மனிதம்" எனும் தலைப்பிலிருந்து சில வரிகள்....
"அன்பும்
பாசமும்
மனிதமும்
மாண்பும்
மனிதாபிமானமும்
மனிதநேயமும்
மரித்துப்போய்...".....என்றும்;
'மனிதம்
மறைந்துவிட்டதா..? - இல்லை
மரித்துவிட்டதா..?" .......என்றும்
"புரையோடிய
புற்றுநோய் கண்டு
புதைந்துவிட்டதா...?
மனிதாபிமானமும்.....
மனித நேயமும்...." .............என்றும்
"எங்கு
திரும்பினாலும்
அலையும் நாயாய்....
நயவஞ்சக நரியாய்...
அபகரிக்கும் வன்புலியாய்....
பிணம் தின்னும் கழுகாய்...
இருட்டில் உலவும் பேயாய்...
மிருக குணங்களுடன் 'மனிதன்'."... என்றும்
இயற்கையை எதிர்த்து...
செயற்கையாய்..
மனிதாபிமானமும்
மனிதநேயமும்
மறந்த -
மனதளவில்
மரித்துப்போன.......
மூளைச் செயலிழந்த
மனிதனாகிவிட்டான் இன்றைக்கு..... என்றும் வடித்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..
இறுதியாய்...
தங்களில் இந்த படங்களும்... வரிகளும்....
எனது தூக்கத்தை சிலநாட்கள் துரத்தும்....
நட்புடன் ...
காஞ்சி முரளி....
எதையுமே நிதானமாக தெளிவாக அலசிப்பார்க்கும் தன்மை கொண்டவரோ.!!
இப்படி ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.
எனக்கும் அங்கீகாரம் கிடைக்கிறது எனும்போது
அதை விட மகிழ்ச்சி வேறில்லை.
உங்கள் வெளிப்படையான கருத்துக்களுக்கு
நன்றி காஞ்சி முரளி.