வயிற்றினுள் ஒரு இதயம்



உருவானது உறுதியானதும்
துவங்கிவிட்டது..
உன்மீதான என் கற்பனைகள்.
உடலைக் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி
உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்
அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

உனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை
விரிவடைந்தது எனது சிந்தனைகள்..
உன் ஒவ்வொரு அசைவினையும்
அனுபவிக்க ஆயத்தமானேன்..
உணவு முதல் உறக்கம் வரை
உனக்கேற்றதைப் பழகிக்கொண்டேன்.
உனக்கான பொருட்களை சேகரிப்பதே
என் முழு வேலையாகிப் போனது..
இனிய இசையும் எனது உரையாடல்களையும்
எப்போதும் உனக்குப் பரிசளித்தேன்.

கால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி
- பாட்டி சொன்னாள்
சூடு தணிக்க விளக்கெண்ணை தடவு
- அம்மா சொன்னாள்
குடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்
- அக்கா சொன்னாள்
குனிந்து நிமிர வீட்டுப்பணி செய்
- அத்தை சொன்னாள்
இவற்றோடு நடை பயிற்சியும் செய்
- தோழி சொன்னாள்
மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு
- இது மருத்துவர்
அனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..
குமட்டல்களும் மயக்கங்களும்
சகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.

நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.

இருந்த இடம் சலித்துவிட்டது போல..
நீ முண்டத் தொடங்கினாய்..
கொஞ்சம் கொஞ்சமாக
முதுகுத்தண்டில் ஆரம்பித்த வலி
உடல் நரம்புகளைத் தொற்றியது..
வலிகளைப் பொறுத்துக்கொண்டேன்..
அது உனக்கான வழி என்பதால்.

ஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..
இருவருமே அவதிப்பட்டோம்..
உனது பிஞ்சுக் கன்னங்களில்

என் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..
என்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்
எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.

அரைநாள் அவதிக்குப்பின்
அது என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
அப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..
என் சந்தோசங்களும் தான்.

Comments

//அரைநாள் அவதிக்குப்பின்
அது என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
//

kavithai valikkirathunga.

niraiya annaikal anupaviththa unmai. ungal kavi varikalil.

nalla irukkunnu solla mutiyaamal manasu vazhikkirathu.
//உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்
அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன்.//

வலியான சுகம் வார்த்தைகளில் விளையாடுகிறது

கடைசி வரிகளில் ஏக்கம் ஏமாற்றமாக மாறியதில் வருத்தம்
//சே. குமார்...
kavithai valikkirathunga.
niraiya annaikal anupaviththa unmai. ungal kavi varikalil.
nalla irukkunnu solla mutiyaamal manasu vazhikkirathu.//

கருத்துக்கு நன்றி குமார்.


//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

arumaiyaana கவிதை//

நன்றி ரமேஷ்.

//ஜில்தண்ணி - யோகேஷ் said...

வலியான சுகம் வார்த்தைகளில் விளையாடுகிறது
கடைசி வரிகளில் ஏக்கம் ஏமாற்றமாக மாறியதில் வருத்தம்//

நன்றி யோகேஷ்..
நிமிடங்களில் கடந்து செல்லும் வலிகளை வார்த்தைகளில் கசியவிட்ட விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி
Chitra said…
////அரைநாள் அவதிக்குப்பின்
அது என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
அப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..
என் சந்தோசங்களும் தான்./////


....அப்படி ஒரு படத்தையும் போட்டு விட்டு, அருமையாக அந்த உணர்வுகளை கவிதையில் சொல்லி விட்டு, கடைசியில், எங்கள் இதயத்தில் ஒரு "உதை" விட்ட மாதிரி ஒரு வலி. ம்ம்ம்ம்.....
// பனித்துளி சங்கர்..

நிமிடங்களில் கடந்து செல்லும் வலிகளை வார்த்தைகளில் கசியவிட்ட விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி//

உங்கள் ரசனைக்கு நன்றி சங்கர்.
//நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.//

உண்மையான கவிதை.

வாழ்த்துக்கள்.
ஒரு வலியை மனசு மேல ஏற்றி வெச்சிட்டீங்க... உணர்வு பூர்வமான கவிதை.. அருமை
உலகத்திலே ரொம்ப கஷ்ட்டமான விசயங்க
//மஞ்சள் நிலா said...

நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.
உண்மையான கவிதை.
வாழ்த்துக்கள்.//

நிலாவின் ரசனைக்கு என் நன்றிகள்..


//கவிதை காதலன்..

ஒரு வலியை மனசு மேல ஏற்றி வெச்சிட்டீங்க... உணர்வு பூர்வமான கவிதை.. அருமை//

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கருத்து சொல்லியிருக்கும் உங்களுக்கு என் நன்றி நண்பரே..


// மங்குனி அமைச்சர் said...

உலகத்திலே ரொம்ப கஷ்ட்டமான விசயங்க//

உண்மை தான் அமைச்சரே..
படிக்கும் போதே கஷ்டமா இருக்கு
HariShankar said…
கடைசி நாலு வரிகள் படிக்கும் வரைக்கும் ஒரு வித்யாசமான மனநிலை / கற்பனை ... ஆனா கடைசீல சொன்ன 4 வரிகள்ளே
// அப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..
என் சந்தோசங்களும் தான். //

காணாமல் போனது எங்கள் சந்தோசங்களும் தான் :-(

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்